Monday, November 20, 2017

வைரஸ் நோய்களைக் கட்டுப்படுத்தும் நில வேம்பு NILAVEMBU IMMUNE TO VIRUS DISEASES


வைரஸ் நோய்களைக் 
கட்டுப்படுத்தும்
நில வேம்பு

NILAVEMBU 
IMMUNE TO VIRUS
DISEASES


டெங்குக் காய்ச்சலுக்கு ஆங்கில மருத்துவம் கைக் கொடுக்காததால் அரசு நிலவேம்பு கசாயத்தை சிபாரிசு செய்கிறது. 

நிலவேம்பு கசாயம் சக்கரையின் அளவை கட்டுப் படுத்துகிறது. கட்டுக்குள் வைக்கிறது.

நிலவேம்பு கசாயம் குடிப்பதால், டெங்குக் காய்ச்சல் குறைவதுடன் ரத்தத் தட்டணுக்களை (டீடுழுழுனு Pடுயுவுநுடுநுவுளு) அதிகரிக்கின்றது.

1. கசாயம் தயாரிக்கும் முறைகள்.

1.1.நிலவேம்பு கசாயம் தயாரிப்பு முறை - 1
நிலவேம்பு, வெட்டிவேர், விலாமிச்சை வேர், பேய்ப்புடல், பற்படாகம், சுக்கு, மிளகு, கோரைக் கிழங்கு, ஆகியவற்றை சேர்த்து பொடி செய்து கொள்ள வேண்டும். இதுதான் நிலவேம்பு கசாயம் தயார் செய்வதற்கான  நிலவேம்புப் பொடி.

200 மில்லி நீருடன் நில வேம்புப் பொடி 5 முதல் 10 கிராம் சேர்த்து 50 மில்லியாக சுண்டும் அளவுக்கு கொதிக்க வைத்து இறக்க வேண்டும். இதுதான் நிலவேம்பு கசாயம்.

1.2. நிலவேம்பு கசாயம் தயாரிப்பு முறை - 2
நிலவேம்பு கைப்பிடி அளவு, கண்டங்கத்திரி கைப்பிடி, 10 கிராம் சுக்கு ஆகியவற்றை ஒரு குவளை தண்ணீரில் போட்டு அரை குவளையாகக் காய்ச்சி நாள் ஒன்றுக்கு மூன்றுமுறை குடிக்க மலேரியா மற்றும் சிக்கன் குனியா குணமாகும். 

1.3. நிலவேம்பு கசாயம் தயாரிப்பு முறை – 3
நிலவேம்பு 10 கிராம், கிச்சிலித்தோல் 150 கிராம், கொத்துமல்லி 150 கிராம், ஆகியவற்றை வெந்நீரில் இட்டு மூடி வைத்து ஒரு மணிநேரம் கழித்து வடிகட்டி  பயன்படுத்த டெங்கு, சிக்கன்குனியா, வாத ஜூரம், நீர்க் கோவை, மயக்கம் மற்றும் பலவகை ஜூரங்களும் குணமாகும்.

1.4.நிலவேம்பு கசாயம் தயாரிப்பு முறை – 4
நிலவேம்பு சமூலம் 50 கிராம், வெந்நீர் 1 லிட்டர், கிராம்புத்தூள் அல்லது பொடித்த ஏலம் 5 கிராம் ஆகியவற்றை நீரில் 6 மணிநேரம் ஊற வைத்து வடித்துப் பயன்படுத்த வேண்டும். 

ஒரு வேளைக்கு ஒரு நபருக்கு 30 மில்லி என 2 முதல் 3 நாட்களுக்குக் கொடுக்க முறைச்சுரம், குளிர்ச் சுரம், கீல்பிடிப்பு, செரியாமை ஆகியவை குணமாகும்.

1.5. நிலவேம்பு கசாயம் தயாரிப்பு முறை – 5
நிலவேம்புடன், திப்பிலி, சுக்கு, மற்றும் சீந்தில்கொடி சேர்த்து கசாயம் தயாரித்து எல்லா வைரஸ் நோய்களுக்கும் கொடுக்கலாம். 

2. கசாயத்தைப் பயன்படுத்தும் முறை

2.1. நிலவேம்பு குடிநீரை பெரியவர்களுக்கு 30 முதல் 50 மில்லியும், 12 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு 5 முதல் 10 மில்லி வரை குடிக்கத் தரலாம்; ஒரு வயதுக்கு உட்பட்ட  நிலவேம்பு குழந்தைகளுக்கு நிலவேம்பு கசாயம் தரக்கூடாது.

2.2. காய்ச்சல் உள்ளவர்கள் காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் நிலவேம்பு கஷாயம் குடிக்க வேண்டும்.

2.3. நிலவேம்பு கசாயத்தை தயாரித்த 3 மணி நேரத்திற்குள் சாப்பிடுவதற்கு 15 நிமிடத்திற்கு முன்னர் குடிக்க வேண்டும்.

2.4. டெங்கு மட்டுமின்றி ஃபுளு, சிக்கன்குனியா, பறவைக்காய்ச்சல், போன்ற வைரஸ் காய்ச்சல்களையும் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது நிலவேம்பு. 

2.5. காய்ச்சல் இல்லாதவர்கள் மாதத்தில் ஒரு நாள் அல்லது இரண்டு நாள் குடித்தால் இது மாதிரியான காய்ச்சல்கள் வராது.

2.6. நிலவேம்பு இலைச் சாற்றை குழந்தைகளுக்கு உண்டாகும் வயிற்றுப் பொறுமலுக்கும் கழிச்சல்களுக்கும் தரலாம். 

3. இதன் தாவரவியல் பெயர் ஆணட்;ரோகிராப்பிஸ் பேனிகுலேட்டா (ANDROGRAPIS PANICULATA).

பூமி அறக்கட்டளை, தெக்குப்பட்டு – 635 801
வேலூர் மாவட்டம்
தொலைபேசி எண்: +918526195370

No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...