Monday, November 6, 2017

கேரள மழைக் காடுகளின் மூலிகை ஆராய்ச்சியாளர் ஜானகி அம்மாள் JANAGI HERBAL STALWART OF KERALA RAINFOREST


                  கேரள மழைக் காடுகளின்                  
மூலிகை ஆராய்ச்சியாளர் 
ஜானகி அம்மாள்

JANAGI 
HERBAL
STALWART OF
KERALA RAINFOREST
 




பிறந்த தினம் நவம்பர் 4--1897
நினைவு தினம் பிப்ரவரி 1984
 
கேரள மழைக் காடுகளில் இருந்து மூலிகை, பொருளாதார மதிப்புள்ள பல்வேறு தாவரங்களைத் திரட்டியவர்.

ஜானகி அம்மாள் 1897 ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி கேரள மாநிலத்தில் உள்ள தலைசேரியில் பிறந்தார்.இவரின் இயற்பெயர் ஜானகி அம்மாள் எடவலேத்  காக்காட்.தந்தை பகதூர் எடவலேத் கக்கத் கிருஷ்ணன்.இவர் சென்னை மாகாணத்தின் துணைநீதிபதியாகப்பணியாற்றியவர்.
இவரின் தந்தை இயற்கை அறிவியல்,தோட்டக்கலையில் ஆர்வம் கொண்டவர்.

ஜானகி அம்மாள் சிறுவயதில் இருந்தே தோட்டக்கலையில் ஆர்வம் கொண்டிருந்தார்.இவர் தலைசேரியில் பள்ளி படிப்பை முடித்தார்.இவர் சென்னைக்கு வந்து ராணி மேரி கல்லூரியில் தாவரவியல் பாடத்தை எடுத்துப் படித்தார்.தாவரவியலில் இளம்கலைப் பட்டம் பெற்றார்.இவர் சென்னை மாநிலக் கல்லூரியில் ஹானர்ஸ் பட்டம் பெற்றார்.இவர் உயிர் மரபியல் ஆராய்ச்சியில் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபட்டார். இவர் சென்னை மகளிர் கிறிஸ்தவக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார்.

இவர்   பார்பர் நினைவு ஆய்வாளராக அமெரிக்கா மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து முதுநிலைப்பட்டம் பெற்றார். இந்தியா திரும்பினார்.இவர் மீண்டும்சென்னை மகளிர் கிறிஸ்தவக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியை தொடர்ந்தார்.

மீண்டும் மிச்சிகன் பல்கலைக்கழகத்துக்கு சென்று டிஎஸ்சி பட்டம் பெற்றார்.இந்தியா திரும்பிய பின்னர் திருவனந்தபுரம் மஹாராஜா கல்லூரியில்  தாவரவியல் பேராசிரியராக இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர் கோவை கரும்பு வளர்ப்பு நிறுவனத்தில் ஆறு ஆண்டுகள் பணியாற்றினார்.  கோவையில் இவர்  கரும்பு, மூங்கில் ஆகியவற்றின் மரபணு ஆராய்ச்சில் இவரது பணி சிறப்பாகவும் அனைவரும் போற்றக்கூடியதாகவும்  இருந்தது.

பிறகு இலண்டன் ஜான் இன்னஸ் தோட்டக்கலை நிறுவனத்தில் இணை உயிர்க் கல்வியலாளராகப் பணிபுரிந்தார். 1945-ல் உலகப் புகழ்பெற்ற தாவரவியலாளர் சிறில் டார்லிங்கடனுடன் இணைந்து ஒரு அட்லஸை வெளியிட்டனர். இந்த அட்லஸ் பயிரிடப்படும் தாவரங்களின் (The Chromosome Atlas of Cultivated Plants) குரோமோஸோம்களைப் பற்றியதாகும்.

இந்தியத் தாவரவியல் சர்வே அமைப்பை சீரமைத்து ஒருங்கமைக்க ஜவகர்லால் நேருவின் அழைப்பை ஏற்று  இந்தியாவுக்கு வந்தார்.இதில் தலைமை இயக்குநராகப் பணியை தொடர்ந்தார்.அங்கு தனது ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார்.பல கலப்பு மரபின வகைகளை உருவாக்கினார், இவர் மேற்கொண்ட கரும்பு சார்ந்த உயிர்க் கலவியல் ஆய்வுகள் பல சிறப்பினக் கலப்பு, மரபினக் கலப்பு வகைகளை கரும்பையும் அதைச் சார்ந்த புல்லினங்களையும் புற்பேரினங்களையும்  இணைத்து உருவாக்க பல வழிமுறைகளை உருவாக்கினார்.

இவர் பல இந்திய அரசு பணிகளில்  பணிபுரிந்தார். அலகாபாத் நடுவண் தாவர ஆய்வகத் தலைமையேற்றார். ஜம்மு மண்டல ஆர்ராய்ச்சி அய்வகச் சிறப்பு அலுவலராக இருந்தார். சிறிது காலம் அணு ஆராய்ச்சி ஆய்வகத்தில் பணிபுரிந்தார்.1970ல் சென்னைக்கு வந்தார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் தாவரவியல் உயராய்வு மையத்தில் தகவுறு அறிவியலாளராக பணியாற்றினார். சென்னைக்கு அருகில் இருந்த அம்மையத்தின் மதுரவாயல் கள ஆய்வகத்தில் இறப்புவரை பணிபுரிந்தார்.இவர் வெண்கோஷ்டம் (Costus speciosus) மூலிகைச் செடியைப் பயன்படுத்தும் விதங்களை ஆராய்ச்சி செய்தார்.

இவரின் அறிவுரை


இவரின் ஆய்வு பாரம்பரிய தாவரவியல் அறிவை மீட்டெடுப்பதிலும் சேகரம் செய்வதிலும் அமைந்திருந்தது. Ethno-botany என மேற்கத்திய உலகில் அறியப்படும் மக்கள் - குழுக்களின் தாவரவியல் அறிவு இந்தியாவில் பரந்து செழித்து உள்ளது. அதனை அறிய வேண்டியதும் பாதுகாக்க வேண்டியதும் நம் கடமை என்பதை இவர் வளர்ந்துவரும் இந்திய தாவரவியலாளர்களுக்குக் கூறினார்.

விருதுகள்

இவர் 1935இல் இந்திய அறிவியல் கல்விக்கழகத்தின் உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.

1956இல் மிச்சிகான் பல்கலைக்கழகம் தகைமை LL.D. பட்டம் வழங்கி பெருமை படுத்தியது.
இவர் 1957இல் இந்திய தேசிய அறிவியல் கல்விக்கழகத்தின் உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.

1977இல் இந்திய அரசு  இவருக்குப் பத்ம ஸ்ரீ பட்டம் வழங்கியது.
இந்திய அரசி சுற்றுச்சூழல், கானியல் அமைச்சகம்  2000 ஆம் ஆண்டில்  வகைப்பாட்டியலுக்கான தேசிய விருது இவரது பெயரில் நிறுவியது.

ஜானகி அம்மாள் தேசிய விருது


உயிரியல் வகைப்பாட்டியலில் சிறந்த பணிகளுக்கான வளர்ச்சியைத் தூண்டவும், வகைப்பாட்டியலில் இளம்மாணவரையும் அறிவாளிகளையும் ஊக்கப்படுத்தவும் 1999இல் ஜானகி அம்மாள் விருது உருவாக்கப்பட்டது. இரு விருதுகள் உருவாக்கப்பட்டது’ஒன்று தாவரவியல் துறையில் வகைப்பாட்டியலில் சிறந்த பங்களித்தவர்களுக்கும், மற்றொன்று விலங்கியல் வகைப்பட்டியல் அல்லது நுண்ணுயிரியலில் சிறந்த பங்களித்தவர்களுக்கும் வழங்கப்படுகிறது. இவ்விரண்டு விருதுகளும்  முறையே
 
1  ஈ.கே. ஜானகி அம்மாள் நிலைத்தினை வகைப்பாட்டியல் தேசிய விருது  
2 ஈ.கே.  ஜானகி அம்மாள் விலங்கியல் வகைப்பாட்டியல் தேசிய விருது என்றும் வழங்கப்படுகின்றன.

மறைவு 
ஜானகி அம்மாள் 1984 ஆம் ஆண்டு தமது 87 ஆம் அகவையில் மறைந்தார்..

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...