புங்கன் பிண்ணாக்கு
காப்பி தக்காளி பயிர்களில்
நூற்புழுக்களை
கட்டுப்படுத்தும்
PUNGAN OILCAKE
CONTROL NEMATODES
IN TOMATO & COFFEE CROPS
வேம்புக்கு அடுத்த
நிலையில் பயிர் பாதுகாப்புக்கு ஏற்றது புங்கன். இலை, விதைப்பருப்பு, எண்ணெய், பிண்ணாக்கு அனைத்தும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும்.
இலைச்சாறு
200 கிராம் புங்கன் இலைகளை
இடித்து அரைத்து கூழாக்கி ஒரு லிட்டர் நீரில் அவற்றை இட்டு, ஒரு இரவு முழுக்க ஊற வைத்து அடுத்தநாள் காலை மெல்லிய துணியில் வடிகட்டி, அத்துடன் 4 கிராம் காதி சோப்புக் கரைசல், கலந்து இலைச்சாறு
தயாரிக்கலாம்.
விதைக்கரைசல்
50 கிராம் புங்கன்
விதைப்பருப்பை பொடித்து தூளாக்கி அதனை ஒரு துணியில் மூட்டையாகக் கட்டி 1 லிட்டர் தண்ணீரில் முக்கி ஒரு இரவு முழுக்க வைத்திருந்து, அடுத்த நாள் காலை துணிமூட்டையை நன்கு
பிழிந்து அத்துடன் 4 மில்லி காதி சோப்புக்
கரைசலைக் கலந்தால் விதைக்கரைசல் தயார்.
பிண்ணாக்குக்கரைசல்
100 கிராம் புங்கன் பிண்ணாக்கை
இடித்து பொடி செய்து அதனை மூட்டையாக ஒரு துணியில் கட்டி ஒரு லிட்டர் தண்ணீர் உள்ள
பாத்திரத்தில் மூழ்கி இருக்குமாறு ஒரு இரவு முழக்க ஊற வைத்து, அடுத்தநாள் காலை மூட்டையை அழுத்திப் பிழிந்து கரைசலை மட்டும் வடித்து அத்துடன்
4 மில்லி காதிசோப்புக் கரைசலை கலந்து பயன்படுத்தலாம்.
எண்ணெய்க்கரைசல்
புங்கன் எண்ணெய்க் கரைசல் நெல் பச்சை தத்துப் பூச்சியைக்
கட்டுப் படுத்தும். இதன் மூலமாக துங்ரோ வைரஸ் நோய் பரவுவதை தடுக்கும். இது நெல்
பயிரைத் தாக்கும் புகையான் பூச்சிகளையும் கட்டுப்படுத்தும். புகையான் பூச்சியைக்
கட்டுப் படுத்தும் திறன் புங்கன் எண்ணெயில், வேம்பு எண்ணெயைவிட சிறப்பாக உள்ளது.
பயிரில் தெளிக்குமபோது புங்கன் எண்ணெய் நன்மை செய்யும்
சிலந்திப் பூச்சிகளையும் பாதிப்பதில்லை.
மரப்பட்டை
புங்கன் பட்டைகளைத் தூளாக்கி தூவுவதன் மூலம் கரையான், கரப்பான் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம். இதனால்தான் புங்கன் மரத்தின்
வைரப்பகுதியை கரையான்கள் தாக்குவதில்லை.
வேறு எவற்றை
கட்டுப்படுத்தலாம் ?
உலர்ந்த புங்கன் தழைகளை குதிர்களில் போட்டுவைத்து, அதில் சேமிக்கும் தானியங்களை, பூச்சிகளிடமிருந்து
பாதுகாக்கலாம்.
நெல் புகையான், கூண்டுப்புழு, மற்றும் காப்பி பச்சை நாவாய்ப்பூச்சி, கடுகுப் பயிரின் அசுவணிப்
பூச்சிகள் ஆகியவற்றை கட்டுப்படுத்த எண்ணெய்க்கரைசல் தெளிக்கலாம்.
புங்கன் பிண்ணாக்கை இட்டு கரும்புப் பயிரைத் தாக்கும்
சிவப்பு எறும்புகள், காப்பி மற்றும் தக்காளி
வயல்களில் வேர்முண்டுகளை காயப்படுத்தும் நூற்புழுக்களையும் கட்டுப்படுத்தலாம். இதர
நூற்புழுக்களின் தாக்குதலும் குறையும்.
FOR FURTHER READING
ON RELATED TOPICS
1. உயிரியல் வழி பயிர்பாதுகாப்பு - BIOLOGICAL CONTROL OF PESTS / Date of Posting : 14.07.2019/ https://vivasayapanchangam.blogspot.com/2019/07/biological-control-of-crop-pests-by-d.html
2. பூச்சிகளை கட்டுப்படுத்தும் கண்ணிப் பயிரும் விளக்குப் பொறியும் - TRAP
CROPS AND LIGHT TRAPS TO CONTROL
CROP PESTS / Date of Posting : 15.11.2017/ https://vivasayapanchangam.blogspot.com/2017/11/organic-farming-trap-crops-light-traps.html
3. இயற்கை வழி பயிர் டானிக் குணபஜலா - KUNABAJALA A CROP TONIC / Date of
Posting : 14.11.2017/ https://vivasayapanchangam.blogspot.com/2017/11/organic-farming-kunapajala.html
4. பல பயிர்களில் பூச்சிகளை கட்டுப்படுத்த
என் பி வி வைரஸ்சை பயன்படுத்துவது எப்படி ? HOW TO USE
NPV VIRUS TO CONTROL PESTS IN MANY CROPS ? / Date of Posting : 14.11.2017/
5. மரங்கள் மற்றும் பயிர்களின்
பாரம்பரிய மருத்துவ நூல் விருக்ஷாயுர்வேதம் - VRIKSHAYURVEDH INDIA'S TRADITIONAL MEDICINAL BOOK FOR PLANTS & TREES/ Date of Posting :
14.11.2017/
6. பயிர்களை பாதுகாக்கும் வேர் உட்பூசணம் என்னும் வேம் EFFECTIVE PLANT PROTECTION
BY V A M / Date of Posting
: 14.11.2017/
7. வசம்பு மூலம் பயிர்பாதுகாப்பு விதைநேர்த்தி
நோய்களிலிருந்து பாதுகாக்கும் - VASAMBU
SEED TREATMENT PROVIDES RESISTANT TO
CROP DISEASES/ Date of Posting : 14.11.2017/ https://vivasayapanchangam.blogspot.com/2017/11/organic-farming-develop-resistance-to.html
8. மலைவேம்பு காய்ப்பொடி
நூற்புழுக்களைக் கட்டுப்படுத்தும்
- MALAIVEMBU CAN BE USED
TO CONTROL NEMATODES /
Date of Posting : 14.11.2017/
9. சீத்தாமரத்தின் இலை, கனி, விதையும் வேரும்கூட பூச்சிகளை
கட்டுப்படுத்தும் SEETHA TREES' LEAVES FRUITS SEEDS AND ROOTS CAN CONTROL CROP PESTS/ Date of Posting
: 14.11.2017/
10. ராம்சீத்தா சாறு உறிஞ்சும் பூச்சிகளை
கட்டுப்படுத்தும் RAMSEETHA
CONTROLS SAP SUCKING PESTS / Date of Posting : 13.11.2017/
11. தென்னையில் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த என்ன செய்ய
வேண்டும் ? HOW TO CONTROL WHITE FLIES
IN COCONUT ? / Date of Posting : 02.11.2017/
12. வேம்பு நூற்றுக்கணக்கான பூச்சிகளைக்
கட்டுப்படுத்தும் - NEEM PRODUCTS WILL CONTROL MORE THAN
100S OF CROP PESTS / Date of
Posting : 28.10.2017/
Authored By: Gnanasuria Bahavan, Editor, Vivasaya
Panchangam, Expert in Agriculture, Conservation of Natural Resources,
Development Communication & authoring books for the rural people.Phone:+91
8526195370, Email:gsbahavan@gmail.com
No comments:
Post a Comment