Saturday, November 11, 2017

பஞ்சப்பட்டி ஏரி - தமிழகத்தின் மூன்றாவது பெரிய ஏரி - PANCHAMPATTY LAKE THIRD BIG IN TAMILNADU


பஞ்சப்பட்டி ஏரி -  
தமிழகத்தின் 
மூன்றாவது  
பெரிய ஏரி

PANCHAMPATTY LAKE

THIRD BIG IN TAMILNADU

(இந்த ஏரி சோழர் காலத்தில் வெட்டப்பட்டது; இது   தமிழகத்தின் மூன்றாவது  பெரிய ஏரி; இதன் பரப்பளவு 1200 ஏக்கர். ஊர் பொது மக்கள் ,இளைஞர்கள் , சமூக ஆர்வலர்கள்  மற்றும்  மாணவ மாணவிகளும் இந்த  பஞ்சப்பட்டி ஏரியை சீர் படுத்தும் பணியில் ஈடுபட்டு  வருகிறார்கள். இந்த ஏரி   கரூர் மாவட்டம் குளித்தலையை அடுத்துள்ளது)
 
ஏரியின் பரப்பளவு 1170ஏக்கர்,ஏரியின் நீர் கொள்ளலவு 18 ஆயிரம் கன அடியாகும்.இந்த ஏரி மூலம்  சுமார் 15000 ஏக்கர் விவசாய நிலம் பாசனவசதி பெறும்.இந்த ஏரி நிரம்பினால் தண்ணீர் குளித்தலை அருகே உள்ள தென்கரை வாய்காலில் கலக்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. 
கடவூர் தாலுக்கா பகுதியில் அதிக மழைக்காலங்களில் அங்கிருந்து பஞ்சப்பட்டி ஏரி தண்ணீர் வரும்.இந்த தண்ணீரை பயன்படுத்தி விவசாய பணிகள் நடந்து வந்தன. 
கடைசியாக 2001 ஆண்டு பெய்த கனமழையில் ஏரிக்கு நீர்வரத்து வந்தது .அதன் பிறகு மழைவளம் குறைந்தது மட்டும் அல்லாமல் மழைக்காலங்களில் வருகின்ற குறைந்தளவு நீரையும் ஏரி சென்றடைய விடாமல்  ஏரியில் பல பகுதியில் காரைக்குடி, வேலாயுதம்பாளையம், கொட்டப்பட்டி, ஒத்தைப்பட்டி, கொடிக்கம்புதூர் ஆகிய பகுதியில் ஏரியில் தனிநபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருகிறது. 
மாவட்ட வருவாய்த்துறை, பொதுப்பணித்துறையினர் ஆக்கிரமிப்புகளை ஆய்வு செய்து, நிலப்பகுதியை மீட்க வேண்டும், ஏரிக்கரையையும் பலப்படுத்த வேண்டும்
ஒவ்வொரு ஆண்டும் மழையை எதிர்பார்த்து ஏமாந்து வரும் நமது பஞ்சப்பட்டி,காரைக்குடி,கரட்டுப்பட்டி,கொடிகம்பத்தூர்,சுக்காம்பட்டி,அழகாபுரி,
ரெங்காபாளையம்,ஒத்தப்பட்டி,மலைப்பட்டி,வேலாயுதம்பாளையம்,மாணிக்கப்புரம்,
கொட்டாம்பட்டி மற்றும் குளித்தலை வரையிலான கிராமங்களுக்கு பாசன வசதி கிடைக்கும்.

மாயனூர் காவிரி ஆற்றிலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பஞ்சப்பட்டி ஏரிக்கு மழை காலங்களில் வரும் அதிகப்படியான தண்ணீரை பைப்லைன் மூலம் ஏரிக்கு கொண்டு வந்து விட்டால் விவசாயம் செழிப்படையும்.

அதே போல் ஜேடர்பாளையத்திலிருந்து வெள்ளியனை வழியாக காவிரி நீரை வாய்க்கால் வெட்டி பஞ்சப்பட்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டு வர முன்னாள் முதல்வர் காமராஜர் காலத்தில் சர்வே செய்யப்பட்டது.அதன்படி வாய்க்கால் வெட்டி தண்ணீர் கொண்டுவர ஆவணம் செய்தால் பஞ்சப்பட்டி ஏரிக்கு தண்ணீர் கிடைப்பதோடு விவசாயமும் செழிக்கும்.குடிநீர் பிரச்சனையும் தீரும்.

பஞ்சப்பட்டி ஏரியானது அறியாறு வடிநில கோட்டம், நீர்வள ஆதாரதுறை,திருச்சி. கண்காணிப்பில் உள்ளது.பலமுறை புகார் அளித்த பிறகு   ஏரியின் மராமத்து பணியும்,சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்காக கடந்த பிப்ரவரி மாதம் பொது ஏலம் விடப்பட்டது .8 மாதங்கள் கடந்தும் எந்த விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.இது சம்பந்தமாக பொதுபணி துறையில் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனப்போக்கு காட்டி வருகின்றனர்.
(பகிர்வு: சபரி சுப்பிரமணி)

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...