Monday, October 23, 2017

SWEET BROOM WEED - சக்கரை வேம்பு - 1



                                                             

  சக்கரை வேம்பு

    (SCOPARIA DULCIS)


சரக்கொத்தினி, கல்லுருக்கி என்றும் தமிழ் மூலிகை சக்கரை வேம்பு.

சக்கரை நோய், ரத்த அழுத்தம், சிறுநீரகக் கல், மஞ்சள் காமாலை, ஆஸ்துமா வயிற்று உபாதைகள், பாம்புக்கடி, பல்வலி,  ஆகிய பெரிய நோய்களுக்கான மருந்துகள் தயாரிக்க பயன்படும் சிறு செடி இது.

இந்தியாவில் நீரிழிவுக்கும், தைவானில் ரத்த அழுத்தத்திற்கும், பிரேசிலில் ரத்தப்போக்கு, ரத்த காயங்களுக்கும், நிகராகுவாவில் ரத்தச்சோகை மற்றும் தலைவலிக்கும் காலங்காலமாக தங்களின் பாரம்பரிய வைத்திய முறைகளில் சக்கரை வேம்புவைப் பயன்படுத்துகிறார்கள். 

இதன் பொதுப் பெயர் ஸ்வீட் புரூம் வீட் (SWEET BROOM WEED);  ஸ்கோப்பேரியா டல்சிஸ் (SCOPARIA DULCIS) என்பது இதன் தாவரவியல் பெயர்; ஸ்குரோப்புலேரியேசியே (SCROPULARIACEAE) தாவர குடும்பத்தைச் சேர்ந்தது.

தென் அமெரிக்கா உட்பட அமெரிக்காவின் வெப்ப மண்டலப்பகுதிகள் இதன் தாயகம்;. இதனை நியோ டிராப்பிக்ஸ் (NEO TROPICS). அமேசோனியா, கரிபியன், சென்ட்ரல் அமெரிக்கா, சென்ட்ரல் ஆண்டஸ், ஈஸ்டர்ன் சவுத் அமெரிக்கா, நார்தன் ஆண்டஸ், ஒரினாகோ, சதர்ன் சவுத் அமெரிக்கா போன்றவை நியோ டிராப்பிக்ஸ் ’ ல் அடங்கும். 

செடி செங்குத்தான நேர்கோடு மாதிரி ஒரு மீட்டர் உயரம் வரை வளரும்; மங்கலான வெள்ளைப் பூக்கள் இலைக் கணுக்களில் பூக்கும்.

பூமி ஞானசூரியன், செல்பேசி : +918526195370

Ref: www.flowersof india.net, www.en.wikipedia.org ,  




No comments:

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...