Saturday, June 29, 2019

DAY-ZERO WILL NOT VISIT CHENNAI - டே ஜீரோ தண்ணீர் பஞ்சம் சென்னைக்கு வராது - பகுதி 2 -

CAPE TOWN SOUTH AFRICA

டே ஜீரோ தண்ணீர் பஞ்சம்
சென்னைக்கு வராது - பகுதி 2

DAY-ZERO WILL NOT VISIT
CHENNAI
பூமி ஞானசூரியன்
88888888888888888888888888888888888888888888888888

எங்களைப் பொறுத்தவரை குழாயைத் திறந்ததும் கொட்டுவதுதான் தண்ணீர். இந்த வகையில்தான் எங்களுக்கு தண்ணீரைப்பற்றி எங்களுக்குத்தெரியும். தண்ணீர் தட்டுப்பாடு உள்ள பல நாடுகளுக்கு நான் சென்றிருக்கிறேன். அவர்கள் படும் கஷ்டங்களை பார்த்திருக்கிறேன்.  எங்களுக்கு வரும் என்று தெரியாது இப்படித்தான் பேசுகிறார்கள் பெரும்பாலான தென் ஆப்ரிக்காவின் கேப்டவுன் வாசிகள்.

தண்ணீர் திவாலாகும் நாள் - டே சீரோ
டே சீரோ என்ரால் ஒரு இடத்தில் சுத்தமாக தண்ணீர் பயன்படுத்துவதற்கு இல்லாமல் போவதற்கு தான் அந்த பெயர் என்று பார்த்தோம். தண்ணீர் என்பது துடைத்து வைத்த மாதிரி ல்லாமல் போய்விடும். குடிக்க, சமைக்க, குளிக்க, துவைக்க, எதையும் கழுவ, எதற்கும் தண்ணீர் இல்லாமல் போகும் நாள்.   ஒரு இடத்தின் நீர் ஆதாரம் சுத்தமாக காலி ஆகும் நாள்தான்ந்த டேசீரோ. ‘கடந்த 384 ஆண்டுக்கு முன்னால் இப்படி ஒரு வறட்சி வந்ததாம், தென்ஆப்ரிக்காவில்  ஆராய்ச்சியாளர்கள் சொல்லுகிறார்கள்.

அளந்து ஊற்றும் தண்ணீர்
தற்போது பல லட்சக்கணக்கான வீடுகளில் தண்ணீர் குழாய்கள் மூடப்பட்டுவிட்டன. பொதுவான இடங்களில் மட்டும் அளவாய் அரசு வினியோகம் செய்கிறது. அங்கும் கட்டுப்பாடு இல்லாத மக்கள் கூட்டம். அங்கும் ரேஷன் அரிசி மாதிரிதான் ரேஷன் தண்ணீரும் அளந்து அளந்து ஊற்றுகிறார்கள்.

நீர்க்கட்டுப்பாடும், நீர்த்தட்டுப்பாடும் சுகாதார சீர்கேடுகளை சுலபமாக பரவி வருகிறது.  நோய்கள் வேகமாக பரவுகிறது.  தண்ணீர் தட்டுப்பாடுகூட சாதாரண மக்களைத்தான் இங்கும் பாடாய்ப்படுத்துகிறது  என்கிறார்கள். அதிலும் குறிப்பாக பெண்களும் குழந்தைகளும்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்கிறார்கள், இங்கிருக்கும் சமூக ஆர்வலர்கள்.

இந்த கேப்டன் பெருநகரம் வரும் (2017) ஏப்ரல் 16-ஆம் தேதி வாக்கில் இந்த நிலை இன்னும் மோசமாகும் என்று தெரிகிறது. கிட்டத்தட்ட 40 லட்சம் வீடுகளில் 75 சதவிகித வீடுகளில் ஒரு சொட்டு தண்ணீர் கூட வராது என்கிறது தென்னாப்பிரிக்க அரசு. இதனை சமாளிக்க அரசு தயாராக இங்கு 200 இடங்களில் பொது விநியோகக் குழாய்கள், பொது விநியோக்கடைகள் போல அமைக்கப்போகிறார்கள். அதன் மூலம் ஒரு நபருக்கு அதிகபட்சமாக 25 லிட்டர் தண்ணீர் கொடுக்கப்போகிறார்கள்.

குளிச்சி ஒரு வருஷம் ஆச்சி
நான் வீட்டில் குளித்து சரியாக ஒரு ஆண்டு ஆகிறது என்கிறார் கேப்டவுனின் துணை மேயர் நில்சன் என்பவர். துணை மேயருக்கே  இந்த நிலைமை என்றால் யொசித்துப்பாருங்கள்.

கூரை நீரை அறுவடை செஞ்சிருக்கலாம்
இப்படிப்பட்ட மோசமான அவல நிலையை எங்களால் தடுத்திருக்கமுடியும்.  இப்போது எங்கள் ஒரு நாள் தேவை ஆயிரத்து 200 மில்லியன் லிட்டர் தண்ணீர்தான்.  நீர் சிக்கனம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி இருந்தால் இந்த தேவை 540 மில்லியன் லிட்டராக குறைத்திருக்கலாம். கூரை நீரை அறுவடை செய்திருந்தால் அதனை சுத்தம் செய்து குடித்திருந்தால் இத்தனை பிரச்சினை வந்திருக்காது. மே மாதம் மழை தொடங்கி விட்டால் பிரச்சனை இல்லை என்று சொல்கிறார்கள்.

இன்று நீ நாளை நான்
மூணு வருஷமா மழை சுத்தமா வரல. அதனால இனிமே எப்பொ வரும்னு உறுதியாக சொல்ல முடியாது என்று பயப்படுகிறார்கள். கேப்டவுனை இந்தியா உள்பட உலகம் முழுவதுமே அச்சத்தோடு பார்த்துக் கொண்டு உள்ளது. இன்று நீ நாளை நான் என்ற அச்சம்தான்.

பருவநிலை மாற்றத்தால் இப்படி ஏதாச்சும் வரும் என்று தெரியும் நிறைய ஆழ்துளைக்கிணறுகள், டிசலைனேஷன் பிளண்ட் எல்லாம் ஏற்பாடு செஞ்சிருக்கோம். ஆனா எல்லாமே 2020ல தான் வேலை செய்ய ஆரம்பிக்கும் என்கிறார்கள் இந்த கேப்டன் நகரத்தின் அரசுஅதிகாரிகள்.

திவாட்டர் குரூப் டேம் இதுதான் இதுவரை கேப்டனின் நீர் ஆதாரத்தின் காமதேனுவாக இருந்தது இது நீர்தேக்கம் அல்ல, எங்கள் கடல் என்று சொல்கிறார்கள். அங்கு அலை அடித்தால் அப்படி அடிக்கும். இன்று அதில் தண்ணீர் ஒரு சிறியகுட்டைபோல போல ஒடுங்கிவிட்டது.

திராட்சைத் தோட்டங்கள்
எப்போதும் ஆட்டமும் பாட்டமுமாக இருக்கும் ஸ்போர்ட்ஸ் கிளப் வெறிச்சோடி கிடக்கிறது என்கிறார் கேப்டவுன் பாதுகாப்பு அதிகாரி எர்ரல் நிக்கல்சன்.

டேவிட் ஜின்னி இவான்ஸ் எனும் தாவரவியல் நிபுணரின் கருத்துப்படி, இங்கு திராட்சைத் தோட்டங்கள் அதிகப்படியான தண்ணீரை எடுத்துக்கொள்ளுகின்றன, இன்றைய நிலையில் திராட்சைத் தோட்டங்களும், பீர்ரும்தான் அவர்களுடைய லக்சரி அயிட்டங்கள்.

நீரை மறுசுழற்சி செய்கிறார்கள்
கேப்டவுன்காரர்கள் காலத்தில் நிறையபேர் நீரை மறுசுழற்சி செய்ய தொடங்கி விட்டார்கள். உதாரணமாக குளியல் நீரில் துணி துவைக்கிறார்கள். துணியைத் துவத்த தண்ணீரில் டாய்லெட் சுத்தம் செய்கிறார்கள்.

பாலைவன நாட்டில் தண்ணீர் பஞ்சம் இல்லை
இப்படி, குளியலறை சமையலறை மற்றும் துணிதுவைத்து வெளியேற்றும் நீருக்கு கிரேவாட்டர் அல்லது இந்த சாம்பல் நிறநீர் என்றுபெயர். இப்படி மறுசுழற்சி செய்வதில் உலகில் முன்னணியில் இருப்பது இஸ்ரேல். அதனால்தான் மூன்றில் இரண்டுபங்கு நிலப்பரப்பை பாலைவனமாகக்கொண்ட இந்த நாட்டில் தண்ணீர் பஞ்சம் இல்லை.

வேடிக்கை என்னவென்றால் இஸ்ரேல் நாட்டு விஞ்ஞானிகள் தங்கள் நாட்டிலிருந்து மிகுதியான நீரை என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்போதுதான் எங்கள் மக்கள் நீர் சேமிப்பு என்றால் என்ன என்று புரிந்து கொண்டிருக்கிறார்கள். சாதாரண மக்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று யோசித்துப்பாருங்கள். கோடீஸ்வர்ர்கள்கூட எப்போதும் இப்படி தண்ணீருக்காக சாலைகளில் நின்றது கிடையாது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

இது ஒரு ஆக்கபூர்வமான அதிர்ச்சி வைத்தியம் என்றும் பலரும் சொல்லுகிறார்கள். இங்கு தண்ணீர் கியூவில் பணக்காரன் ஏழை என்ற வித்தியாசம் இல்லை என்கிறார் வாட்சன் என்ற ஒரு ஆசிரிரியர். தண்ணீர் எங்களை ஒன்று சேர்த்திருக்கிறது என்கிறார் அந்த ஏழை வாத்தியார்.
சிலரின் புல்தரைகளில் ன்றும்கூட தெளிப்பான்கள் தடையில்லாமல் ஓடுகின்றன. சிலர் தங்கள் நீச்சல் குளங்களில் நீர் அளவு குறையாமல் பார்த்துக்கொள்கிறார்கள். அவங்களுக்கு மட்டும் டேசீரோ இல்லை.’
888888888888888888888888888888888888







No comments:

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...