CAPE TOWN SOUTH AFRICA |
கேப்டவுன் டேஜீரோ
தண்ணீர் பஞ்சம்
CAPETOWN DAY-ZERO
WATER FAMINE
CAPETOWN DAY-ZERO
WATER FAMINE
பூமி ஞானசூரியன்
2017 ல் கேப்டவுன்
‘மருத்துவமனைகளில் பிரச்சனை இல்லை. சிறைகளில்
பிரச்சனை இல்லை. அவங்க நிலத்தடியிலிருந்து தண்ணீர் எடுக்கறாங்க. இங்கே கிட்டத்தட்ட 819 பள்ளிக்கூடங்கள்
இருக்கின்றன. அங்கெல்லாம் எந்த போர்வெல்லும் கிடையாது. அங்கே
இருக்கும் டாய்லட்ல தண்ணி வரலைன்னா பிரச்சனை. சுகாதாரம் கெடும். நோய்கள் வரும். குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள். ஆனா நாங்க பள்ளிகளை மூட மாட்டோம். குழந்தைகளை
பாதிக்கவிடமாட்டோம்’ என்கிறார்
இந்த பகுதி துணை மேயர், நீல்சன்.
ராணுவம் இறங்கியது
பிரேசில் நாட்டில் இருக்கும் ஒரு பெருநகரம் சாவ்பவுலோ. 2015 இல் இதே மாதிரி ஒரு பெரிய தண்ணீர் வறட்சி நீர் வறட்சி ஏற்பட்டது. அப்போது அந்த நாட்டு ராணுவம் அதை சரி செய்தது. நீர்த்தேக்கங்களை பாதுகாத்தது. தண்ணீர்
விநியோகம் செய்தது. மக்கள் மத்தியிலே அதிக பிரச்சனை வராமல்
பார்த்துக்கொண்டது. அதே மாதிரி இங்கேயும் இந்த
தென்னாப்பிரிக்க அரசு ராணுவத்தை இந்த பிரச்சனையை சரி செய்வதில் ஈடு படுத்திக்
கொண்டிருக்கிறது. இதுவரையில் எந்த பிரச்சனையும் இல்லை என்று சொல்லுகிறார்கள்.
கிளைமேட்சேஞ்
தண்ணீர் தட்டுப்பாடு அல்லது தண்ணீர் பஞ்சம் என்பது பெரிய
விபத்து என்று நாங்கள் நினைக்கவில்லை. ஆபத்தும் இல்லை. இந்த நிலை இன்னும் மோசம் ஆகிவிடக்கூடாது. விரைவில் மழை கண்டிப்பாக வரும். எங்கள்
நீராதாரங்கள் மறுபடியும் நிரம்பும். எங்கள் பிரச்சனைகள் தீரும். பருவநிலை
மாற்றம் என்றால் என்னஎன்று இப்போது நாங்கள் புரிந்து கொண்டு அதை சமாளிப்பது
எப்படி என்பதையும் நாங்கள் கற்றுக்கொள்ளுகிறோம்.
இப்போது எங்களுடைய நீர்நிலைகளை நீர் ஆதாரங்களை எப்படி
பராமரிப்பது
? மீண்டும் இப்படி ஒரு நிலை வராமல் இருக்க நாங்கள் என்ன செய்ய வேண்டும்
என்பதை எல்லாம் நாங்கள் கற்றுக் கொண்டோம் என்று நம்பிக்கையோடு சொல்கிறார்கள் இந்த தென்ஆப்பிரிக்காவின் கேப்டவுன் மக்கள்.
இனிடேசீரோ’ வை வரவிடமாட்டோம்
ஆப்பிரிக்காவில் கேப்டன் நகரத்தில் ராணுவம் தண்ணீர் சப்ளை
செய்கிறது ஒரு கையில் துப்பாக்கியும் ஒரு கையில் தண்ணீர்க் குவளையையும் வைத்துக் கொண்டு
இராணுவம் சுற்றுகிறது. நினைத்து பாருங்கள், அந்த அளவுக்கு தண்ணீர் தட்டுப்பாடான ஒரு பொருளாக ஆகி விட்டது. இந்த கேப்டன் நகரத்தில் எங்களுக்கு ரொம்ப பயமா இருக்கு. கடைசி கட்டத்தில் நாங்கள் இருக்கோம். இப்போ மனித முயற்சி
எதுவும் எடுபடாது. கடவுள் மட்டும் தான் ஏதாச்சு செய்ய
முடியும் என்கிறார் அந்தோணி.
எது எப்படியோ ஆனால் இப்படி ஒரு டேசீரோ என்று சொல்லக் கூடிய தண்ணீர்ப் பஞ்சம் இனி வரவிட மாட்டோம் என்பதில் அந்த தென் ஆப்பிரிக்க மக்கள் உறுதியாக இருக்கிறார்கள்.
எது எப்படியோ ஆனால் இப்படி ஒரு டேசீரோ என்று சொல்லக் கூடிய தண்ணீர்ப் பஞ்சம் இனி வரவிட மாட்டோம் என்பதில் அந்த தென் ஆப்பிரிக்க மக்கள் உறுதியாக இருக்கிறார்கள்.
88888888888888888888888888888888888
No comments:
Post a Comment