Saturday, June 29, 2019

CAPETOWN DAY-ZERO WATER FAMINE - கேப்டவுன் டேஜீரோ தண்ணீர் பஞ்சம் -




CAPE TOWN SOUTH AFRICA


கேப்டவுன் டேஜீரோ 
தண்ணீர் பஞ்சம்

CAPETOWN DAY-ZERO
WATER FAMINE

பூமி ஞானசூரியன்

88888888888888888888888888888888888888888888888888

2017  ல் கேப்டவுன்
மருத்துவமனைகளில் பிரச்சனை இல்லை. சிறைகளில் பிரச்சனை இல்லை. அவங்க நிலத்தடியிலிருந்து தண்ணீர் எடுக்கறாங்க. இங்கே கிட்டத்தட்ட 819 பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன. அங்கெல்லாம் எந்த போர்வெல்லும் கிடையாது. அங்கே இருக்கும் டாய்லட்ல தண்ணி வரலைன்னா பிரச்சனை. சுகாதாரம் கெடும். நோய்கள் வரும். குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள். ஆனா நாங்க பள்ளிகளை மூட மாட்டோம். குழந்தைகளை பாதிக்கவிடமாட்டோம் என்கிறார் இந்த பகுதி துணை மேயர், நீல்சன்.

ராணுவம் இறங்கியது
பிரேசில் நாட்டில் இருக்கும் ஒரு பெருநகரம் சாவ்பவுலோ. 2015 இல் இதே மாதிரி ஒரு பெரிய தண்ணீர் வறட்சி நீர் வறட்சி ஏற்பட்டது. அப்போது அந்த நாட்டு ராணுவம் அதை சரி செய்தது. நீர்த்தேக்கங்களை பாதுகாத்தது. தண்ணீர் விநியோகம் செய்தது. மக்கள் மத்தியிலே அதிக பிரச்சனை வராமல் பார்த்துக்கொண்டது. அதே மாதிரி இங்கேயும் இந்த தென்னாப்பிரிக்க அரசு ராணுவத்தை இந்த பிரச்சனையை சரி செய்வதில் ஈடு படுத்திக் கொண்டிருக்கிறது. இதுவரையில் எந்த பிரச்சனையும் இல்லை என்று சொல்லுகிறார்கள்.

கிளைமேட்சேஞ்
தண்ணீர் தட்டுப்பாடு அல்லது தண்ணீர் பஞ்சம் என்பது பெரிய விபத்து என்று நாங்கள் நினைக்கவில்லை. ஆபத்தும் இல்லை. இந்த நிலை இன்னும் மோசம் ஆகிவிடக்கூடாது. விரைவில் மழை கண்டிப்பாக வரும். எங்கள் நீராதாரங்கள் மறுபடியும் நிரம்பும். எங்கள் பிரச்சனைகள் தீரும். பருவநிலை மாற்றம் என்றால் என்னஎன்று இப்போது நாங்கள் புரிந்து கொண்டு அதை சமாளிப்பது எப்படி என்பதையும் நாங்கள் கற்றுக்கொள்ளுகிறோம்.

இப்போது எங்களுடைய நீர்நிலைகளை நீர் ஆதாரங்களை எப்படி பராமரிப்பது ? மீண்டும் இப்படி ஒரு நிலை வராமல் இருக்க நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை எல்லாம் நாங்கள் கற்றுக் கொண்டோம் என்று நம்பிக்கையோடு சொல்கிறார்கள் இந்த தென்ஆப்பிரிக்காவின் கேப்டவுன் மக்கள்.
இனிடேசீரோவை வரவிடமாட்டோம்

ஆப்பிரிக்காவில் கேப்டன் நகரத்தில் ராணுவம் தண்ணீர் சப்ளை செய்கிறது ஒரு கையில் துப்பாக்கியும் ஒரு கையில் தண்ணீர்க் குவளையையும் வைத்துக் கொண்டு இராணுவம் சுற்றுகிறது. நினைத்து பாருங்கள், அந்த அளவுக்கு தண்ணீர் ட்டுப்பாடான ஒரு பொருளாக ஆகி விட்டது. இந்த கேப்டன் நகரத்தில் எங்களுக்கு ரொம்ப பயமா இருக்கு. கடைசி கட்டத்தில் நாங்கள் இருக்கோம். இப்போ மனித முயற்சி எதுவும் எடுபடாது. கடவுள் மட்டும் தான் ஏதாச்சு செய்ய முடியும் என்கிறார் அந்தோணி.

எது எப்படியோ ஆனால் இப்படி ஒரு டேசீரோ என்று சொல்லக் கூடிய தண்ணீர்ப் பஞ்சம் இனி வரவிட மாட்டோம் என்பதில் அந்த தென் ஆப்பிரிக்க மக்கள் உறுதியாக இருக்கிறார்கள்.

88888888888888888888888888888888888



DAY-ZERO WILL NOT VISIT CHENNAI - டே ஜீரோ தண்ணீர் பஞ்சம் சென்னைக்கு வராது - பகுதி 2 -

CAPE TOWN SOUTH AFRICA

டே ஜீரோ தண்ணீர் பஞ்சம்
சென்னைக்கு வராது - பகுதி 2

DAY-ZERO WILL NOT VISIT
CHENNAI
பூமி ஞானசூரியன்
88888888888888888888888888888888888888888888888888

எங்களைப் பொறுத்தவரை குழாயைத் திறந்ததும் கொட்டுவதுதான் தண்ணீர். இந்த வகையில்தான் எங்களுக்கு தண்ணீரைப்பற்றி எங்களுக்குத்தெரியும். தண்ணீர் தட்டுப்பாடு உள்ள பல நாடுகளுக்கு நான் சென்றிருக்கிறேன். அவர்கள் படும் கஷ்டங்களை பார்த்திருக்கிறேன்.  எங்களுக்கு வரும் என்று தெரியாது இப்படித்தான் பேசுகிறார்கள் பெரும்பாலான தென் ஆப்ரிக்காவின் கேப்டவுன் வாசிகள்.

தண்ணீர் திவாலாகும் நாள் - டே சீரோ
டே சீரோ என்ரால் ஒரு இடத்தில் சுத்தமாக தண்ணீர் பயன்படுத்துவதற்கு இல்லாமல் போவதற்கு தான் அந்த பெயர் என்று பார்த்தோம். தண்ணீர் என்பது துடைத்து வைத்த மாதிரி ல்லாமல் போய்விடும். குடிக்க, சமைக்க, குளிக்க, துவைக்க, எதையும் கழுவ, எதற்கும் தண்ணீர் இல்லாமல் போகும் நாள்.   ஒரு இடத்தின் நீர் ஆதாரம் சுத்தமாக காலி ஆகும் நாள்தான்ந்த டேசீரோ. ‘கடந்த 384 ஆண்டுக்கு முன்னால் இப்படி ஒரு வறட்சி வந்ததாம், தென்ஆப்ரிக்காவில்  ஆராய்ச்சியாளர்கள் சொல்லுகிறார்கள்.

அளந்து ஊற்றும் தண்ணீர்
தற்போது பல லட்சக்கணக்கான வீடுகளில் தண்ணீர் குழாய்கள் மூடப்பட்டுவிட்டன. பொதுவான இடங்களில் மட்டும் அளவாய் அரசு வினியோகம் செய்கிறது. அங்கும் கட்டுப்பாடு இல்லாத மக்கள் கூட்டம். அங்கும் ரேஷன் அரிசி மாதிரிதான் ரேஷன் தண்ணீரும் அளந்து அளந்து ஊற்றுகிறார்கள்.

நீர்க்கட்டுப்பாடும், நீர்த்தட்டுப்பாடும் சுகாதார சீர்கேடுகளை சுலபமாக பரவி வருகிறது.  நோய்கள் வேகமாக பரவுகிறது.  தண்ணீர் தட்டுப்பாடுகூட சாதாரண மக்களைத்தான் இங்கும் பாடாய்ப்படுத்துகிறது  என்கிறார்கள். அதிலும் குறிப்பாக பெண்களும் குழந்தைகளும்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்கிறார்கள், இங்கிருக்கும் சமூக ஆர்வலர்கள்.

இந்த கேப்டன் பெருநகரம் வரும் (2017) ஏப்ரல் 16-ஆம் தேதி வாக்கில் இந்த நிலை இன்னும் மோசமாகும் என்று தெரிகிறது. கிட்டத்தட்ட 40 லட்சம் வீடுகளில் 75 சதவிகித வீடுகளில் ஒரு சொட்டு தண்ணீர் கூட வராது என்கிறது தென்னாப்பிரிக்க அரசு. இதனை சமாளிக்க அரசு தயாராக இங்கு 200 இடங்களில் பொது விநியோகக் குழாய்கள், பொது விநியோக்கடைகள் போல அமைக்கப்போகிறார்கள். அதன் மூலம் ஒரு நபருக்கு அதிகபட்சமாக 25 லிட்டர் தண்ணீர் கொடுக்கப்போகிறார்கள்.

குளிச்சி ஒரு வருஷம் ஆச்சி
நான் வீட்டில் குளித்து சரியாக ஒரு ஆண்டு ஆகிறது என்கிறார் கேப்டவுனின் துணை மேயர் நில்சன் என்பவர். துணை மேயருக்கே  இந்த நிலைமை என்றால் யொசித்துப்பாருங்கள்.

கூரை நீரை அறுவடை செஞ்சிருக்கலாம்
இப்படிப்பட்ட மோசமான அவல நிலையை எங்களால் தடுத்திருக்கமுடியும்.  இப்போது எங்கள் ஒரு நாள் தேவை ஆயிரத்து 200 மில்லியன் லிட்டர் தண்ணீர்தான்.  நீர் சிக்கனம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி இருந்தால் இந்த தேவை 540 மில்லியன் லிட்டராக குறைத்திருக்கலாம். கூரை நீரை அறுவடை செய்திருந்தால் அதனை சுத்தம் செய்து குடித்திருந்தால் இத்தனை பிரச்சினை வந்திருக்காது. மே மாதம் மழை தொடங்கி விட்டால் பிரச்சனை இல்லை என்று சொல்கிறார்கள்.

இன்று நீ நாளை நான்
மூணு வருஷமா மழை சுத்தமா வரல. அதனால இனிமே எப்பொ வரும்னு உறுதியாக சொல்ல முடியாது என்று பயப்படுகிறார்கள். கேப்டவுனை இந்தியா உள்பட உலகம் முழுவதுமே அச்சத்தோடு பார்த்துக் கொண்டு உள்ளது. இன்று நீ நாளை நான் என்ற அச்சம்தான்.

பருவநிலை மாற்றத்தால் இப்படி ஏதாச்சும் வரும் என்று தெரியும் நிறைய ஆழ்துளைக்கிணறுகள், டிசலைனேஷன் பிளண்ட் எல்லாம் ஏற்பாடு செஞ்சிருக்கோம். ஆனா எல்லாமே 2020ல தான் வேலை செய்ய ஆரம்பிக்கும் என்கிறார்கள் இந்த கேப்டன் நகரத்தின் அரசுஅதிகாரிகள்.

திவாட்டர் குரூப் டேம் இதுதான் இதுவரை கேப்டனின் நீர் ஆதாரத்தின் காமதேனுவாக இருந்தது இது நீர்தேக்கம் அல்ல, எங்கள் கடல் என்று சொல்கிறார்கள். அங்கு அலை அடித்தால் அப்படி அடிக்கும். இன்று அதில் தண்ணீர் ஒரு சிறியகுட்டைபோல போல ஒடுங்கிவிட்டது.

திராட்சைத் தோட்டங்கள்
எப்போதும் ஆட்டமும் பாட்டமுமாக இருக்கும் ஸ்போர்ட்ஸ் கிளப் வெறிச்சோடி கிடக்கிறது என்கிறார் கேப்டவுன் பாதுகாப்பு அதிகாரி எர்ரல் நிக்கல்சன்.

டேவிட் ஜின்னி இவான்ஸ் எனும் தாவரவியல் நிபுணரின் கருத்துப்படி, இங்கு திராட்சைத் தோட்டங்கள் அதிகப்படியான தண்ணீரை எடுத்துக்கொள்ளுகின்றன, இன்றைய நிலையில் திராட்சைத் தோட்டங்களும், பீர்ரும்தான் அவர்களுடைய லக்சரி அயிட்டங்கள்.

நீரை மறுசுழற்சி செய்கிறார்கள்
கேப்டவுன்காரர்கள் காலத்தில் நிறையபேர் நீரை மறுசுழற்சி செய்ய தொடங்கி விட்டார்கள். உதாரணமாக குளியல் நீரில் துணி துவைக்கிறார்கள். துணியைத் துவத்த தண்ணீரில் டாய்லெட் சுத்தம் செய்கிறார்கள்.

பாலைவன நாட்டில் தண்ணீர் பஞ்சம் இல்லை
இப்படி, குளியலறை சமையலறை மற்றும் துணிதுவைத்து வெளியேற்றும் நீருக்கு கிரேவாட்டர் அல்லது இந்த சாம்பல் நிறநீர் என்றுபெயர். இப்படி மறுசுழற்சி செய்வதில் உலகில் முன்னணியில் இருப்பது இஸ்ரேல். அதனால்தான் மூன்றில் இரண்டுபங்கு நிலப்பரப்பை பாலைவனமாகக்கொண்ட இந்த நாட்டில் தண்ணீர் பஞ்சம் இல்லை.

வேடிக்கை என்னவென்றால் இஸ்ரேல் நாட்டு விஞ்ஞானிகள் தங்கள் நாட்டிலிருந்து மிகுதியான நீரை என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்போதுதான் எங்கள் மக்கள் நீர் சேமிப்பு என்றால் என்ன என்று புரிந்து கொண்டிருக்கிறார்கள். சாதாரண மக்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று யோசித்துப்பாருங்கள். கோடீஸ்வர்ர்கள்கூட எப்போதும் இப்படி தண்ணீருக்காக சாலைகளில் நின்றது கிடையாது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

இது ஒரு ஆக்கபூர்வமான அதிர்ச்சி வைத்தியம் என்றும் பலரும் சொல்லுகிறார்கள். இங்கு தண்ணீர் கியூவில் பணக்காரன் ஏழை என்ற வித்தியாசம் இல்லை என்கிறார் வாட்சன் என்ற ஒரு ஆசிரிரியர். தண்ணீர் எங்களை ஒன்று சேர்த்திருக்கிறது என்கிறார் அந்த ஏழை வாத்தியார்.
சிலரின் புல்தரைகளில் ன்றும்கூட தெளிப்பான்கள் தடையில்லாமல் ஓடுகின்றன. சிலர் தங்கள் நீச்சல் குளங்களில் நீர் அளவு குறையாமல் பார்த்துக்கொள்கிறார்கள். அவங்களுக்கு மட்டும் டேசீரோ இல்லை.’
888888888888888888888888888888888888







Tuesday, June 25, 2019

DAY-ZERO CCRUEL FACE OF CLIMATE CHANGE டே ஜீரோ பருவகால மாற்றத்தின் குரூரமான முகம்

CAPE TOWN SOUTH AFRICA



நம்புங்கள், சென்னைக்கு இந்தடே ஜீரோ நிலைமைவராது. நாம் இதுபற்றி பயப்படவேண்டாம். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தாமதமில்லாமல் இருந்திருந்தால் இந்த பிரச்சினக்கே இடம் இருந்திருக்காது. மக்கள்தொடர்பு சாதனங்கள் தண்ணீர் பிரச்சினைக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன. அரசு மற்றும் அரசியல் கட்சிகளும் இதனை முக்கியமான பிரச்கினையாக, அதனை தீர்ப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளுவதை பார்க்க முடிகின்றது. எல்லாவற்றிற்கும் மேலாக தமிழ்நாட்டின் இளைஞர்கள் அணிஅணியாக ஏரிகள், குளங்கள், குட்டைகள் போன்ற நீராதாரங்களை ஆழப்படுதுதல் அகலப்படுத்துதல் கரைகளை பலப்படுத்துதல், கரைகளில் மரக்கன்றுகளை நடுதல், கிராமங்களில் பசுமைப்போர்வையை உருவாக்குதல் போன்ற காரியங்களில் நூற்றுக்கணக்கான குழுக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அதனால்தான் சொல்லுகிறேன், தமிழ்நாட்டின் பக்கம் டே ஜீரோஎன்னும் தண்ணீர் பஞ்சம் தலைகாட்டாது.

தண்ணீர் தன்னிறைவு நெடும்பயணம் - கட்டுரைத்தொடர்

டே ஜீரோ பருவகால மாற்றத்தின் குரூரமான முகம் 

DAY-ZERO CRUEL FACE OFCLIMATE CHANGE

பூமி ஞானசூரியன்

88888888888888888888888888888888888888888888888888

கேப்டவுன் ஆப்பிரிக்காவின் மிக முக்கியமான நகரம். இந்த நூற்றாண்டின் மிக மோசமான வற்ட்சியை சந்தித்துக் கொண்டுள்ளது. தென்னாப்பிரிக்காவின் சுற்றுலாவுக்கு பெயர் போன நகரம் இது. சுற்றுலா மூலம் அதிக வருமானம் பெறும் பெரிய நகரமும் கூட. அங்குதான் இந்த டே ஜீரோ என்ற நிலை 2017 ம் ஆண்டு முதன்முதலாக உருவானது. அப்போது நான் இந்த கட்டுரையை எழுதி எனது பூமி தமிழ் விவசாயம் என்னும் வாட்ஸ்அப் குழுவில் வெளியிட்டேன். அதே கட்டுரையை கொஞ்சம் டிங்கர் வேலை பார்த்து இங்கு மறுபடியும் வெளியிடுகிறேன்.

டே ஜீரோ என்றால் என்ன ?

ஆமாம், டே ஜீரோ என்றால் என்ன ? இனி இந்த நகரில் அல்லது கிராமத்தில் அல்லது இடத்தில் மக்களுக்கு தேவயான தண்ணீரை கொடுக்க முடியாது என்ற நிலை. தண்ணீர் இல்லாததால் மக்கள் வசிக்கமுடியாத நிலை ஏற்படும் நாளுக்குடே ஜீரோஎன்று பெயர். அப்படிப்பட்ட நிலை தென்னாப்ரிக்காவின் கேப்டவுன் என்ற நகரில் உருவாகி உள்ளது.

சென்னைக்கு வராது டே ஜீரோ
நம்புங்கள், சென்னைக்கு இந்தடே ஜீரோ நிலைமைவராது. நாம் இதுபற்றி பயப்பட வேண்டாம். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தாமதமில்லாமல் இருந்திருந்தால் இந்த பிரச்சினக்கே இடம் இருந்திருக்காது. மக்கள்தொடர்பு சாதனங்கள் தண்ணீர் பிரச்சினைக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன

அரசு மற்றும் அரசியல் கட்சிகளும் இதனை முக்கியமான பிரச்கினையாக, அதனை தீர்ப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளுவதை பார்க்க முடிகின்றது. எல்லாவற்றிற்கும் மேலாக தமிழ்நாட்டின் இளைஞர்கள் அணிஅணியாக ஏரிகள், குளங்கள், குட்டைகள் போன்ற நீராதாரங்களை ஆழப்படுதுதல் அகலப்படுத்துதல் கரைகளை பலப்படுத்துதல், கரைகளில் மரக்கன்றுகளை நடுதல், கிராமங்களில் பசுமைப்போர்வையை உருவாக்குதல் போன்ற காரியங்களில் நூற்றுக்கணக்கான குழுக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக தீவிரமாக செயல்பட்டு வருகின்றன

அதனால்தான் சொல்லுகிறேன், தமிழ்நாட்டின் பக்கம்டே ஜீரோஎன்னும் தண்ணீர் பஞ்சம் தலைகாட்டாது.

கேப்டவுன் டே ஜீரோ

தென் ஆப்பிரிக்காவின் ஒரு பெருநகரம் கேப்டவுன் அட்லாண்டிக் மற்றும் இந்தியப் பெருங்கடலின் எல்லையில் அமைந்துள்ளது. இது ஒரு சுற்றுலாத் தலமும் கூட. ங்கு டேபிள் மவுண்டெய்ன் என்னும் மலைத்தொடர் அமைந்துள்ளது.

இந்த டேபிள் மவுண்டென் என்ற மலை தொடர் பகுதியில்தான் டேபிள் பே அல்லது டேபிள் வளைகுடா என்ற பகுதி இருக்கிறது. அந்த பகுதியில் தான் ரோபன் தீவு உள்ளது. அந்த பகுதியில் இருக்கும் சிறைச்சாலையில்தான் நெல்சன் மண்டேலா அவர்களை பல காலம் சிறைவைத்திருந்தார்கள்.

என்பது கேப்டவுன் நகரத்தில் வசிப்பவர்கள் தோட்டம் வைத்திருக்கிறார்கள். நீச்சல் குளம் வைத்திருக்கிறார்கள். திராட்சைத்தோட்டம் வைத்து விவசாயம் பார்க்கிறார்கள். தண்ணீரை தண்ணீர் மாதிரி செலவு செய்யும் மக்கள் இவர்கள். கிட்டத்தட்ட 40 லட்சம் பேர் இங்கு வசிக்கிறார்கள். இந்த 40 லட்சம் பேரில் கிட்டத்தட்ட பத்து லட்சம் பேர் பயன் படுத்துவது 4.5 சதவீதம் நீரைமட்டுமே என்கிறது ஒரு புள்ளி விவரம்.

டே ஜீரோவின் குரூரமான முகம்

ஒரு நபர் அதிகபட்சமாக 50 லிட்டர் மட்டுமே பயன்படுத்தலாம். கார் கழுவுவது, நீச்சல் குளத்திற்கு தண்ணீர் பிடிப்பது, செடிகளுக்கு தண்ணீர் பிடிப்பது இவையெல்லாம் சமூக குற்றமென அறிவித்துள்ளது தென்னாப்பிரிக்க அரசு. இரண்டு நிமிடத்திற்கு மேல் குளிக்கக் கூடாது. டாய்லெட் சுத்தம் செய்ய கொஞ்சமாக தண்ணீரை பயன்படுத்த வேண்டும். பல் விளக்க ஒரு குவளைக்கு மேல் பயன்படுத்தக் கூடாது அதேபோல் முகம் கழுவ ஒரு குவளைக்கு மேல் பயன்படுத்தக்கூடாது.

கிளைமேட்சேஞ்ச்

கேப்டவுனின் தண்ணீர் உபயோகத்தில் 70% வீடுகளுக்குத்தான் பயனாகிறது இப்படி ஒரு மோசமான தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு இரண்டு காரணங்களைச் சுட்டிக் காட்டுகிறார்கள் ஒன்று கிளைமேட்சேஞ்ச் என்னும் பருவக்காலமாற்றம் இன்னொன்று மிகையான மக்கள் தொகை.

ண்ணீரில்லாமல் திவாலாகும் உலகின் முதல் பெருநகரம் இந்த ஆப்பிரிக்காவின் கேப்டன். உலகில் உள்ள அத்தனை நகரங்களிலும், அங்கு வசிக்கும் மக்களுக்கு தண்ணீர் இல்லை என கைவிரிக்கும் முதல் நகரம் என்ற கேட்டவுடன். தண்ணீர் பஞ்சத்திற்கு பருவகால மாற்றம் போடும் முதல் பிள்ளயார்சுழி. இது ஒன்று இரண்டு என பல நாடுகளில் தொடர வாய்ப்பு அதிகம் என்கிறார்கள், தண்ணீர் விஞ்ஞானிகள்.
(‘டே ஜீரோநாளையும் தொடரும்)

888888888888888888888888888888888888888888888






ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...