சுந்தர வேம்பு அழகு பூமரம்
SUNDARAVEMBU MOST BEAUTIFUL FLOWERING TREE
சந்தன வேம்பு , செவ்வகில், சுந்தரவேம்பு, தூணமரம் என்று பல பெயர்களில் அழழக்கப் படுகிறது.
சிவப்பத் தங்கம் என்பது சுந்தர வேம்பின் செல்லப் பெயர். ஆஸ்திரேலியக் குடியேறிகள் 18, 19 நூற்றாண்டு வாக்கில் வைத்த பெயர்.
1. மரத்தின் தமிழ்ப் பெயர் : சுந்தரவேம்பு
2. தாவரவியல் பெயர் : TOONA CILIATA
3. பொதுப்பெயர் ஃ ஆங்கிலப்பெயர் : INDIAN RED CEDAR TREE
4. தாவரக்குடும்பம் : மிலியேசி (MELIACEAE)
5. மரத்தின் வகை : அலங்கார அழகுமரம்.
6.தழை : சுந்தரமான தழை அமைப்புடையது. செப்டெம்பர் அக்டோபர் மாதங்களில் இதன் தழைகளே பூக்களாக நிறம் மாறி நம் கண்களை ஏமாற்றும். சிவப்பு வண்ணப் பூக்களை சொரிந்து சுற்றுப்புறத்திற்கு அழகூட்டும் அலங்கார அழகுமரம். .தழை ஆடுகளை கொழுக்கச் செய்யும்.
7. பூக்கள் : கம்பளி மற்றும் துணி வகைகளுக்கு சிவப்புசாயம் ஏற்ற பூக்களைத் தரும். தேனீக்களுக்கு சிவப்பு மலர்க்கோப்பைகளில் தேன் தரும்.
8. விதை, கால்நடைகளுக்கு ருசியாள உணவாக நெற்றுக்கள் தரும் மரம்.
9. மரம் : மரச் சாமான்கள், கட்டிட கட்டுமானப் பொருட்கள், ஒட்டுப்பலகை தயாரிக்க மரம் தரும.; மேஜை நாற்காலிகள், கட்டிடச் சாமான்கள், கோல்ப், டென்னிஸ் மற்றும் கிரிக்கட் மட்டைகள், வேளாண் கருவிகள், கடைசல் வேலைகள், காகிதம் தயாரிக்க, போன்றவற்றிற்கு உதவும் மரம்.
10.இலை, கிளை, மரம் : அடுப்பெரிக்க விறகாகும்.
12. சுற்றுச் சூழல் : வீசும் காற்றின் வேகத்தை தடுத்து, தூசியினை வடிகட்டி காற்றை தூய்மைப்படுத்தும் மரம்.
13. மரத்தின் தாயகம் : இந்தியா.
.
14. ஏற்ற மண் : செழிப்பான மண்.
14. ஏற்ற மண் : செழிப்பான மண்.
15. நடவுப் பொருள் : காற்றின் மூலம் பரவும் விதை விதை.
16. மரத்தின் உயரம் : 60 மீட்டர்.
17.மரம் இருக்கும் இடம் : கோயம்புத்தூர் , கன்னியாகுமரி, சேலம், திருவண்ணாமலை, நீலகிரி, தர்மபுரி, திருச்சிராப்பள்ளி மற்றும் திருநெல்வேலி.
பூமி ஞானசூரியன், செல்போன் : +918526195370
Ref: 1. Flora
of Tamil Nadu, VOL. I, 1983; Matthew, 1983 2. Flora of Tamil Nadu, VOL. I, 1983;
Decandolle, 1908
No comments:
Post a Comment