வாட்ஸ்அப் சமூக வலைத் தளங்களில் ரொம்ப நாளாய் படமாக உலா வந்து மிரட்டிக் கொண்டிருந்த மரம் இது. ஆனால் இது என்ன மரம் என்று கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது. ஒரு வழியாய் இந்தத் தகவல்கள் சிக்கின. நன்றி ‘மாதா பிதா கூகிள் தெய்வம்’
அகில உலக அளவில் பிரபலமான ஞானி சாக்ரடீஸ் மருந்து தயாரிக்க பயன்படுத்திய மரம் இது.
கடந்த காலத்தில் ஞானிகள் அனைவரும் மருத்துவமும் தெரிந்திருப்பார்கள். அரிஸ்டாடிலின் மாணவரான அலக்சாண்டருக்கும் மருத்துவம் தெரியும். அது போல அரிஸ்டாடிலின் குருநாதர் சாக்ரடீசும் வைத்திய நிபுணர். சாக்ரடீஸ் அவருடைய காலத்தில் தனது மருத்துவத்தில் டிராகன் பிளட்டை பயன்படுத்தி இருக்கிறார். அவர் காலத்தில் இதன் பெயர் எம்ஜோலோ (EMJOLOH). ஆனால் இப்பகுதியின் பூர்வக் குடிகள் இதனை சின்னபார் (CINNABAR)என்று அழைக்கிறார்கள். அப்படிப் பார்த்தால் சாக்ரடீஸ், அரிஸ்டாடில் அலக்சாண்டர் மூவருமே டிராகன் பிளட் ட்ரீ' யை சிகிச்சைக்கு பயன்படுத்தி இருப்பார்கள்.
வித்தியாசமான உருவ அமைப்பு கொண்ட 10 மரங்கள் என ஒரு பட்டியல் போட்டால் அதில் ஒரு மரமாக கண்டிப்பாக வரும் இந்த ‘டிராகன் பிளட்’ என்ற மரம்.
இந்த மரத்திலிருந்து வடியும் ஒரு வகை மரப்பால்தான் (RESIN) டிராகன் பிளட் (DRAGON BLOOD). இதனை அந்த நாட்களில் கம்பளித் துணிகள் மற்றும் மண் பானைகளுக்கு சாயம் ஏற்ற, மருந்தாக, பெண்கள் உதட்டுச் சாயமாகவும் பயன்படுத்தினர்.
சடங்குகள், சம்பிரதாயங்கள், தகரத்தை தங்கமாக்கும் ரசவாதம், ஆகிய எல்லாவற்றிற்கும் தேவை இது. உள்ளங்கால் அரிப்பு முதல் உச்சந்தலை எரிச்சல் வரை ‘கொண்டுவா ‘டிராகன் பிளட்’ என்பார்கள் சொகோத்ரா தீவு மக்கள்.
கிரேக்கர்கள், ரோமானியர்கள், மற்றும் அரேபிய மக்களின் சளி ஜூரம், வாய்ப்புண் வயிற்றுப்புண், குடற்புண் தொண்டைப்புண், பேதி சீதபேதி - இப்படி மனிதர்களுக்கு வரும் பாதி நோய்களுக்கு சஞ்சீவி மூலிகை ‘டிராகன் பிளட்’தான். பதினெட்டாம் நுற்றாண்டில் இப்பகுதி மக்களுக்கு பற்பசை இந்த ‘டிராகன் பிளட்’தான். ‘உங்கள் பற்பசையில் உப்பிருக்கிறதா’ என்று யாரும் அன்று யாரும் கேட்கவில்லை.
34 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் அரேபியாவிலிருந்து பிரிந்த ஒரு தீவுதான் சொகோத்ரா (SOCOTRA). தற்போதைய ஏமன் நாட்டின் ஒரு பகுதி. இந்தத் தீவைப்பற்றி படித்தால் ஓமன் படம் மாதிரி இருக்கும்.
கடுமையான வறட்சி, கிரானைட் பாறைகளினால் ஆன மண் கண்டம் உடைய மலைப்பகுதி இவை எல்லாம் எங்கு இருக்கிறதோ அங்கு இந்த மரமும் இருக்கும். மரத்தின் தலைப் பகுதி குடைபோல இருப்பதனால் அதன் நிழல் அடிப்பகுதியில் நீர் ஆவியாவதைத் தடுத்து ஈரம் காக்கிறது. மரத்தின் அடியில் வளரும் இதன் கன்றுகளுக்கு சாதகமான சூழலை வழங்குகிறது.
கால்நடைகளுக்கு தீவனம் தர, கயிறு திரிக்க, பிசின் எடுக்க, தேனிப் பெட்டிகள் செய்ய, மருந்துகள் தயாரிக்க என்று பல வகைகளில் பயனாகிறது. அழிந்து வரும் மரங்களில் ஒன்று இது.
1. பொதுப் பெயர்: டிராகன் பிளட் ட்ரீ (Dragon Blood Treee)
2. தாவரவியல் பெயர்: டிரசீனா சின்னபாரி (Draecaena cinnabari)
3. தாவரக் குடும்பம்: அஸ்பராகேசியே (Asparagaceae)
4. மரம்
4.1. பூமி, செங்குத்தாக பிடித்திருக்கும் பச்சைக் குடை மரம் இது.
4.2. லேசாய்க் கீறினால் கூட ரத்தச் சிவப்பாய் மரப்பால் வடிக்கும். அதனால்தான் இதன் பெயர் டிராகன் பிளட் ட்ரீ. டிராகனின் ரத்தம் இது போலத்தான் இருக்குமாம்;.
4.3. பனை மரத்தைப் போல இது ஒரு விதையிலை மரம்; ஆனாலும் இந்த பனைக்கு கிளையுண்டு. கிளைகள் இரண்டிரண்டாய் ஒழுங்காகப் பிரியும். படத்தைப் பாருங்கள்.
5. இலைகள்
5.1. மரத்தின் கிளைச் சிம்புகளின் நுனிகளில் மட்டுமே இலைகள் தென்படும்; மூன்று முதல் நான்கு ஆண்டுகளில் இலைகள் முதிர்ந்து உதிரும்.
6. பூக்கள்
6.1. வெள்ளை அல்லது பச்சை நிறத்தில் பூக்கும் இந்த பூக்களின் வாசைன பிடிக்க இரண்டு மூக்கு வேண்டும்.
7. பழங்கள்
7.1. பூவாகி காயாகி கனியாகி பறவைகளுக்கும் வன விலங்குகளுக்கும் விருந்து வைக்க 5 மாதங்கள் பிடிக்கும்.
7.2. பசுமை நிறக் காய்கள் கருப்பு நிறமாக கனிந்து பின் ஆரஞ்சு கலந்த அழகான சிவப்பு நிறம் அடையும்.
8. மருத்துவம்
8.1. கருச்சிதைவு செய்ய கைகண்ட மருந்து.
8.2. இதன் பிசின் வாய் மற்றும் தொண்டைப் புண்ணை குணப்படுத்தும்.
8.3. பல் ஈறுகளின் ரத்தக் கசிவைக் கட்டுப்படுத்த பற்பசைகளில் உபயோகமாகிறது.
8.4. வேர்கள் முடக்குவாதத்தை குணப்படுத்தும்.
8.5. இலைகள் வாயுக்களை நீக்கும் மருந்து.
11. பருவக்கால மாற்றம்
11.1. மாறி வரும் பருவ நிலையில் இந்த மரங்களின் தலைப் பகுதி முழுக்குடையாய் வளர்வதில்லை என்கிறார்கள்.
11.2. ஒரு 50 ஆண்டுகளில், தற்போது இருக்கும் மரங்களில் அநேகமாய் 45 சத மரங்களை இழக்க நேரிடும் என்கிறார்கள் தாவரவியல் நிபுணர்கள்.
எது எப்படி இருந்தாலும் சொக்காத்தா தீவின் அடையாள மரம் ‘டிராகன் பிளட்;’. அடுத்தத் தலைமுறை பார்க்க பரவசப்பட பயன்படுத்த பாதுகாக்க வேண்டிய மரம்.
பூமி ஞானசூரியன், செல்பேசி: 8526195370, 8248376767.
TO READ FURTHER MORE
1.
பாட்டில் மரம் – ஏலியன்தீவின் அதிசய மரம் - WONDER TREE OF THE ALIEN ISLAND – Date of Posting: 07.02.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/blog-post7.html
2.
மங்கிபஸ்சில் - தென் அமெரிக்காவின் அதிசய
மரம் - MONKEY PUZZLE -
TREE OF SOUTH AMERICA - Date of Posting: 06.02.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/monkey-puzzle-tree-of-south-america.html
3.
டிரேவலர்ஸ் பாம் - ஒரு வித்தியாசமான
அழகுமரம் - TRAVELLER’S PALM
- IS A DIFFERENTLY BEAUTIFUL TREE - Date of Posting: 03.02.2020
/ https://vivasayapanchangam.blogspot.com/2020/02/travellers-palm-is-differently.html
4.
செக்கோயா உலகின்
உயரமான மரம் - KING SEQUOIA WORLDS' TALLEST TREE Date of Posting: 17.01.2020
/ https://vivasayapanchangam.blogspot.com/2020/01/king-sequoia-worlds-tallest-tree.html
5.
ஒசேஜ் ஆரஞ்சு மண்ணரிப்பைத் தடுக்க ரூஸ்வெல்ட்
அதிகம் நட்ட மரம் - OSAGE ORANGE PET TREE OF ROOSEVELT - Date of Posting:
08.01.2020 - https://vivasayapanchangam.blogspot.com/2020/01/osage-orange-pet-tree-of-roosevelt.html
6.
மரூலா மரம் - ஆப்ரிக்காவின் சிறுதொழில் மரம் - MARULA - ENTREPRENEUR FRIENDLY AFRICAN TREE - Date of Posting: 25.12.2019 https://vivasayapanchangam.blogspot.com/2019/12/marula-entrepreneur-friendly-african.html
7.
பேவோபாப் - கல்லறையாகக்கூட பயன்பட்ட மரம் BAO BAB - ONCE USED CEMETRY - Date of Posting: 07.08.2019
/ https://vivasayapanchangam.blogspot.com/2019/08/bao-bab-once-used-cemetry.html
8.
டிராகன் பிளட் ட்ரீ - சாக்ரடிஸ் பயன்படுத்திய மருத்துவ மரம் - DRAGON BLOOD RARE HERB USED BY
SOCRATES - Date of Posting: 08.02.2018 https://vivasayapanchangam.blogspot.com/2018/02/dragon-blood-rare-herb-used-by-socrates.html
9.
கலா பேஷ் - உலகு துறந்தோருக்கு உணவு
பாத்திரம் தரும் மரம் CALABASH - BLESS BOWELS TO SAINTS - Date of Posting:
29.09.2017 - https://vivasayapanchangam.blogspot.com/2017/09/calabash-bless-bowels-to-saints.html
10.
முருங்கை - பலவீனமான நாடுகளுக்கு ஏற்ற ஊட்டமிகு மரம் MURUNGAI - GOOD FOR MAL- NUTRITIONED BABIES - Date of Posting: 17.09.2017 - https://vivasayapanchangam.blogspot.com/2017/09/murungai-good-for-mal-nutritioned-babies.html
11.
வேப்ப மரம் கிராமத்து
மருந்து கடை - VEPPA MARAM
- VILLAGE PHARMACY OF THE
WORLD - Date of Posting: 08.09.2017 - https://vivasayapanchangam.blogspot.com/2017/09/veppa-maram-village-pharmacy-of-world.html
12.
பாலைவன மக்களின் வாழ்வாதாரம் - VANNI
LIVELIHOOD TREE OF DESERT PEOPLE - Date of Posting: 29.07.2017
- https://vivasayapanchangam.blogspot.com/2017/07/vanni-livelihood-tree-of-desert-people.html
13.
அணுக்கதிர்களை தடுக்கும் ஒரே மரம் SENCHANTHANAM ONLY CAN BLOCK
ATOMIC RAYS - Date of Posting: 28.07.2017 - https://vivasayapanchangam.blogspot.com/2017/07/senchanthanam-only-can-block-atomic-rays.html