இயற்கை வழி
பயிர் டானிக்
குணபஜலா
KUNABAJALA
A TRADITIONAL
CROP TONIC
CROP TONIC
குணபஜலா, பஞ்சகவ்யம் இரண்டும் விருக்ஷாயூர்வேதத்தின் பிரபலங்கள்.
பயிர்களின் வளர்ச்சி, பூப்பு, காய்ப்பு, பயிர்பாதுகாப்பு ஆகியவற்றிற்கு அற்புதமான இயற்கையின் ஆயுதம்
குணபஜலா.
தேவைப்படும் பொருட்கள்.
1. முட்டை 3
2. எலும்புத்தூள் 50 கிராம்
3. தவிடு 100 கிராம்
4. பிண்ணாக்கு 100 கிராம்
5. உளுந்துமாவு 50 கிராம்
6. சாணம் 1 கிலோ
7. கோமியம் 1.5 லிட்டர்
8. தேன் 25 கிராம்
9. நெய் 25 கிராம்
10. பால் 100 மிலி
தயாரிப்புமுறை
3 முட்டை, 50 கிராம் எலும்புத்தூள், 100 கிராம் தவிடு, 100 கிராம் பிண்ணாக்கு, 50 கிராம் உளுந்து மாவு, ஆகிய ஐந்து பொருட்களை 500 மில்லி நீருடன் கலந்து நன்கு கொதிக்க வைத்து இறக்கி அதனை குளிர வைக்கவும்.
பின்னர் 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட பாத்திரத்தில் இட்டு, அத்துடன் 1 கிலோ சாணம், 1.5. லிட்டர் கோமியம், 25 கிராம் தேன், 25 கிராம் நெய் மற்றும் 100 மில்லி பால் சேர்த்து, மொத்த
கொள்ளளவு 10 லிட்டர் வருமாறு நீர் சேர்க்கவும்.
பாத்திரத்தை ஒரு துணியினால் வேடுகட்டி, மூடி ஒரு நாள்
வைத்திருக்கவும். இந்த கால கட்டத்தில் காலை மாலை இருமுறை பாத்திரத்தில் உள்ள
கலவையை நன்கு கலக்கிவிட வேண்டும். பின்னர் அத்துடன் மீண்டும் 10 லிட்டர் .நீர் கலந்தால் கரைசல் 20 லிட்டராகும். இதனை நன்கு வடிகட்டி வயலில் தெளிக்கலாம்.
காற்றுப்புகாத இன்னொரு முறையிலும், இதனைத் தயாரிக்கலாம். ஏற்கனவே
சொன்னதுபோல, கலவையை தயார் செய்து பாத்திரத்தை ஒரு மூடியினால் மூடி
தரைக்குள் புதைத்து வைக்க வேண்டும். பின்னர் அதனைத் தோண்டி எடுத்து
அத்துடன் 10 லிட்டர் நீர் சேர்த்தால் 20 லிட்டர் குணபஜலா
கிடைக்கும். இதனை நன்கு வடிகட்டி பயிரில் தெளிக்கலாம்.
இந்த குணபஜலா கலவையை 3 மாதங்களுக்குமேல் கூட புதைத்து வைத்திருந்து, பின்னர் எடுத்து
பயன்படுத்தலாம்.
முட்டைக்கு பதில்
முட்டைக்கு பதில் இறைச்சி
என்றால் 200 கிராம். (அ) சோயா மொச்சை 100 கிராம். (அ) மீன்தூள் 200 கிராம் (அ) பாலாடைக்கட்டி 200 கிராம், என்ற அளவில் பயன்படுத்தலாம்.
குணபஜலா,
பஞ்சகவ்யம் அளவுக்கு
விவசாயிகள் மத்தியில் பரவவில்லை. ஆயினும் அதற்கு சமமான சக்தி படைத்தது குணபஜலா
என்கிறார்கள்.
குணபஜலா - தழுதாழை
தழுதாழை வேர்த்தூளுடன் கோமியம் சேர்த்து, 3 நாட்கள் கோமியத்தில்
ஊறவைத்து, 70 சதத்துடன் 30 சதம் குணபஜலா கரைசல் சேர்த்து
தெளிக்க, பூசணத்தால் ஏற்படும் இலை மற்றும் தண்டுக் கருகல் நோயை கட்டுப்படுத்தும். தாக்குதலுக்கு முன்னதாக தெளிக்க வேண்டும்.
தழுதாழை வேர் மற்றும் இலைகளை பொடிசெய்து, கோமியம் சேர்த்து, மூன்றுநாள் நொதிக்க வைத்து, அதில் 60 சதம் எடுத்து அத்துடன் 10 சதம் பாலும், 30 சதம் குணபஜலாவும் சேர்த்து, மொத்தம் 200 லிட்டர் கரைசல் கிடைக்கும் அளவு தண்ணீரில் கலந்து, பயிர்களின்மீது தெளிக்க
வைரஸ் நோய் வராது.
வளர்ந்த மரங்களுக்கு ஐந்து லிட்டர்.
வைரஸ்நோய் அறிகுறி தோன்றியவுடன், வாரம் ஒருமுறை தெளிக்கலாம். அத்துடன் பயிர்களின் (அ) செடிகளின்
வேர்ப்பகுதிகளிலும், கரைசலை ஊற்றலாம். வளர்ந்த
மரத்திற்கு 5 லிட்டர் வரை, இரு வாரங்களுக்கு ஒருமுறை ஊற்றலாம்.
குணபஜலா - கடுகுத்தூள்
கடுகுத்தூள், தேன், பால் மூன்றையும்
கோமியத்துடன் சேர்த்து, 3 நாட்கள் நொதிக்க வைத்து, 70 சதம் எடுத்துக்கொண்டு
அத்துடன் 30 சதம் குணபஜாலா
கரைசலை சேர்த்து பயிரின் மீது தெளிக்க, இலை அடிச் சாம்பல் நோயை (DOWNY MILDEW) கட்டுப்படுத்தலாம். பயிர்களில் இலைகளை குளிப்பாட்டுவதைப் போல
தெளிக்க வேண்டும்.
குணபஜலா - பால் - தேன்
68 சதம் பால், 2 சதம் தேன், குணபஜலா 30 சதம் சேர்த்து, பயிர்மீது தெளிக்க சாம்பல்
நோய் (POWDERY MILDEW)
கட்டுப்படும். இதனை பூக்கும் தருவாயில் 10 நாள் இடைவெளியில் தெளிக்க
வேண்டும்.
குணபஜலா - வெண்கடுகு
30 சதம் குணபஜலா, 60 சதம் பால், 3 சதம் வெண்கடுகு தூள் சேர்த்து, அத்துடன் 7 சதம் கோமியமும் சேர்த்து நொதிக்க
வைத்து பயிர் இலைகளின்மீது பூக்கும் முன் 10 நாட்கள் இடைவெளியில்
தெளிக்க, துரு நோய் (RUST) கட்டுப்படும். இதனால்; வெண்துரு நோயைக் (WHITE RUST) கட்டுப்படுத்த இயலாது.
வேப்பம்பட்டை - தழுதாழை
வேப்பம்பட்டை மற்றும் தழுதாழை இலைகளை பொடித்த தூள் 30 சதமும், அத்துடன் கோமியம் 70 சதமும் சேர்த்து, 3 நாட்கள் நொதிக்க வைத்து, அதில் விதைகளை ஒரு இரவு
முழுக்க ஊறவைத்து, எடுத்து நிழலில் உலர்த்தி
விதைத்து, வேர்களைத்தாக்கும் நூற்புழுக்களை கட்டுப்படுத்தலாம். செடிகள் மற்றும்
மரங்களுக்கு 5 முதல் 10 லிட்டர் வரை அவற்றின்
வயதுக்கேற்ப வேர்ப்பகுதிகளில் ஊற்றலாம்.
FOR FURTHER READING
ON RELATED TOPICS
1. உயிரியல் வழி பயிர்பாதுகாப்பு - BIOLOGICAL CONTROL OF PESTS / Date of Posting : 14.07.2019/ https://vivasayapanchangam.blogspot.com/2019/07/biological-control-of-crop-pests-by-d.html
2. பூச்சிகளை கட்டுப்படுத்தும் கண்ணிப் பயிரும் விளக்குப் பொறியும் - TRAP
CROPS AND LIGHT TRAPS TO CONTROL
CROP PESTS / Date of Posting : 15.11.2017/ https://vivasayapanchangam.blogspot.com/2017/11/organic-farming-trap-crops-light-traps.html
3. பல பயிர்களில் பூச்சிகளை கட்டுப்படுத்த
என் பி வி வைரஸ்சை பயன்படுத்துவது எப்படி ? HOW TO USE
NPV VIRUS TO CONTROL PESTS IN MANY CROPS ? / Date of Posting : 14.11.2017/
4. மரங்கள் மற்றும் பயிர்களின்
பாரம்பரிய மருத்துவ நூல் விருக்ஷாயுர்வேதம் - VRIKSHAYURVEDH INDIA'S TRADITIONAL MEDICINAL BOOK FOR PLANTS & TREES/ Date of Posting :
14.11.2017/
5. பயிர்களை பாதுகாக்கும் வேர் உட்பூசணம் என்னும் வேம் EFFECTIVE PLANT PROTECTION
BY V A M / Date of Posting
: 14.11.2017/
6. வசம்பு மூலம் பயிர்பாதுகாப்பு விதைநேர்த்தி
நோய்களிலிருந்து பாதுகாக்கும் - VASAMBU
SEED TREATMENT PROVIDES RESISTANT TO
CROP DISEASES/ Date of Posting : 14.11.2017/ https://vivasayapanchangam.blogspot.com/2017/11/organic-farming-develop-resistance-to.html
7. மலைவேம்பு காய்ப்பொடி
நூற்புழுக்களைக் கட்டுப்படுத்தும்
- MALAIVEMBU CAN BE USED
TO CONTROL NEMATODES /
Date of Posting : 14.11.2017/
8. சீத்தாமரத்தின் இலை, கனி, விதையும் வேரும்கூட பூச்சிகளை
கட்டுப்படுத்தும் SEETHA TREES' LEAVES FRUITS SEEDS AND ROOTS CAN CONTROL CROP PESTS/ Date of Posting
: 14.11.2017/
9. ராம்சீத்தா சாறு உறிஞ்சும் பூச்சிகளை
கட்டுப்படுத்தும் RAMSEETHA
CONTROLS SAP SUCKING PESTS / Date of Posting : 13.11.2017/
10. புங்கன் பிண்ணாக்கு காப்பி தக்காளி பயிர்களில் நூற்புழுக்களை கட்டுப்படுத்தும் PUNGAN OILCAKE CONTROLS
NEMATODES IN TOMATO & COFFEE CROPS /
Date of Posting : 13.11.2017/
11. தென்னையில் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த என்ன செய்ய
வேண்டும் ? HOW TO CONTROL WHITE FLIES
IN COCONUT ? / Date of Posting : 02.11.2017/
12. வேம்பு நூற்றுக்கணக்கான பூச்சிகளைக்
கட்டுப்படுத்தும் - NEEM PRODUCTS WILL CONTROL MORE THAN
100S OF CROP PESTS / Date of
Posting : 28.10.2017/
Authored By: Gnanasuria Bahavan, Editor, Vivasaya Panchangam, Expert in Agriculture, Conservation of Natural Resources, Development Communication & authoring books for the rural people.
No comments:
Post a Comment