தென்னையில்
வெள்ளை ஈக்களை
கட்டுப்படுத்த
என்ன செய்ய
வேண்டும் ?
HOW TO CONTROL
WHITE FLIES
IN COCONUT ?
என்ன செய்ய
வேண்டும் ?
HOW TO CONTROL
WHITE FLIES
IN COCONUT ?
IT IS NOT PRACTICALLY CAUSING ANY ECONOMIC CROP LOSS AND, THEREFORE, THERE IS ABSOLUTELY NO NEED FOR ANY PANIC - Central Plantation Crops Research Institute, Kasrcod, Kerala, India.
வெள்ளை ஈக்களின் தாக்குதல் அதிகம் இருக்கும் சமயம் 0.5 % வேப்ப எண்ணையை தெளிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
பொள்ளாச்சி பகுதியில் தென்னை
சாகுபடியாளர்களை, இப்போது பயமுறுத்திக் கொண்டிப்பது,
ரூகோஸ் ஸ்பைரலிங்
ஒயிட் பிளை (RUGOSE SPIRALLING WHITE FLY) என்று சொல்லக் கூடிய வெள்ளை ஈக்கள்.
இதன் அறிவியல் பெயர் அலிரோடைகஸ் ரூஜியோபெர்குலேட்டஸ்
(ALEURODICUS RUGIOPERCULATUS).
இது முதன் முதலாக தமிழ்நாட்டில் பொள்ளாச்சியிலும், கேரளாவில் பாலக்காட்டிலும்
சென்ற ஆண்டு (2016) தன் கைவரிசையைக் காட்டியது.
சர்வ தேச அளவில் 2004 ம் ஆண்டு புளோரிடாவில்
அறிமுகமான இந்த ரூ. வெ. ஈ. 2009 ம் ஆண்டு அங்கு தென்னையைத்
தாக்கி பயமுறுத்தியது.
தென்னை ஓலைகளின் அடிப்பகுதியில் இருந்தபடி இந்த வெள்ளை ஈக்கள், சாற்றை உறிஞ்சித் தாக்கும்; இவை சுரக்கும் தேன் போன்ற திரவம்
ஓலைகளின் மேற் பரப்பில் படிந்திருக்கும்; இந்தத் தேன்,
எறும்புகளைக்
கவருவதுடன் ஒரு வகை கரும் பூசணத்தை உருவாக்கும்; இதனை கரும்பூணம் (SOOTY MOULD) என்கிறார்கள்.
வெள்ளை ஈக்கள் குறித்து தென்னை சாகுபடியாளர்கள் பயப்பட வேண்டும் என்று
ஆராய்ச்சியாளர்கள் (SCIENTISTS OF PLANTATION CROPS RESEARCH INSTITUTE, KASARCODE, KERALA, INDIA), சொல்லுகிறார்கள்.
அவர்கள்
சொல்லும் வாசககம் "IT IS NOT PRACTICALLY CAUSING ANY ECONOMIC CROP LOSS AND, THEREFORE, THERE IS ABSOLUTELY NO NEED FOR ANY PANIC" இதுதான்.
இதனை மிகவும் ஜாக்கிரதையாக கட்டுப் படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. வேப்ப
எண்ணெய் மூலம் இதனை கட்டுப் படுத்த முடியும் என்றால் கூட மிக வேகமாக பரவும் இதனைக்
கட்டுப்படுத்த வேண்டுமானால் ஒட்டுண்ணிகளை போர்க்கால அடிப்படையில் பயன்படுத்த
வேண்டும். ஏனென்றால் இந்த வகை வெள்ளை ஈக்கள், 200 விதமான தாவரங்களைத் தாக்கும் என்கிறார்கள்.
இவை கொய்யா, வாழை, ராம்சீத்தா, மா, பலா, சாதிக்காய், சேம்பு, முள் சீத்தா, குடம்புளி, புளிச்சக்காய் ஆகியவற்றைத் தாக்கும்.
இதுதான் அறிவியல் வல்லுகளின் பரிந்துரைகள்.
1. கரும்பூசணம் பாதிக்கப் பட்ட மரங்களில் 1 % ஸ்டார்ச் தெளிக்கலாம்.
2. பசை தடவிய மஞ்சள்
நிற அட்டைகளை மரங்களின் அடிப்பகுதியில் அல்லது மரங்களுக்கு ஊடாக நிறுத்தி வைப்பதன்
மூலம் (YELLOW STICK TRAP) வளர்ந்த வாலிபமான வெள்ளை
ஈக்களைக் கட்டுப் படுத்தலாம்.
3. என்கார்சியா ஸ்பீசிஸ் (ENCARCIA SPECIES) என்னும் ஒட்டுண்ணிகளை
வெள்ளை ஈக்களின் தாக்குதல் உள்ள இடங்களில் விட வேண்டும்.
4. வெள்ளை ஈக்களின் தாக்குதல் அதிகம் இருக்கும் சமயம் 0.5 % வேப்ப எண்ணையை தெளிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.
இது சம்மந்தமாக மேலும் தகவல் பெற கீழ்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்.
ICAR
– CENTRAL PLANTATION CROPS RESEARCH
INSTITUTE, KASARCODE, KERALA, INDIA.
குறிப்பு: ஓட்டுண்ணிகள் வேலை செய்ய வேண்டுமானால் பூச்சி மருந்தைத் தெளிக்கக்
கூடாது.
FOR FURTHER READING
ON RELATED TOPICS
1. உயிரியல் வழி பயிர்பாதுகாப்பு - BIOLOGICAL CONTROL OF PESTS / Date of Posting : 14.07.2019/ https://vivasayapanchangam.blogspot.com/2019/07/biological-control-of-crop-pests-by-d.html
2. பூச்சிகளை கட்டுப்படுத்தும் கண்ணிப் பயிரும் விளக்குப் பொறியும் - TRAP
CROPS AND LIGHT TRAPS TO CONTROL
CROP PESTS / Date of Posting : 15.11.2017/ https://vivasayapanchangam.blogspot.com/2017/11/organic-farming-trap-crops-light-traps.html
3. இயற்கை வழி பயிர் டானிக் குணபஜலா - KUNABAJALA A CROP TONIC / Date of
Posting : 14.11.2017/ https://vivasayapanchangam.blogspot.com/2017/11/organic-farming-kunapajala.html
4. பல பயிர்களில் பூச்சிகளை கட்டுப்படுத்த
என் பி வி வைரஸ்சை பயன்படுத்துவது எப்படி ? HOW TO USE
NPV VIRUS TO CONTROL PESTS IN MANY CROPS ? / Date of Posting : 14.11.2017/
5. மரங்கள் மற்றும் பயிர்களின்
பாரம்பரிய மருத்துவ நூல் விருக்ஷாயுர்வேதம் - VRIKSHAYURVEDH INDIA'S TRADITIONAL MEDICINAL BOOK FOR PLANTS & TREES/ Date of Posting :
14.11.2017/
6. பயிர்களை பாதுகாக்கும் வேர் உட்பூசணம் என்னும் வேம் EFFECTIVE PLANT PROTECTION
BY V A M / Date of Posting
: 14.11.2017/
7. வசம்பு மூலம் பயிர்பாதுகாப்பு விதைநேர்த்தி
நோய்களிலிருந்து பாதுகாக்கும் - VASAMBU
SEED TREATMENT PROVIDES RESISTANT TO
CROP DISEASES/ Date of Posting : 14.11.2017/ https://vivasayapanchangam.blogspot.com/2017/11/organic-farming-develop-resistance-to.html
8. மலைவேம்பு காய்ப்பொடி
நூற்புழுக்களைக் கட்டுப்படுத்தும்
- MALAIVEMBU CAN BE USED
TO CONTROL NEMATODES /
Date of Posting : 14.11.2017/
9. சீத்தாமரத்தின் இலை, கனி, விதையும் வேரும்கூட பூச்சிகளை
கட்டுப்படுத்தும் SEETHA TREES' LEAVES FRUITS SEEDS AND ROOTS CAN CONTROL CROP PESTS/ Date of Posting
: 14.11.2017/
10. ராம்சீத்தா சாறு உறிஞ்சும் பூச்சிகளை
கட்டுப்படுத்தும் RAMSEETHA
CONTROLS SAP SUCKING PESTS / Date of Posting : 13.11.2017/
11. புங்கன் பிண்ணாக்கு காப்பி தக்காளி பயிர்களில் நூற்புழுக்களை கட்டுப்படுத்தும் PUNGAN OILCAKE CONTROLS
NEMATODES IN TOMATO & COFFEE CROPS /
Date of Posting : 13.11.2017/
12. வேம்பு நூற்றுக்கணக்கான பூச்சிகளைக்
கட்டுப்படுத்தும் - NEEM PRODUCTS WILL CONTROL MORE THAN
100S OF CROP PESTS / Date of
Posting : 28.10.2017/
பூமி, ஞானசூரியன்,செல்பேசி: +918526195370
No comments:
Post a Comment