நீர் காப்போம் ஊர் காப்போம்
தண்ணீர்
தன்னிறைவை
சாதித்த
தண்ணீர் மனிதர்
ராஜேந்திர சிங்
WATER SELF RELIANCE
AND
RAJENDARSINGH
88888888888888
(பாலைவன மாநிலம் ராஜஸ்தான் ஆயிரத்துக்கும் மேற்பட்ட
கிராமங்களில் தண்ணீர் தன்னிறைவை சாதித்துக்காட்டி நூறு ஆண்டுகளாக நீரோட்டத்தை நிறுத்திக் கொண்ட ஆறு ஆறுகளை ஜீவநதிகளாக மாற்றி அங்கு வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திய தண்ணீர் மனிதர் ராஜேந்திர சிங் அவர்களுக்கு இந்த கட்டுரைத் தொடரை சமர்ப்பிக்கிறேன் - பூமி ஞான சூரியன்)
தண்ணீர் மனிதர் ராஜேந்திர சிங் – இவரை உலகத்தில் எல்லோருக்கும் தெரியும்.
ராஜஸ்தான் பாலைவன மாநிலம் என்பதும் எல்லோருக்கும் தெரியும். மணல் மட்டுமே ஓடிக்கொண்டிருந்த ஆறு பாலைவன ஆறுகளில் மீண்டும் நீரோட வைத்திருக்கிறார் இந்த
அதிசய மனிதர் ராஜேந்திர சிங். வறண்டு போன ஐந்தாயிரம் கிராமங்கள் தற்போது மறந்துபோன
தண்ணீரை கொண்டாடி
கொண்டிருக்கிறார்கள்.
மறு உயிர் பெற்றஆறுகள் அந்த கிராமங்களில் வாழ்வாதாரத்தை மீட்டுத்
தந்துள்ளன.
அவர் நிகழ்த்தியுள்ள சாதனைகளுக்காக ஸ்டாக்ஹோம் நகரின் தண்ணீருக்கான நோபல் பரிசு இவரை தேடி வந்துள்ளது.
நான்காயிரத்து முன்னூறு தடுப்பு அணைகளை கட்டி ஆயிரத்து இருநூறு ஊர்களை
தண்ணீர் தன்னிறைவு கிராமங்களாக மாற்றியுள்ளார்.
ஆண்டுதோரும் அதிகரித்த நிலத்தடி நீர்மட்டம் பார்த்து ஆர்வார் மாவட்ட்த்து மக்கள்
நிம்மதி பெருமூச்சு விடுகிறார்கள்.
பூமிக்கு அடியில் மழைநீரை சேமிக்கும் பணியை
அவர் தனிமனிதராகத் தொடங்கி
இன்று பல லட்சம் இளைஞர்களைக் கொண்ட இயக்கமாக மாற்றியுள்ளார்.
தண்ணீர் மனிதர் என உலகம் முழுவதும் அழைக்கப்படும். ராஜேந்திர சிங் ஆங்கில இலக்கியமும் ஆயுர்வேத மருத்துவமும் படித்த முதுகலை
பட்டதாரி.
உத்தரப்பிரதேசத்தில் ஒரு பெரிய
விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர் அவர். ஒரு சமயம் அவர் தற்செயலாக ஒரு ராஜஸ்தான் கிராமத்தை
பார்வையிட்டார்.
நீர் இல்லாமல் வறண்டு
கிடந்த அந்தக் கிராமமும் அந்த மக்களும்தான் ராஜேந்திர சிங் என்னும் ஆயுர்வேத மருத்துவரை தண்ணீர் மனிதராக மாற்றியது.
தரைக்கு அடியில் தண்ணீர் சேமிக்கும் சேவையை
ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் என்று கேட்டால்,
அதற்கு என் ஆங்கில ஆசிரியருக்குத்தான் நான் நன்றி சொல்லவேண்டும்’
என்கிறார்.
‘எனக்கு அவர் ஆங்கிலம் மட்டும் சொல்லித் தரவில்லை மக்களையும் அவர்களின் வாழ்க்கையையும்
எனக்கு சொல்லித் தந்தார்’ என்று கண் கலங்குகிறார்.
யார் தன்னை பாராட்டினாலும் தனது ஆங்கில ஆசிரியருக்கு நன்றி சொல்லுகிறார்
ராஜேந்திர சிங்.
நிறுவனங்கள் பலவற்றில் வேலை பார்த்தாலும் எல்லாமே அடிமை வேலைகளாகவே இருந்தன.
தன்னிச்சையாக செயல்படவும் முடியவில்லை யாருக்கும் உதவவும் முடியவில்லை.
சோற்றுக்கும் துணிக்குமா நீ வேலை பார்க்கிறாய் ? வேலை செய்ய வேண்டிய
அவசியம் உனக்கு ,ல்லையே. வேலயை உதறிவிட்டு உருப்படியாய்
எதயாவது செய்’ என்று சொன்னது அவர் மனசாட்சி.
வேலையை வேலைகளை உதறிவிட்டு தண்ணீர் பற்றிய அடிப்படை அறிவை
அடித்தட்டு மக்களுக்கு போதித்தார் அதனைப் புரிந்து கொண்ட மக்களும் அவர் சொல்படி, இயங்கி தண்ணீர் சேமிப்பை ஒரு
பேரியக்கமாக மாற்றிக் காட்டினார்கள்.
No comments:
Post a Comment