Wednesday, November 15, 2017

இயற்கை விவசாயம் - பூச்சிகளை கட்டுப்படுத்தும் கண்ணிப் பயிரும் விளக்குப் பொறியும் - PEST CONTROL BY TRAP CROPS & LIGHT TRAPS



இயற்கை விவசாயம்


பூச்சிகளை
கட்டுப்படுத்தும்
கண்ணிப் பயிரும் 
விளக்குப் பொறியும்



PEST CONTROL BY
TRAP CROPS
LIGHT TRAPS



ரசாயன பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தாமல் பூச்சிகளை கட்டுப்படுத்தும் எட்டு வழிமுறைகள் இதில் தரப்பட்டுள்ளன. அதிக செலவில்லாமல் இவற்றை கடைபிடிக்கலாம்.

மீன்எண்ணெய்

மீன்எண்ணெய் திரவசோப் ஒரு கிலோவை ஐம்பது லிட்டர் நீரில் கலந்து தெளித்து மல்லிகை செதில் பூச்சியைக் கட்டுப்படுத்தலாம்.

கண்ணிப் பயிர்கள் 

தட்டைப்பயறு

நிலக்கடலையுடன் தட்டைப்பயறு பயிரை சேர்த்து விதைப்பதால் தத்துப்பூச்சி இலைப் பேன் மற்றும் அசுவணிப் பூச்சிகள் நிலக்கடலையை தாக்குவது குறையும். இந்தப்பூச்சிகள் அனைத்தும் தட்டைப்பயறு பயிரைத் தாக்கும். நிலக்கடலை தப்பித்துக் கொள்ளும்.

செண்டுமல்லி

கோலியஸ் மருந்து பயிரில் வேர்முடிச்சு ந}ற்புழுக்கள் மகசூலைக் குறைத்துவிடும். இந்த வயல் வரப்புகளில் ஊடுபயிராக செண்டுமல்லியை பயிரிடுவதால், இதன் வேர்களிலிருந்து சுரக்கும் ஒருவகை திரவம் இந்த வேர்முடிச்சு நூற்புழுக்களை அழித்துவிடும்.

செங்காந்தள் என்னும் கண்வலிக்கிழங்கு 

இதே போல் செங்காந்தள் பயிரிடும் வயலில் செண்டுமல்லி பயிர் செய்வதால், இதனைத் தாக்கும்  கொண்டைக் கருகல் என்னும் நச்சுயிர் நோயையும் வராமல் தடுக்கலாம்.  

விளக்குப்பொறி

இரவு நேரத்தில் வயலில் விளக்குப் பொறி வைத்து நிலக்கடலை சுருள் பூச்சிகளின் அந்துப் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம்.
இதனால் சுருள் பூச்சியின் தாக்குதலை கணிசமான அளவில் குறைக்க முடியும்.

எருக்கு இலை.

8 முதல் 10 கிலோ எருக்கன் இலைகளை ஒரு பாத்திரத்தில் இட்டு, அவை மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி, 24 மணி நேரத்திற்கு, ஊறவைத்து வடிகட்டி அதனைத் தெளிப்பதன் மூலம் கரையானை தடுக்கலாம்.

பெருங்காயம்.

பழ மரங்களின் வேர்ப்பகுதியில், பெருங்காயத் தூளை இடுவதன்  மூலம், பூக்கள் மற்றும் காய்கள் உதிர்வதைத் தடுக்கலாம். கரைத்தும் ஊற்றலாம். 

கோமியம்

இரண்டு நாட்களுக்கு முன் சேகரித்த பசுமாட்டின் கோமியம் ஒரு லிட்டருடன் 5 லிட்டர் தண்ணீர் சேர்த்த கரைசலில், முளைவிட்ட 35 கிலோ நெல் விதைகளை 30 நிமிடம் ஊற வைத்து 15 நிமிடம் நிழலில் உலர்த்தி விதைக்க, அந்த நெற்பயிர் இலைப்புள்ளி நோய்க்கு எதிர்ப்புத்திறன் பெறும்.
கோமியத்தின் அளவு ஊறவைக்கும் நேரம் ஆகியவற்றை அதிகரித்தால் விதைகளின் முளைப்புத் திறன் பாதிக்கும்.

பசும்பால்

ஒரு லிட்டர் பாலுடன், 5 லிட்டர் தண்ணீர் கலந்து, அதில் 35 கிலோ முளைவிட்ட நெல் விதைகளை முக்கி வைத்து 30 நிமிடம் ஊறவைத்து, பின் நிழலில் உலர்த்தி விதைப்பதன் மூலம், அந்த பயிருக்கு துங்ரோ நோயைப் பரப்பும் பச்சை தத்துப் பூச்சிகளை எதிர்க்கும் சக்தி கிடைக்கும்.
புகையிலை நாற்றுக்களை நடுவதற்கு முன், பாலில் விதைகளை நனைத்து நடுவதனால் தேமல் நோயிலிருந்து பாதுகாப்பு கிடைக்கிறது என்பது ஆந்திரா விவசாயிகளின் அனுபவம்.


FOR FURTHER READING
ON RELATED TOPICS

1. உயிரியல் வழி  பயிர்பாதுகாப்பு  - BIOLOGICAL CONTROL OF  PESTS / Date of Posting : 14.07.2019/ https://vivasayapanchangam.blogspot.com/2019/07/biological-control-of-crop-pests-by-d.html


2. இயற்கை வழி  பயிர் டானிக் குணபஜலா - KUNABAJALA A CROP TONIC / Date of Posting : 14.11.2017/ https://vivasayapanchangam.blogspot.com/2017/11/organic-farming-kunapajala.html


3. பல பயிர்களில் பூச்சிகளை கட்டுப்படுத்த என் பி வி  வைரஸ்சை   பயன்படுத்துவது எப்படி ?    HOW TO USE  NPV VIRUS  TO CONTROL PESTS   IN MANY CROPS  ? / Date of Posting : 14.11.2017/


4. மரங்கள் மற்றும்   பயிர்களின்   பாரம்பரிய   மருத்துவ நூல்                         விருக்ஷாயுர்வேதம் - VRIKSHAYURVEDH  INDIA'S TRADITIONAL  MEDICINAL BOOK  FOR PLANTS & TREES/ Date of Posting : 14.11.2017/


5. பயிர்களை பாதுகாக்கும்       வேர் உட்பூசணம்    என்னும் வேம்    EFFECTIVE PLANT PROTECTION   BY  V A M / Date of Posting : 14.11.2017/


6. வசம்பு மூலம்   பயிர்பாதுகாப்பு   விதைநேர்த்தி  நோய்களிலிருந்து  பாதுகாக்கும்  -   VASAMBU   SEED TREATMENT   PROVIDES  RESISTANT TO   CROP DISEASES/ Date of Posting : 14.11.2017/ https://vivasayapanchangam.blogspot.com/2017/11/organic-farming-develop-resistance-to.html

7. மலைவேம்பு  காய்ப்பொடி  நூற்புழுக்களைக்   கட்டுப்படுத்தும் - MALAIVEMBU  CAN BE USED   TO CONTROL  NEMATODES / Date of Posting : 14.11.2017/


8. சீத்தாமரத்தின்   இலை, கனி,   விதையும்     வேரும்கூட    பூச்சிகளை   கட்டுப்படுத்தும்    SEETHA TREES' LEAVES FRUITS  SEEDS AND ROOTS  CAN CONTROL CROP PESTS/ Date of Posting : 14.11.2017/


09. ராம்சீத்தா   சாறு உறிஞ்சும்   பூச்சிகளை   கட்டுப்படுத்தும்    RAMSEETHA  CONTROLS SAP SUCKING PESTS / Date of Posting : 13.11.2017/


10. புங்கன் பிண்ணாக்கு   காப்பி தக்காளி பயிர்களில்   நூற்புழுக்களை   கட்டுப்படுத்தும்    PUNGAN OILCAKE   CONTROLS NEMATODES  IN TOMATO & COFFEE CROPS / Date of Posting : 13.11.2017/


11. தென்னையில்    வெள்ளை ஈக்களை   கட்டுப்படுத்த   என்ன செய்ய  வேண்டும் ?     HOW TO CONTROL   WHITE FLIES  IN COCONUT ? / Date of Posting : 02.11.2017/


12. வேம்பு   நூற்றுக்கணக்கான   பூச்சிகளைக்   கட்டுப்படுத்தும்  -  NEEM PRODUCTS  WILL CONTROL  MORE THAN  100S OF CROP PESTS  / Date of Posting : 28.10.2017/










No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...