Sunday, July 28, 2019

BIRTHDAY WISHES TO DR.RAMDOSS - மருத்துவர் ராமதாஸ் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து


OTHERS - கதம்பம்

25.07.2019

மருத்துவர் ராமதாஸ் அவர்களுக்கு
பிறந்தநாள் வாழ்த்து


இன்று பிறந்தநாள் காணும் பாட்டாளி கட்சி தலைவர் மற்றும் மக்கள்தொலைக்காட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

எண்பது ஆண்டுகளை
எட்டிப்பிடிதிருக்கும்
அய்யா ராமதாஸ் அவர்களே
உங்களை வாழ்த்த வயதில்லை
வணங்குகிறோம் !

உங்களோடு மருத்துவம்
படித்தவர்களில்
சிலர் மருத்துவம் படித்து
மருத்துவம் பார்த்தார்கள்
சிலர் மருத்துவம் படித்து
கனத்த காசு பார்த்தார்கள்
சிலர் மருத்துவம் படித்து
அதிலேயே
அரசியல் பார்த்தார்கள்
ஆனால் நீ மட்டும்தான்
மருத்துவம் படித்துவிட்டு
அடித்தட்டு மக்களை
மனதில் வைத்து
அரசியல் மார்பில்
ஸ்டெத்தாஸ்கோப் வைத்து
அற்புத சிகிச்சை தந்தாய்
அதனால்தான் இன்றும் நீ
அழைக்கப்படுகிறாய்
மருத்துவர் ராமதாஸ் என்று.

எண்பது ஆண்டுகளை
எட்டிப்பிடிதிருக்கும்
ஏழைப்பங்காளனே
அய்யா ராமதாஸ் அவர்களே
உன்னை வாழ்த்த வயதில்லை
அதனால் வணங்குகிறோம் !

நஞ்சைபுஞ்சை வயக்காடுகளிலும்
நகரத்துத் தொழிற்கூடங்களிலும்
உற்பத்திக்காக உதிரம் சிந்தி
உரமாகும் பாட்டாளி மக்களுக்கு
நீ சொத்து
  
உவரிக்காற்றில் உப்புவாரி வீசும்
வங்கக்கடலோர கிராமம்
கீழ்சிவிறியில் 1939 ல்
விளைந்தநீ அதிசயமுத்து.

20 சத அமுதத்தை அள்ளிஎடுக்க
அரசியல் பாற்கடலைக் கடைவதற்காக
சாலை மறியல்
1987 ல் நீஎடுத்த அதிரடிமத்து

கிராமப்புற மக்களின்
வளத்திற்காக நலத்திற்காக
அரசியல் நிலத்தில்
நீ விதைத்த அரியதோர்வித்து.
பாட்டாளி மக்கள்கட்சி


அவர்களின் விடியலுக்காக
விடாமல் கூவும்
நீஒரு விச்சித்திர பட்சி

அன்னைசொல்லை
ஆணையாய்க் கொண்டு
அரியணையும் அரியநல் முடியும் துறந்த
அயோத்தி ராமனின் கட்சிநீ

ஏன்தெரியுமா ?
பாட்டாளிமக்களின்
கூட்டாளி ஆவதற்காய்
மருத்துவர் என்னும்
கிரீடம் துறந்துநீ
தொடங்கியதோ
பட்டாளி மக்கள்கட்சி

பிற்படுத்தப்பட்டோருக்கு
பெற்றுத்தந்தாய்
இருபது சதம் ஒதுக்கீடு
இருக்கிறதா ஏதேனும்
அதற்கு ஈடு ?


விவசாய மக்கள்
விடியலுக்கு விரைந்துசெல்ல
2006 ல் தொடங்கினாய்
மக்கள்தொலைக்காட்சியின்
மலரும்பூமி

அனுதினமும் அறுபது நிமிடம்
நிகழ்ச்சிகள் அறுவடையை
விவசாயிகளுக்காக
அருளும் சாமி அந்த
மலரும்பூமி


முதியோரைக்கூட முறுக்கேற்றும் பணியில்
முழுக்கவனம் செலுத்தி
காசுபணம் எண்ணி கணக்குப் பார்க்கும்
தொலைக்காட்சிகள் ஊடாக..

உழவர்தம்; நிலைமாற்றி
உழவுக்குவளம் சேர்க்க
மூவாயிரம்முறை முத்து குளித்திருக்கும்
மக்கள் தொலைக்காட்சியின் மலரும்பூமியை
வளரும் பூமியாய் தந்திருக்கும்
தந்தையே தமிழ்ச்சிந்தையே நீங்கள்
நூறாண்டு வாழ்க இந்தப்பாராண்டுஎன
வாழ்த்தி வணங்குகிறோம்.

மலரும் பூமியின் நிகழ்ச்சிகளின் வெற்றிக்கு
வேராக நீராக இருக்கும் உங்;களுக்கும்
உங்களுக்கு உறுதுணையாக
உற்ற தூணாக இருக்கும்
வேளாண்மை நிபுண நிர்வாகிகளுக்கும்
ஒளிப்பதிவார்கள் ஒலிப்பதிவாளர்கள் 
பொறியாளர்கள் இதர பொறுப்பாளர்கள்
அய்யாவின் பிறந்தநாளில்
அனைவருக்கும் எங்கள் பாராட்டுக்கள்.


இது உழவர்களின் மலரும் பூமி.

உழுதொழிலோடு உழுங்குடியும்
வளர்க்கும் இந்த மலரும் பூமி.

பாங்கான நீர்வளம் நிலவளம்
போற்றும் இந்த மலரும் பூமி.

நீங்காத இயற்கை விவசாயம் 
கூட்டும் இந்த மலரும் பூமி.


ஓங்காத ஏர்வளம் ஊர்வளம்
சிறக்கவழி காட்டும்
இந்த மலரும் பூமி எனச்சொல்;லி

தமிழக விவசாயிகள்
சார்பிலும் நான் சார்ந்திருக்கும் தெக்குப்பட்டு
பூமி இயற்கைவள பாதுகாப்பு பயிற்சி மையத்தின்
சார்பிலும்
எண்பது ஆண்டுகளை
எட்டிப்பிடிதிருக்கும்
அய்யா ராமதாஸ் அவர்களே
உங்களை வாழ்த்த வயதில்லை
வணங்குகிறோம் !


தே.ஞானசூரியபகவான்
இயக்குநர் மற்றும் தலைவர்
பூமி இயற்கைவள பாதுகாப்பு இயக்கம்
தெக்குப்பட்டு வேலூர் மாவட்டம்.















No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...