Friday, November 24, 2017

KNOWLEDGE BASED DEVELOPMENT OF CHANDRABABU NAIDU by gnanasuria bahavan



                                         அறிவு சார்ந்த மேம்பாடு



                                                                      சந்திரபாபு நாயடு

(சமீபத்தில் அமெரிக்காவில் சந்திரபாபு நாயுடு அவர்கள் அவர் ஆற்றிய உரையின் சாராம்சம்)

1. முன்னுரிமை: தகவல் தொழில்நுட்பம் (INFORMATION TECHNOLOGY) மற்றும் அறிவு சார்ந்த மேம்பாட்டிற்கு (KNOWLEDGE BASED DEVELOPMENT) நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம். உலகின் ஒவ்வொரு நான்கு தகவல் தொழில் நுட்ப வல்லுநர்களில் ஒருவர் இந்தியாவைச் சேர்ந்தவர். நான்கு தகவல் தொழில் நுட்ப வல்லுநர்களில் ஒருவர் ஆந்திராக்காரர். மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் சி இ ஓ, கூகிள் சி இ ஓ இந்தியாவைச் சேர்ந்தவாகள்;. ஒருவர் ஆந்திரா. இன்னொருவர்  தமிழ்.

2. தண்ணீர் தட்டுப்பாடு: வளர்ச்சியைப் பொறுத்தவரை வட மாநிலங்களைவிட நாம் உயரமான இடத்தில் உள்ளோம். நமக்குப் பிரச்சினையாக இருப்பது தண்ணீர் தட்டுப்பாடு ஒன்றுதான். அதனால் அதற்கு முக்கியத்துவம் அளிக்கிறோம்.

2.1. ஆறுகளை இணைக்க, அதிக கவனம் செலுத்துகிறேன். நாங்கள் ஒரே ஆண்டில் கோதாவரி கிருஷ்ணா ஆகிய இரண்டு நதிகளை இணைத்துள்ளோம். இதன் மூலம் கிடைக்கும் நீரால் வறட்சியை சமாளிக்க முயற்சி செய்கிறோம். 

2.2. தற்போது 20 லட்சம் ஏக்கர் பரப்பில் நுண்ணீர்ப் பாசனத்தை பயன்படுத்துகிறோம். இந்த பரப்பை விரைவில் ஒரு கோடி ஏக்கராக அதிகப்படுத்த விரும்புகிறோம்.

3. தொழில் முன்னுரிமை: தோட்டக்கலை, கால்நடை வளர்ப்புத் தொழில், மற்றும் அக்வாகல்ச்சர் என்னும் மீன் உற்பத்தி அகியவற்றில் எங்கள் கவனத்தைத் திருப்ப விரும்புகிறோம். எங்களிடம் 970 கி.ம.P நீளமான கடற்கரை  உள்ளது. 

(இந்தியாவின் கடற்கரை நீளம் 7516.6 கி.மீ நீளம், இதில் அந்தமான் தீவுகளின் கடலோரம் 1962 கி.மீ, குஜராத்தின் நீளம் 1214 கி.மீ, ஆந்திராவின் கடலோர நீளம் 973.7 கி.மீ,  தமிழ்நாட்டின் கடற்கரையின் நீளம் 906.9 கி.மீ.) 

4. மண்வளம் காத்தல்: மண்ணில் நுண்ணூட்டச் சத்துக்களை அளிப்பதன் மூலம் மண்வளம் மீட்டு விளைபொருள் உற்பத்திச் செலவை குறைக்க விரும்புகிறேன்.

5. இயற்கை விவசாயம்: மிகப் பெரிய அளவில் இயற்கை விவசாயத்தை பிரபலப்படுத்த விரும்புகிறேன். இன்றைய நிலையில் 2 லட்சம் விவசாயிகள் ஆந்திராவில் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். 

 6. சர்வ தேச நிறுவனங்களுடன் இணைந்நு வேலை பார்த்தல்: சர்வ தேச நிறுவனம் வேர்ல்ட் எகானாமிக் போரம் (WORLD ECONOMIC FORUM), பில் கேட்ஸ் பவுண்டேஷன் (BILL GATES MELINDA FOUNDATION)  போன்ற அமைபபுகளுடன் இணைந்து வேலை செய்கிறோம். ஆவர்கள் நீண்ட காலத்திற்கான பல புதிய அணுகு முறைகளை (Nநுறு ஏஐளுஐழுNளு) கைவசம் வைத்திருக்கிறார்கள்.

7. உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள்: நிறைய அளவில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை (FARMER PRODUCER ORGANIZATION)  உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருகிறோம். 

8. ஏற்கனவே சர்வதேசத் தரத்தில் ஒரு நகரத்தை உருவாக்கியுள்ளோம். தற்போது இரண்டாவது ஒரு நகரத்தை பசுமை நகரமாக உருவாக்க உள்ளோம்.

9. இந்தியாவில் விதை உற்பத்தி செய்வதில் முக்கியமான இரண்டு மாநிலங்களில் ஒன்று மகாராஷ்ட்டிரம், இன்னொன்று ஆந்திரப் பிரதேசம். நாங்கள் விதை உற்பத்தியை இந்தியா முழுமைக்கும் மற்றும் உலகின் பிற நாடுகளின் தேவையையும் நிறைவு செய்ய உள்ளோம்.

19. வேளாண்மை விளை பொருட்களை  சேதாரம் இன்றி சேமித்து விநியோகம் செய்வதற்கு ஏற்ப  கோல்ட் செயின் லின்க்கேஜ் (COLD CHAIN LINKAGE) ம். ஏற்பாடு செய்ய உள்ளோம். (இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத்தின் புள்ளி விவரப்படி ஓர் ஆண்டில் அறுவடைக்குப்பின் சேதாரம் ஆகும் உணவுப் பொருளின் மதிப்பு 90000 கோடி ரூபாய்)

தொகுப்பு: பூமி ஞானசூரியன், செல்பேசி: 918526195370

No comments:

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...