Friday, December 29, 2017

கழிமுள்ளி - நோய்களை குணப்படுத்தும் மூலிகைச் செடி - HOLY MANGROVE PLANT


 நோய்களை 
குணப்படுத்தும் 
மூலிகைச் செடிகள் 

DISEASE CURING
HERBAL PLANTS
 
சங்க இலக்கியம் 
பேசும் மூலிகைச் செடி  

கழிமுள்ளி  
Holy Mangrove plant

தாவரவியல் பெயர்: அகேன்தஸ் இலிசிபோலியம் (Acanthus ilicifolium)


" கூன் முள் முண்டகக்  கூர்மை பனி மாமலர்,  நூல்அறு முத்தின் காலொடு பாறித், துறைதோறும் பரக்கும் தூமணற் சேர்ப்பனை,
யானும் காதலென். ..     " - 51

- குன்றியனார் (குறுந்தொகை)

 
தமிழ்நாட்டின் முகம் தெரியாத மூலிகைச்செடி. கடலோரத்தில் கவனிக்கப்படாமல் முளைத்துக் கிடக்கும் செடி. சுனாமி புகழ் அலையாத்தி தாவரம் இனம் சார்ந்தது.

இதன் இலைகளின் விளிம்பில் வளைந்த முட்கள் இருக்கும்; வேரின் மூலம் உறிஞ்சும் மிகையான உப்பை இலை மூலம் வெளித் தள்ளும்; பனிக்காலத்தில் பூக்கும்; அழகான  வெளிர்நீலப் பூக்கள்; கழிமுள்ளியின் உதிரிப் பூக்கள் அந்த மணல் பரப்பை மலர் பரப்பாய் மாற்றிவிடும்; அந்தக் காட்சிதான் இந்தப் பாடல்;  பாடல் ஆக்கியவர்  புலவர் குன்றியனார்.

' எனது தோழியின் திருமணத்திற்கு கழிமுள்ளிப் பூக்கள்  மணமேடையை தயார் செய்துள்ளது; தலைவன் வர வேண்டியது மட்டும்தான் பாக்கி; பெரியவர்கள் கூட ஓப்புதல் அளித்துவிட்டார்கள்; எனக்கும் சம்மதம்' என்பதுதான் இந்தப் பாடல் சொல்லும் சேதி.

இந்த கழிமுள்ளி ஆறு மாதம் பூக்கும்; இதன்  விதைப்பை வெடித்தால் விதைகள் ஆறடி தொலைவில் சிதறி விழும்.

பாம்புக்கடி உட்பட பல நோய்களுக்கும் மருந்தாகும் மூலிகை இது; நம் ஊரில்தான் இது ரகசிய மூலிகை; சீனாவில் இது பிரபலம்.

இதற்கு சொந்த ஊர் கழுதைப்பிட்டித்துறை; இலங்கையின் 'புங்குடு' என்னும்  தீவின் ஒரு பகுதி.

இதன் பெயர் தெரியாத நாட்களில்  கழிமுள்ளியை  பலமுறை பார்த்திருக்கிறேன். அடுத்து கடலோரம் போனால் கழிமுள்ளி காணக் கிடைக்கிறதா என்று பாருங்கள்.


888888888888888888888888888


No comments:

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...