CAPE TOWN SOUTH AFRICA |
நம்புங்கள், சென்னைக்கு இந்த ‘டே ஜீரோ நிலைமை’ வராது. நாம் இதுபற்றி பயப்படவேண்டாம். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தாமதமில்லாமல் இருந்திருந்தால் இந்த பிரச்சினக்கே
இடம் இருந்திருக்காது. மக்கள்தொடர்பு சாதனங்கள் தண்ணீர் பிரச்சினைக்கு
முக்கியத்துவம் அளிக்கின்றன. அரசு மற்றும் அரசியல் கட்சிகளும்
இதனை முக்கியமான பிரச்கினையாக, அதனை தீர்ப்பதற்கான முயற்சிகள்
மேற்கொள்ளுவதை பார்க்க முடிகின்றது. எல்லாவற்றிற்கும் மேலாக தமிழ்நாட்டின்
இளைஞர்கள் அணிஅணியாக ஏரிகள், குளங்கள், குட்டைகள் போன்ற நீராதாரங்களை ஆழப்படுதுதல் அகலப்படுத்துதல் கரைகளை பலப்படுத்துதல்,
கரைகளில் மரக்கன்றுகளை நடுதல், கிராமங்களில் பசுமைப்போர்வையை
உருவாக்குதல் போன்ற காரியங்களில் நூற்றுக்கணக்கான குழுக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக
தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அதனால்தான் சொல்லுகிறேன்,
தமிழ்நாட்டின் பக்கம் ‘டே ஜீரோ’ என்னும் தண்ணீர் பஞ்சம் தலைகாட்டாது.
தண்ணீர் தன்னிறைவு நெடும்பயணம் - கட்டுரைத்தொடர்
டே ஜீரோ பருவகால மாற்றத்தின் குரூரமான முகம்
DAY-ZERO CRUEL FACE OFCLIMATE CHANGE
பூமி ஞானசூரியன்
88888888888888888888888888888888888888888888888888
கேப்டவுன் ஆப்பிரிக்காவின்
மிக முக்கியமான நகரம். இந்த நூற்றாண்டின் மிக மோசமான வற்ட்சியை சந்தித்துக் கொண்டுள்ளது. தென்னாப்பிரிக்காவின் சுற்றுலாவுக்கு பெயர் போன நகரம் இது. சுற்றுலா மூலம் அதிக வருமானம் பெறும் பெரிய நகரமும் கூட. அங்குதான் இந்த டே ஜீரோ என்ற நிலை 2017 ம் ஆண்டு முதன்முதலாக உருவானது. அப்போது நான் இந்த கட்டுரையை
எழுதி எனது பூமி தமிழ் விவசாயம் என்னும் வாட்ஸ்அப் குழுவில் வெளியிட்டேன். அதே கட்டுரையை கொஞ்சம் டிங்கர் வேலை பார்த்து இங்கு மறுபடியும் வெளியிடுகிறேன்.
டே ஜீரோ என்றால் என்ன ?
ஆமாம், டே ஜீரோ என்றால் என்ன ? இனி இந்த நகரில் அல்லது கிராமத்தில்
அல்லது இடத்தில் மக்களுக்கு தேவயான தண்ணீரை கொடுக்க முடியாது என்ற நிலை. தண்ணீர் இல்லாததால் மக்கள் வசிக்கமுடியாத நிலை ஏற்படும் நாளுக்கு ‘டே ஜீரோ’ என்று பெயர். அப்படிப்பட்ட
நிலை தென்னாப்ரிக்காவின் கேப்டவுன் என்ற நகரில் உருவாகி உள்ளது.
சென்னைக்கு வராது டே ஜீரோ
நம்புங்கள், சென்னைக்கு இந்த ‘டே ஜீரோ நிலைமை’ வராது. நாம் இதுபற்றி பயப்பட வேண்டாம். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தாமதமில்லாமல் இருந்திருந்தால் இந்த பிரச்சினக்கே
இடம் இருந்திருக்காது. மக்கள்தொடர்பு சாதனங்கள் தண்ணீர் பிரச்சினைக்கு
முக்கியத்துவம் அளிக்கின்றன.
அரசு மற்றும் அரசியல் கட்சிகளும்
இதனை முக்கியமான பிரச்கினையாக, அதனை தீர்ப்பதற்கான முயற்சிகள்
மேற்கொள்ளுவதை பார்க்க முடிகின்றது. எல்லாவற்றிற்கும் மேலாக தமிழ்நாட்டின்
இளைஞர்கள் அணிஅணியாக ஏரிகள், குளங்கள், குட்டைகள் போன்ற நீராதாரங்களை ஆழப்படுதுதல் அகலப்படுத்துதல் கரைகளை பலப்படுத்துதல்,
கரைகளில் மரக்கன்றுகளை நடுதல், கிராமங்களில் பசுமைப்போர்வையை
உருவாக்குதல் போன்ற காரியங்களில் நூற்றுக்கணக்கான குழுக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக
தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
அதனால்தான் சொல்லுகிறேன்,
தமிழ்நாட்டின் பக்கம் ‘டே ஜீரோ’ என்னும் தண்ணீர் பஞ்சம் தலைகாட்டாது.
கேப்டவுன் டே ஜீரோ
தென்
ஆப்பிரிக்காவின் ஒரு பெருநகரம் கேப்டவுன் அட்லாண்டிக் மற்றும் இந்தியப் பெருங்கடலின் எல்லையில்
அமைந்துள்ளது. இது ஒரு சுற்றுலாத்
தலமும் கூட. இங்கு டேபிள் மவுண்டெய்ன் என்னும் மலைத்தொடர் அமைந்துள்ளது.
இந்த டேபிள்
மவுண்டென் என்ற மலை தொடர் பகுதியில்தான் டேபிள் பே அல்லது டேபிள்
வளைகுடா என்ற பகுதி இருக்கிறது. அந்த பகுதியில் தான் ரோபன் தீவு உள்ளது. அந்த பகுதியில் இருக்கும் சிறைச்சாலையில்தான் நெல்சன் மண்டேலா
அவர்களை பல காலம் சிறைவைத்திருந்தார்கள்.
என்பது கேப்டவுன் நகரத்தில் வசிப்பவர்கள் தோட்டம்
வைத்திருக்கிறார்கள். நீச்சல் குளம் வைத்திருக்கிறார்கள். திராட்சைத்தோட்டம் வைத்து விவசாயம் பார்க்கிறார்கள். தண்ணீரை தண்ணீர்
மாதிரி செலவு செய்யும் மக்கள் இவர்கள். கிட்டத்தட்ட 40 லட்சம் பேர் இங்கு வசிக்கிறார்கள். இந்த 40 லட்சம் பேரில் கிட்டத்தட்ட பத்து லட்சம் பேர் பயன் படுத்துவது 4.5 சதவீதம் நீரைமட்டுமே என்கிறது
ஒரு புள்ளி விவரம்.
டே ஜீரோவின் குரூரமான முகம்
டே ஜீரோவின் குரூரமான முகம்
ஒரு நபர்
அதிகபட்சமாக 50 லிட்டர் மட்டுமே பயன்படுத்தலாம். கார் கழுவுவது, நீச்சல் குளத்திற்கு தண்ணீர் பிடிப்பது, செடிகளுக்கு தண்ணீர் பிடிப்பது இவையெல்லாம் சமூக குற்றமென அறிவித்துள்ளது
தென்னாப்பிரிக்க அரசு. இரண்டு நிமிடத்திற்கு மேல் குளிக்கக் கூடாது. டாய்லெட் சுத்தம் செய்ய கொஞ்சமாக தண்ணீரை பயன்படுத்த வேண்டும். பல் விளக்க ஒரு குவளைக்கு மேல் பயன்படுத்தக் கூடாது அதேபோல் முகம்
கழுவ ஒரு குவளைக்கு மேல் பயன்படுத்தக்கூடாது.
கிளைமேட்சேஞ்ச்
கேப்டவுனின் தண்ணீர்
உபயோகத்தில் 70% வீடுகளுக்குத்தான் பயனாகிறது இப்படி ஒரு மோசமான தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு இரண்டு
காரணங்களைச் சுட்டிக் காட்டுகிறார்கள் ஒன்று கிளைமேட்சேஞ்ச் என்னும் பருவக்காலமாற்றம் இன்னொன்று மிகையான மக்கள் தொகை.
தண்ணீரில்லாமல் திவாலாகும் உலகின் முதல்
பெருநகரம் இந்த ஆப்பிரிக்காவின் கேப்டன். உலகில் உள்ள அத்தனை
நகரங்களிலும், அங்கு வசிக்கும் மக்களுக்கு தண்ணீர் இல்லை என கைவிரிக்கும்
முதல் நகரம் என்ற கேட்டவுடன். தண்ணீர் பஞ்சத்திற்கு பருவகால மாற்றம்
போடும் முதல் பிள்ளயார்சுழி. இது ஒன்று இரண்டு என பல நாடுகளில் தொடர வாய்ப்பு அதிகம் என்கிறார்கள், தண்ணீர் விஞ்ஞானிகள்.
(‘டே ஜீரோ’ நாளையும் தொடரும்)
888888888888888888888888888888888888888888888
No comments:
Post a Comment