Friday, July 12, 2019

நீரில் நெசவு செய்த நிகரில்லாதப் நீலப்போர்வை - SAVE RIVERS POEMS BY GNANASURIA BAHAVAN



நீரில் நெசவு செய்த
நிகரில்லாதப் 
நீலப்போர்வை

கவியரங்கக் கவிதை

தே.ஞானசூரிய பகவான்


8888888888888888888888888

இந்த கவியரங்கிற்கு கவிஞர்களுக்கு 
எனது பணிவான வணக்கங்கள். 
ஒரு வேண்டுகோளுடன் இந்தக் கவியரங்கின் 
தொடக்கக் கவிதையை உங்கள் 
முன் படைக்கிறேன். அன்புகூர்ந்து 
எனை தலைவரே என்று அழைக்க 
வேண்டாம். நெறியாளரே என்று 
அழைப்பதில் எனக்கு ஆடசேபனை 
இல்லை என பணிவுடன் 
தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

888888888888888888888888888888888

நூறுஆண்டுகள்
நீர்ஓடமறந்த
ஆறு மணல்ஆறுகளை
அடுத்தடுத்து ஓடவைத்த
தண்ணீர்மனிதர் ராஜேந்தர்சிங்
வர்களை வணங்குகிறேன்.


இந்தியாவின்
பாலைவன மாநிலம்
ராஜஸ்தானத்தில்;
ஆறுகளின் கரைகளில்
அடுக்கடுக்காய் குளங்களை
வெட்டியே அடுத்தடுத்து
ஆறு ஆறுகளை
ஓடவைத்திருக்கும்
தண்ணீர் மனிதாராஜேந்தர்சிங்
அவாகளுக்கு இந்த
கவியரங்கை சமர்ப்பிக்கிறேன்.

888888888888888888888888888888888888

  
தண்ணீர் தாயே
உன்னை வாழ்த்தி வணங்கத்தான்
இந்த ஆறுகளைப்போற்றும; கவியரங்கம்.

குடிக்க நீரில்லை
குளிக்க நீரில்லை
சமைக்க நீரில்லை

நீர் நீண்ட ஆறுகளில் இல்லை
நீர் அகன்ற ஏரிகளில் இல்லை
நீர் குறுகிய குளம் குட்டைகளில் இல்லை
அதனால்தான்
எங்கள் கண்களில்
குடியேறிவிட்டாய் நீர்
கண்ணீராக..

நிலங்களுக்கு
பாய்ச்ச நீரில்லை

தொழிற்சாலை
பாய்லர்களில்
காய்ச்ச நீரில்லை

நகரத்து அப்பார்ட்மென்ட்களில்
வாரம் ஒரு நாள்தான் உன்னை
தரிசிக்கமுடிகிறது என்கிறார்கள்.


கேப் டவுனின் டேசீரொ


ஆப்ரிக்காவின் கேப் டவுனில்
டேசீரொ என்று சொல்லி
உலகின் முதல் தண்ணீ இல்லா
நகரம் எனும் முத்திரை பதித்துள்ளாய்.
எங்கள் தமிழ் நாட்டிலும்
டேசீரோ எனச்சொல்லி
டேரா போட்டுவிடக்கூடாது
என்பதற்காகத்தான்
இந்த கவியரங்கம்.

நீமனம் குளிர்ந்தால்
மழை அருளுவாய்
எனத் தெரியும்
அதனால்தான்
உன் அவதாரமான ஆறுகளுக்கு - இங்கு
பத்து கவிஞர்களின்
கவிமழையை
கவின்மிகு மழையாய் பொழிந்து
காணிக்கை ஆக்க
ஆவன செய்துள்ளோம்.


அய்யன் தந்த அதிகாரம்

உன்னை வெற்று
ஆறாக பார்க்கவில்லை நாங்கள்
வணங்கும் தெய்வத்திலிருந்து
வேறாகப் பார்க்கவில்லை.

உன்னை வெற்று
ஆறாகப் பார்க்கவில்லை
இந்த அகிலத்தின்
ஆணிவேராகப் பார்க்கிறோம்
இந்த பூவுலகிற்கு திருமகள்
வழங்கும் சீராகப் பார்க்கிறோம்.

எங்கள் தமிழ் தாத்தா
அய்யன் திருவள்ளுவன்
உனக்கு இரண்டாவது
அதிகாரம் வழங்கினாலும்
முதல் அதிகாரத்தின் நீட்சிதான் அது
வான்சிறப்பு

அவதாரங்கள்

அதனால்தான்
நாங்கள் தெய்வத்திலிருந்து
உன்னை வேறாகப் பார்க்கவில்லை.

தெய்வங்களுக்கும் அவதாரங்கள் உண்டு.
உனக்கும் அவதாரங்கள் உண்டு


வெயிலோடு கைகுலுக்க

வெயிலோடும் வெப்பத்தோடும்
கை குலுக்கும்போது
நீ எடுக்கும் அவதாரம்
நீராவி அவதாரம் - முதல் அவதாரம்

நீர்ப்பறவை

இதுதான்
சுலபமாய் காட்சிப்பொருளாகும்
சூட்சும அவதாரம்
ஈரச்சிறகின் பாரத்துடன்
பார்முழுக்க பஞ்சுப்பொதியாய்
பறந்துதிரிந்து
கார்காலம்வரை ஆகாயத்தில்
கூடுகட்டும் நீர்ப்பறவை
ஊருக்கும் உலகுக்கும்
நீர்சேர்த்து சீர்சேர்க்கும்
மேக அவதாரம் - இரண்டாம் அவதாரம்


ராட்சசப்போர்வை

கடல் சமுத்திரம் என்னும்
பெருங்கடல்
வெதுவெதுப்புக்காகவும்
கதகதப்புக்காகவும்
இந்த பூமி போர்த்தியிருக்கும்
ராட்சசப் நீர்ப்போர்வை நீ

நூலில் அல்ல
நீரில் நெசவு செய்த
நிகரில்லாதப் நீலப்போர்வை
நிலப்போர்வையும் நீதான்
கடல் சமுத்திர அவதாரம் - மூன்றாவது அவதாரம்


அசைந்தால் ஒரு அவதாரம்

உனது அசைவுகள்
ஒவ்வொன்றும்கூட
ஒரு அவதாரத்தை உருவாக்குகின்றன
எப்படி தெரியுமா ?

தண்ணீர் தாயே நீ
நின்றால் ஒரு அவதாரம்
நடந்தால் மறு அவதாரம்
ஓடினால் இன்னொரு அவதாரம்

அருவி
மலை முகட்டிலிருந்து
மலைக்காமல் குதித்தால் நீ அருவி அவதாரம் - நான்காவது அதிகாரம்

அருவியாய் விழுந்து வழிந்து
ஒல்லியாய் ஒடிசலாய்
சில்லரைக் கற்களை
உருட்டிஓடினால்
நீ ஓடை அவதாரம் - ஐந்தாவது அதிகாரம்


ஆறில் ஒருபங்கை அள்ளிப்போவாய்

ஓடைகளாய் ஒன்று சேர்ந்து
அகன்று நீண்டு ஆழமாய்
ஆரவாரமாய் ஓடினால் நீ ஆறு
உனது ஆறாவது அவதாரம்.
நீ ஆறு அவதாரம் - ஆறாவது அதிகாரம்

தண்ணீர் தாயே
உனக்குத் தெரியுமா ?
பெய்யும் மழையில்
ஆறில் ஒருபங்கை மடடுமே - நீ
அள்ளிச் செல்வதால்தான்
உனதுபெயர் ஆறு என்று
சொல்லுகிறார்களே
அறிவியல் விஞ்ஞானிகள்
உண்மையா சொல்..

குட்டை

சிலமணி நேரம் நின்றால்;
நீ ஒரு குட்டை.
குட்டை அவதாரம் - ஏழாவது அவதாரம்

குளம்

சிலமாதம் நின்றால்;
நீ ஒரு குளம்.
குளம் அவதாரம் - எட்டாவது அவதாரம்

ஏரி

பலமாதம் நின்றால்
நீ ஒரு ஏரி.
ஏரி அவதாரம் ஒன்பதாவது அவதாரம்


ரேஷன்கடை

அட்டை இல்லாமலே
அனைத்து மக்களுக்கும்
தண்ணீர் அளக்கும்
ரேஷன்கடை அவதாரம் மழை.
மழை அவதாரம் பத்தாவது அவதாரம்




இறக்குமதி

வானத்து மேகங்களை
பூமியில் பதிவிறக்கம் செய்யும்
இறக்குமதி அவதாரம் மழை.
மழை அவதாரம்  பதினோராவது அவதாரம்


கூட்டுப்புழு

கூடுதலாக குளிர் அடித்தால்
தண்ணீர் எடுக்கும்
கூட்டுப்புழு அவதாரம்
பனிக்கட்டி.
பனிக்கட்டி அவதாரம் - பன்னிரண்டாவது அவதாரம்



வாமன அவதாரம்

ஈரம் சுரக்கும் மேகம்
ஈரம்மறந்து
இறங்கவும் மறந்து
பரிமாணம் பலமடங்காய்
கூனிக்குறுகி எடுக்கும்
வாமன அவதாரம் பஞ்சம்.
பஞ்ச அவதாரம் - பதின்மூன்றாவது அவதாரம்


விஸ்வரூப அவதாரம்

மூர்க்கமான காற்றுடன்
கூடா நட்புகொணடு
நீ எடுக்கும்
விஸ்வரூப அவதாரம்
பதினான்காவது அவதாரம்





வள்ளுவத்தின் ஈரமான குரல்

தண்ணீரே நீ தடம்பதித்தால் நடப்பதும்
தடம்பதிக்க மறந்தாலும்
என்ன நடக்கும் ?
சொல்லுகிறார்
என் ஐயன் திருவள்ளுவர்

தண்ணீர் தடம் பதித்தால்
மரணம் தராத அமுதம் வார்க்கும்
பசிநீக்கும் தாகமும் தீர்க்கும்

அது தடம் பதிக்க மறுத்தால்
அல்லது மறந்தால்

திரும்பிவராத உயிர் போக்கும்
திருப்திபடாத ஊரும் உலகும்
ஏர் மறக்கும்

பசும்புல்லும்தன் கிரீடம்;துறக்கும்
கடலின் பெருஉடலும் உருசிறுக்கும்
குடமுழுக்கும் கும்பாபிஷேகமும்கூட
தடம்தப்பிப் போகும்
தடுமாறிப் போகும்


தானம் தவம் செய்வோர்கூட
வானத்தை கைகாட்டி
கேளாச் செவியராய்
மீளாத் துயர் உற்றவராய்
மீளவழி தெரியாத வராய்
வானம்பார்த்த பூமியாய்
வாளாய் இருப்பர்.;

இவை அனைத்தும்
அய்யன் திருவள்ளுவன்
அய்யிரண்டு குறளாய்
வான்சிறப்பில் சொன்ன
நீர் சிறப்பைத்தான்
என் சொந்த வரிகளில்
மலிவுப் பதிப்பாய் உங்களுக்கு
மாந்தத் தந்திருக்கிறேன்.

குரல்நீட்டிப் பேசுவதும்
விரல்நீட்டி குற்றப்பத்திரிக்கை
வாசிப்பதும்
இந்த கவிஅரங்கின்
நோக்கம் அல்ல.


ஊர்கூடி தேர்இழுக்கலாம் வாங்க

ஓடுநீர் கொள்ளும்
ஆறு முதற்கொண்டு
சிறுநீர் கொள்ளும் குட்டைவரை
முப்பத்து ஒன்தாயிரம் ஏரிகள் குளங்கள்
முப்பத்திமூன்று ஆறுகள்
இரண்டு லட்சம் ஓடைகள் என
வேறுவேறு பெயர்களில்
நீர் மறந்துபோன
நீர்ஆதாரங்களை
சீர்செய்து சிறப்புசெய்து
உழும் தொழிலுக்கும்
உழா தொழிலுக்கும் உதவ
ஊர்கூடி தேர்இழுக்கலாம் வாங்க என
ஊரக்கக் கூவியழைப்பதுதான்
இந்த கவியரங்கத்தின் இலக்கு


இங்கு

காவிரி தென்பெண்ணை
பாலாறு தமிழ் கண்டதோர்
வையைப் பொருனைநதி
அமராவதி கொற்றலையாறு

இல்லை தண்ணீர்என
கைவிரிக்கும் காவிரி பாலாறு
முல்லைப்பெரியாறு

கைவைத்து அள்ளிகுடிக்கக்கூட
தண்ணீர் தராத வைகை


சங்கத்தமிழ் பொருனை என
அழைத்த தாமிரபரணி

ஆன்பொருனை என அழைத்த
அமராவதி

கொற்றலையாறு கூவம்
ஆரணியாறு செய்யாறு
என சில ஆறுகளை மட்டும்
பல கவிஞர்கள்
போற்றிப்
பாடுகிறார்கள்.


அவர்களை அழைப்போம்
அவர் தரும் கவிதை கேட்போம்.

மூமூமூமூமூமூமூமூமூமூமூமூமூமூமூமூமூமூமூ

No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...