Friday, December 29, 2017

மக்காச் சோளத்தில் என்னென்ன தொழில்கள் செய்யலாம் ? - MAIZE BASED BUSINESS IDEAS




 (Article revised on 23.03.2020)

மக்காச் சோளத்தில்  என்னென்ன  தொழில்கள் செய்யலாம் ?

MAIZE  BASED BUSINESS IDEAS


விவசாயத்தை ஒரு தொழிலாகச் செய்ய வேண்டும்; இதற்கு விளைபொருட்களை எப்படி மதிப்புக் கூட்ட முடியும் என்று தெரிய  வேண்டும்.

மக்காச்சோளத்தில் மதிப்புக் கூட்டி என்னென்ன செய்யலாம் ?

1.பாப்கார்ன் செய்யும் தொழில்.

2. கோழித் தீவனம் தயாரிக்கும் தொழில்.

3. கால்நடைத் தீவன உற்பத்தித் தொழில்.

4. ஸ்டார்ச் தயாரித்து நெசவுத் தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்தல்.

5. குளுகோஸ்; டெக்ஸ்ட்ரோஸ் தயாரிப்பு.

6. பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி.

7. டெக்ஸ்ட்ரின், சார்பிக் அமிலம், லேக்டிக் அமிலம் தயாரிப்பு.

8. அழகு சாதனப் பொருட்கள், வார்னிஷ்,  பெயிண்ட், மருந்துப் பொருட்கள், ஐஸ்கிரீம், ஷூ பாலிஷ், பேட்டரிகள், ஒட்டும்பசை  ஆகியவை தயாரிப்புக்கு தேவைப்படும் கச்சாப் பொருட்கள் தயாரிப்பு.

9. உணவு உற்பத்தி செய்யும் தொழில கங்கள்  ( Food Producers) மற்றும்  மது உற்பத்திக்கு ( Brewaries) தேவைப்படும் அடிப்படையான பொருட்களை சப்ளை செய்தல்.

10. மக்காச்சோள விதை உற்பத்தி.

11. பயோ எத்தனால் தயாரிப்பு.

இந்தியாவின் மொத்த மக்காச்சோளத்தில் உற்பத்தியில் 49% கோழித் தீவனமாகவும், 12% கால்நடைத் தீவனமாகவும், 25% உணவுப் பொருள் உற்பத்திக்கும், 13% ஸ்ட்டார்ச் தயாரிக்கவும், 1% விதையாகவும் நாம் பயன்படுத்துகிறோம்.

விவசாய உற்பத்தியாளர்கள் சங்கம் தொடங்குவோருக்கு, விவசாயம் சார்ந்த தொழில் தொடங்க யோசிப்போருக்கு இந்தச் செய்திகள் பயன்படும்.


மக்காச் சோளம் தொடர்பான தொழில்கள்

மக்காச் சோளத்தில் இருந்து என்னென்ன உணவுப் பொருட்களை தயார் செய்யலாம் ? என்னென்ன இதர பொருள்களை செய்யலாம் ? இதுபற்றி எல்லாம் இந்த கட்டுரையில் விவரமாக தெரிந்துகொள்ளலாம். புதிய தொழில் தொடங்கும் உத்தேசம் உள்ளவர்களுக்கு வேண்டிய தகவல்கள் கிடைக்கும்.

மக்காச்சோள உற்பத்தியில் இருக்கும் முதல் 10 முன்னணி நாடுகளில் இந்தியாவும் ஒன்று

உலக நாடுகளில் மக்காச்சோளம் அதிகம் உற்பத்தி செய்யும் நாடு அமெரிக்கா. நாம் ஆறாவது இடத்தில் உள்ளோம். அமெரிக்காவுக்கு அடுத்ததாக நமக்கு முன்னால் இருக்கும் நாடுகள் சீனா, பிரேசில், அர்ஜென்டினா மற்றும் உக்ரெயின். ஆனால் மக்காச்சோள உற்பத்தியில் இருக்கும் முதல் 10 முன்னணி நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
 

(www.klefmann.com/ Maize Productivity And Use of Crop Protection Products in India)


மக்காச்சோளம் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று

மக்காச்சோளம் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் உலக உற்பத்தியில் 2 முதல் 3 சதம் இந்தியா உற்பத்தி செய்கிறது. உலகில் மக்காச்சோளம் ஏற்றுமதி செய்யும் முதல் ஐந்து நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தோனேஷியா, மலேசியா, வியட்நாம், தைவான், நேபாளம், பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கு தனது மக்காச்சோளம் உற்பத்தியை ஏற்றுமதி செய்கிறது இந்தியா.
 
இந்தியாவில் அதிக மக்காச்சோளம் உற்பத்தி செய்யும் மாநிலம்

ராஜஸ்தான் மாநிலம், கர்நாடகா, ஆந்திரா, உத்தரப் பிரதேசம் ஆகியவை மக்காச்சோள உற்பத்தியில் முன்னணியில் இருப்பதாக செய்திகள் உள்ளது. வேறு சில தகவல்கள் ஆந்திராவில் முன்னணிப் படுத்துகின்றன. இந்த தகவல் படி ஆந்திரா மக்காச்சோள உற்பத்தியில் முன்னணியில் உள்ளது. இரண்டாவதாக இருப்பது கர்நாடகா. மூன்றாவது நான்காவது இடங்களில் இருப்பவை ராஜஸ்தான், மகாராஷ்டிரா, உத்திரப்பிரதேசம் மற்றும் இமாச்சல பிரதேசம்.
 
மக்காச்சோளத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உப பொருட்களை தயாரிக்கலாம்.

மக்காச்சோளத்தில் உணவுப் பொருட்கள் மட்டுமின்றி ஸ்டார்ச்,ண்ணை, புரதம், மதுவகைகள், மருந்துப் பொருட்கள் உற்பத்தி, அழகு சாதனங்கள் நேசவு, ஒட்டும்பசை, பேக்கேஜிங் மற்றும் பேப்பர் உற்பத்திக்கும் பயன்படுகிறது. தொழில் வாய்ப்புக்கள் பயிர் என்பதால் ஆந்திராவில் அதிக கவனம் செலுத்துகிறார்கள் என தோன்றுகிறது.  ஆந்திராவில் சக்கை போடு போடும் மக்காச்சோளம், கவனம் தந்தால் தமிழ்நாட்டிலும் அதே அளவு சாதனையை நிகழ்த்த முடியும். ஆந்திராவில் சில இடங்களில் அமெரிக்காவிற்கு சமமான மகசூலை எடுக்கிறார்கள் மக்காச்சோளத்தில் என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.
 

(www.farmer.gov.in / Farmers Portal – About Maize)


ன் ஐ ஐ ஆர் புராஜெக்ட் கன்சல்டன்சி சர்வீஸஸ் (N I I R PROJECT CONSULTANCY SERVICES)

வேளாண்மை உற்பத்திப் பொருட்களின் மதிப்பு கூட்டுதல் தொழில் தொடங்க ஆலோசனை வழங்குவதற்கென செயல்படும் ஒரு அமைப்பின் பெயர் என் ஐ ஐ ஆர் புராஜெக்ட் கன்சல்டன்சி சர்வீஸஸ்.  இந்த அமைப்பு கீழ்கண்ட தகவல்கள் மற்றும் சேவைகளை தருகிறார்கள்.

1. சந்தை ஆய்வு அறிக்கை (MARKET ANALYSING REPORT)
2. எந்திரங்கள் மற்றும் இதர தளவாடங்கள் (MACHINERIES & EQUIPMENTS)
3 கச்சாப் பொருட்கள் (RAW MATERIALS)
 4 உற்பத்திக்கான தொழில்நுட்பங்கள் (MANUFACTURING TECHNIQUES)

இவைதவிர பேலன்ஸ்ஷீட் தயாரித்தல், பிரேக் வென் பாயின்ட், ரேட் ஆஃப் ரிட்டன் போன்றவை குறித்தும் தொழில் தொடங்க விரும்பும் அனைவருக்கும் இந்த அமைப்பு ஆலோசனை சேவைகளை தந்து உதவுகிறது.

( www.entrepreneurindia.co N I I R PROJECT CONSULTANCY SERVICES)

 

மக்காச்சோளம் தொடர்பான தொழில் செய்யும் தொழிற்சாலைகள்
மக்காச்சோளம் தொடர்பான தொழில்களில் ஏற்கனவே பல தொழிற்சாலைகள் இந்தியாவில் செய்து வருகின்றன. அவற்றில் சிலவற்றை இங்கு தந்துள்ளேன்.

1. அமராவதி அக்ரோ லிமிடெட்
2. பாரத் ஸ்டார்ச் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்   
3.   சிஎல் லிமிடெட்
4. காயத்ரி பயோ ஆர்கானிக்ஸ் லிமிடட்
5. குஜராத் அம்புஜா புரோடீன்ஸ் லிமிடட்
6. குல்ஷான் பாலியால்ஸ் லிமிடட்
7.இந்துஸ்தான் மெய்ஸ் புராடக்ட்ஸ் லிமிடட்
8. இந்தியன் மெய்ஸ் அண்ட் கெமிக்கல்ஸ் லிமிடட்
9. இன்டர்நேஷனல் பெஸ்ட் புட்ஸ் லிமிடெட்
10. ஜெயந்த் விட்டமின்ஸ் லிமிடெட்
11. கே ஜி குளுகோ பயால்ஸ் லிமிடெட்
12. கமலா சுகர்மில்ஸ் லிமிடெட்
13. லட்சுமி ஸ்டார்ச் லிமிடெட்
14. ஆரிஜன் அக்ரோ ஸ்டார் லிமிடெட்
15. ராஜ் அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்
16. ரித்தி சித்தி க்ளுகோ பயால்ஸ் லிமிடெட்
17. சந்தோஷ் ஸ்டார்ச் லிமிடெட்
18. சுக்ஜித் ஸ்டார்ச் அண்ட் கெமிக்கல்ஸ் லிமிடெட்
19. சாயாஜி இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்
20. டேன் இண்டியா லிமிடெட்
21. திருப்பதி ஸ்டார்ச் கெமிக்கல்ஸ் லிமிடெட்
22. யூனிகான் ஆர்கானிக்ஸ் லிமிடெட்
23. யூனிக் சுகர்ஸ் லிமிடெட்
24. யுனிவர்சல் ஸ்டார்ச் கெமிக்கல்ஸ் அலைட் லிமிடெட்
25. வொக்கார்ட் ஹெல்த் கேர் லிமிடெட் 

 (www.entrepreneurindia.co/ Project And Profile Details)

மேலே குறிப்பிட்டுள்ள 25 சாலைகளில் அதிகபட்சமாக ஸ்டார்ச் தயாரிக்கிறார்கள். குளுக்கோஸ் தயாரிக்கிறார்கள். வைட்டமின்கள் தயாரிக்கிறார்கள். ஆனால் நமது மொத்த மக்காச்சோள உற்பத்தியில் 65% கோழி தீவனம் மற்றும் கால்நடை தீவனம் தயாரிக்க பயன்படுகிறது. 25% உணவுப்பொருட்களை தயாரிக்க பயன்படுகிறது. 13 சதம் ஸ்டார்ச் தயாரிக்க பயன்படுகிறது. மக்காச்சோள ஸ்டார்ச்சை மதிப்புக்கூட்டுவதன் மூலம் திரவ குளுகோஸ், கார்ன் க்ளூட்டன், சார்பிட்டால், டெக்ஸ்ட்ரோஸ், மானோஹைற்றேட் ஆகியவை தயாரிக்கிறார்கள்.

முக்கியமான ஐந்து பெரும் பிரிவு தொழில்கள்

ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில்களின் உற்பத்தி கேந்திரமாக உள்ளது மக்காச்சோளம். அவற்றையே ஐந்து பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். ஒன்று ஸ்டார்ச் தொடர்பானவை. இரண்டு உணவுப் பொருட்கள் தொடர்பானவை. மூன்று நெசவுத்தொழில் தொடர்பானவை. 4 காகித உற்பத்தி தொடர்பானவை. ஐந்து மருந்துகள் தயாரிப்பு தொடர்பானவை.

இந்த கட்டுரையில் மக்காச்சோளம் தொடர்பான தொழில் தொடங்க உள்ள வாய்ப்புகள், பிரதான தொழில்கள், மக்காச்சோள தொடர்பான தொழில்செய்யும் தொழில் நிறுவனங்கள் பற்றி எல்லாம் பார்த்தோம். இந்த கட்டுரை பற்றிய உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். எனது மின்னஞ்சலுக்கு எழுதுங்கள். தொலைபேசியில் பேசுங்கள்.
 
தே.ஞான சூரிய பகவான், போன் நம்பர்:+ 91 8526195370, ஈமெயில்: gsbahavan@gmail.com
 


TO HAVE MORE INFORMATIONON RELATED TOPICS


1. மதிப்பு கூட்டுதல் மூலமாக தொழில் தொடங்குவதுதான் இன்றைய இந்தியாவின் முக்கிய தேவை - FOOD PROCESSING  INDUSTRIES - INDIA’S NEED OF THE HOUR – Date of Posting: Feb 06th 2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/food-processing-industries-indias-need.html


2. உணவு பதப்படுத்தும்  தொழில் இன்றைய இந்தியாவின்  தேவை - FOOD PROCESSING  INDUSTRIES -  IMMEDIATE NEED  FOR INDIA – Date of Posting: Feb 06th 2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/food-processing-industries-immediate.html


3. இந்திய உணவு சரித்திரத்தில்  இடம்பெற்ற  பதப்படுத்தும் வியாபார  நிறுவனங்கள்  - PRIMARY PROCESSING CUM  BUSINESS INDUSTRIES OF  INDIAN FOOD HISTORY Date of Posting: Feb 06th 2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/primary-processing-cum-business.html


4. இந்தியாவின் 5 பிரதானமான  உணவு பதப்படுத்தும்    நிறுவனங்கள்  - FIVE PROMINENT FOOD PROCESSING  INDUSTRIES IN INDIA /  Date of Posting: Feb 06th 2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/5-five-prominant-food-processing.html


5. இந்தியாவின் 5 பிரதானமான  உணவு பதப்படுத்தும்    நிறுவனங்கள்  - FIVE PROMINENT FOOD PROCESSING  INDUSTRIES IN INDIA/  Date of Posting: Feb 15th 2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/5-five-prominant-food-processing.html

6. இந்தியாவின்  உணவு பதப்படுத்தும்  தொழில்கள் - பகுதி - 3  FOOD PROCESSING  INDUSTRIES OF INDIA -  PART -3  -  Date of Posting: 20.02.2020 - https://vivasayapanchangam.blogspot.com/2020/02/3-food-processing-industries-of-india.html



சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள் - பூமி ஞானசூரியன், செல்பேசி : 918526195370.



No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...