Monday, July 15, 2019

உழும் தொழிலுக்கும் உழா தொழிலுக்கும் உதவ ஊர்கூடி தேர் இழுக்கலாம் - LET US JOIN HANDS TO SAVE RIVERS - POEM



உழும் தொழிலுக்கும்
உழா தொழிலுக்கும் உதவ
ஊர்கூடி தேர்இழுக்கலாம் 

LET US JOIN HANDS

TO SAVE OUR RIVERS

தே. ஞான சூரிய பகவான்

வரப்புயர நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
நெல் உயர குடி உயரும்
குடி உயர கோல் உயரும்னு
சொன்ன பூமி இது

மண்ணுல தண்ணிகெடைக்க
வசதிபண்ணி குடுத்தா மக்கள்
கிண்ணியில சோறுகுறையாது
சொகம்குறையாது
வாழ்க்கையில வசதிகுறையாது
அந்த அரசாங்கத்துக் கொடியை
எந்தக்கொம்பனாலும்
அசைக்கமுடியாது
சரிக்க முடியாது சாய்க்க முடியாது
எப்பவும் பறக்கும்னு
ஆத்தா அவ்வையார் சொன்ன
பூமி இது

ஓடுநீர் கொள்ளும்
ஆறு முதற்கொண்டு
சிறுநீர் கொள்ளும்
குளம்குட்டைவரை
முப்பத்து ஒன்பதாயிரம்
ஏரிகள் குளங்கள்
முப்பத்திமூன்று ஆறுகள்
ஆற்றுப்படுகைகள்
இரண்டு லட்சம் ஓடைகள் என
வேறுவேறு பெயர்களில்
நீர் மறந்துபோன
நீர்ஆதாரங்களை
நீர் அவதாரங்களை
சீர்செய்து சிறப்புசெய்து
உழும் தொழிலுக்கும்
உழா தொழிலுக்கும் உதவ
ஊர்கூடி தேர்இழுக்கலாம் வாங்க என
உரக்கக் கூவியழைப்பதுதான்
இந்த கவியரங்கத்தின் நோக்கம்
எனச்சொல்லி



ஆறுகள் போற்றுவோம்
எனும் தலைப்பில்
அற்புதமான கவிதைகளை
அழகு தமிழில்
பழகு தமிழில்
கவிதைகள் தந்த
பதினோரு கவிஞர் பெருமக்களுக்கும்
இதற்கு ஆக்கமும் ஊக்கமும்
தந்த அனைவர்க்கும்
நன்றி பல நூறுசொல்லி
விடைபெறுகிறேன் வணக்கம்.













No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...