Sunday, November 26, 2017

அடுத்த தலைமுறை பற்றி நினைப்பவன் தலைவன் - A LEADER ALWAYS THINK ABOUT FUTURE


















அடுத்த தலைமுறை பற்றி 
நினைப்பவன் தலைவன் 

தே. ஞானசூரிய பகவான் 

அடுத்த தலைமுறை பற்றி கவலை 
கொள்பவனே சிறந்த தலைவன்.மகாநதி, 
கோதாவரி,  கிருஷ்ணா,  பாலாறு,  
பெண்ணாறு,  காவேரி இணைப்பு 
திட்டம் என்பது இரண்டு வரிகளில் 
சொல்லி விடலாம்.

ஆனால் நடைமுறையில் ஏகப்பட்ட சிக்கல்கள்.



செய்யமுடியாததை செய்து 
காட்டுவதும் ..... நடைமுறை 
சாத்தியம் இல்லவே இல்லை 
என்று சொல்லப்படுவதை 
உடைத்து அதை செயலாற்றி 
காட்டுவதே தலைவர்களின்  
தனித்தன்மை.

இது வாஜ்பாய்க்கும் பொருந்தும்: மோதிஜிக்கும் பொருந்தும்.



கேவலம் 205 டி.எம்.சி நீருக்காக 
காவிரி விவகாரத்தில் தமிழகமும், 
கர்னாடகமும் அடித்துக்கொள்ளும் 
அவலத்தை போக்கிவிட்டு, எடுத்த 
எடுப்பிலேயே 3000 டி.எம்.சி நீர் 
கோதாவரியில் இருந்து தமிழகம் 
கொண்டுவரும் மகத்தான திட்டத்தை 
முன்மொழிந்துள்ள மோடி அரசை 
பாராட்டாமல் இருக்க முடியாது.

இதனால் 2 கோடியே 50 லட்சம் ஏக்கர் 
நிலங்கள் பாசன வசதி பெறும்.

1 கோடி ஏக்கர் நிலங்களில் நிலத்தடி 
நீர் உயரும். விவசாயம் செழிக்கும். 
வேலை வாய்ப்பு பெருகும்.

கோதாவரி ஆறு மகாராஷ்டிரா மானிலம் 
நாசிக் அருகில் மேற்கு தொடர்ச்சி 
மலையில் உள்ள பிரும்மகிரி மலையில் 
உற்பத்தி ஆகிறது.

மகாராஷ்டிரா, ஆந்திர மாநிலத்தில் 
வளமாக்கிவிட்டு ஆந்திர 
மாநிலத்தின் ஏணாம் கடலில் வங்காள
விரிகூடாவில் கடலில் கலக்கிறது.

1450 கி.மீ பயணிக்கும் கோதாவரி 
வருடம்தோறும் 3000 டி.எம்.சி நீரை 
வீணாக கடலில் கலக்கிறது.

ராஜமுந்திரிக்கு கிழக்கே கெளதமி 
கோதாவரி, வசிஷ்ட கோதாவரி என்று 
இரு பிரிவுகளாகி கடலில் கலக்கிறது.

சென்னைக்கு வடகிழக்கே 600 கி.மீ 
தொலைவில் இருக்கும் கோதாவரி 
இனி திருச்சி வரை பயணிக்க இருக்கிறது.

வரும் பாதைநெடுகில் அனல் மின் 
நிலையம், துணை மின் நிலையம் 
மூலம் மின் உற்பத்தி செய்யவும் 
திட்டமிடப்பட்டுள்ளது.

வாழ்க மோதி ... 
வாழ்க மத்திய  அரசு !




No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...