Tuesday, November 14, 2017

பஞ்சகவ்யம் இயற்கை உரம் தயாரிப்பது எப்படி ? HOW TO PREPARE PANCHAKAVYAM NATURAL MANURE ?




பஞ்சகவ்யம் 
இயற்கை உரம் 
தயாரிப்பது எப்படி ?

HOW TO PREPARE
PANCHAKAVYAM
NATURAL MANURE ?


பசுவிலிருந்து கிடைக்கும், சாணம், கோமியம், பால், தயிர், நெய், ஆகிய ஐந்து பொருட்களிலிருந்து தயாரிக்கப் படுவதுதான் பஞ்சகவ்யம். இது உரத்திற்கு உரமாகும், மருந்துக்கு மருந்தாகும். இதனை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.

தயாரிக்க தேவைப்படும் பொருட்கள்.

1.            சாணக்கரைசல்      ---   500 மி;லி
2.            கோமியம்            300 மி;லி
3.            பசும்பால்         ….   200 மிலி
4.            தயிர்               200 மிலி
5.            நெய்               100 மி;லி
6.            மஞ்சள் வாழைப்பழம்    2 
7.            இளநீர்              300 மிலி 

மொத்தம்         ….  1.200 மி;லி

தயாரிப்பு முறை

மேலே குறித்துள்ள 7 பொருட்களையும் ஒரு மண்பாணையில் போட்டு, நன்றாக கலந்து, 10 நாட்களுக்கு திறந்தே வைத்து, தினமும் நன்கு கலக்கி வந்தால் 11 வதுநாள் பஞ்ககவ்யம் தயாராகிவிடும்.

பஞ்சகவ்யம் 500 மில்லிக்கு 10 லிட்டர் நீர் என்ற அளவில் கலந்து பயிரில் தெளிக்கலாம்.

இதனை உரமாகவும், பூச்சி மற்றும் பூசணக் கொல்லி மருந்தாகவும் உபயோகப்படுத்;தலாம்.

 5% பஞ்சகவ்ய கரைசலை நெல் பயிரில் தெளிக்க, இலைப்புள்ளி நோய் அற்புதமாகக் கட்டுப் படும். இதற்கு 50 மில்லி பஞ்சகவ்யத்தை 1 லிட்டர் நீரில் நன்கு கரைத்துத் தெளிக்க வேண்டும்



Authored By: Gnanasuria Bahavan, Editor, Vivasaya Panchangam, Expert in Agriculture, Conservation of Natural Resources, Development Communication & authoring books for the rural people.



No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...