Sunday, October 8, 2017

தணக்கு அழகு மரம் THANAKKU BEAUTIFUL GARDEN TREE



                                                                               தணக்கு அழகு மரம் 
        THANAKKU BEAUTIFUL GARDEN TREE
தணக்கு  விதைகள் 

1. மரத்தின் தமிழ்ப் பெயர் : தணக்கு.

2. தாவரவியல் பெயர்  : GYROCARPUS AMERICANUS
  
3. பொதுப்பெயர் / ஆங்கிலப்பெயர் :--  HELICOPTER TREE
4. தாவரக்குடும்பம் :  ஹெர்மான்டேசி (HERMANDIACEAE).

5. மரத்தின் வகை  : அலங்கார அழகுமரம்.
  
6. தழை : விளை நிலங்களுக்கு தழை உரமாகும்.
  
7. கொட்டைகள் : ஜெப மாலைகள் செய்ய பயனாகிறது.
  
8. விதை : சோப்பு தயாரிக்க விதை எண்ணெய்த் தரும்.
   
9. பூக்கள் : வீட்டு முகப்பிற்கும், தோட்டத்திற்கும், சாலை ஓரங்களுக்கும், சுற்றுப்புறத்திற்கும் அழகூட்டும் அலங்கார அழகு மரம்; ஜனவரி - பிப்ரவரி மாதத் தேனீக்களுக்கு தேன் தரும். பார்க்க அழகான மஞ்சள் நிற பூக்கள். ஆனால் மூக்கைப் படித்துக் கொண்டுதான் மரத்திற்கு அருகே செல்ல முடியும்; அவ்வளவு அருவருப்பான மணம் கொண்டவை.

10. மரம் : தோணிகள், படகுகள், கட்டுமரங்கள் செய்யவும், பொம்மைகள், பெட்டிகள், பென்சில்கள், காகிதம் தயாரிக்க மற்றும் இலைகள், கிளைகள், மரம், ஆகியவை அடுப்பெரிக்க விறகு தரும்; அது மட்டுமல்ல வீசும் காற்றின் வேகத்தை தடுத்து, தூசியினை வடிகட்டி       காற்றைத்  தூய்மைப்படுத்தும்.


11. மரத்தின் தாயகம் :   இந்தியா 

12. ஏற்ற மண் :  செம்புறை செம்மண்.

13. நடவுப் பொருள் : விதை,  நாற்று,   வேர்க்குச்சி.

14. மரத்தின் உயரம்  :--   15  மீட்டர். 

 பூமி ஞானசூரியன், செல்பேசி: +918526195370

No comments:

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...