Wednesday, October 18, 2017

SEVEN TYPES OF CLOUDS IN TAMIL LITERATURE - பரிபாடல் சொல்லும் ஏ ழு வகை மேகங்கள்



  தமிழ் சொல்லும் 

ஏழு வகை 

மேகங்கள்

 

SEVEN TYPES 

OF CLOUDS IN 

TAMIL LITERATURE



ஆனால் சங்க இலக்கியம் பரிபாடல் ஏழு வகை மேகங்கள் பற்றி சொல்லுகிறது. 

புட்கலம், சம்வர்த்தம், ஆவர்த்தம், சங்காரித்தம், துரோணம், காளமுகி, நீலவருணம் - இவைதான் அந்த  ஏழு வகை மேகங்கள். அநேகமாய் இவற்றிற்கு தமிழ் பெயர்கள் இருக்கக்கூடும்

" ஊழிக்கால முடிவின்போது இந்த ஏழு மேகங்களும் இடைவிடாது பெய்தது. இந்த உலகம் முழுகி விடுமோ என்ற பயம் ஏற்பட்டது. அந்த சமயம் திடுமென ஒரு அன்னப் பறவை தோன்றியது. அத்தனை மழை நீரையும் தனது சிறகால் வற்றச் செய்தது " அன்னமாக வந்தது  வேறு யாரும் அல்ல உலகளந்த திருமால்தான்.

“… ஊழி ஆழிக்கண், இருநிலம், உரு கெழு
கேழலாய் மருப்பின் உழுதோய்’ எனவும்
மா விசும்பு ஒழுகு புனல் வறள அன்னச்
சேவலாய்ச் சிறகர்ப் புலர்த்தியோய்…” – பரிபாடல்

விவசாயக் கல்லூரியில் மேகங்கள்பற்றி சொல்லிக் கொடுத்தார்கள் . நான் ஆச்சரியப் பட்டிருக்கிறேன். எந்த மேகம் மழை பெய்யும் ? எந்த மேகம் மழை பெய்யாது ? எந்த மேகம் கம்மியாய் பெய்யும் ? எந்த மேகம் டம்மியான மேகம் ? எல்லாம் சொன்னார்கள்.

விஞ்ஞானம் சொல்லும் மேகங்கள் பத்து. அவை, சிர்ரஸ்(CIRRUS), சிர்ரோ ஸ்ட்ரேட்டஸ் (CIRRO STRATUS), சிர்ரோ குமுலஸ்(CIRRO CUMULUS), ஆல்டோ ஸ்ட்ரேட்டஸ்(ALTO STRATUS), ஆல்டோ குமுலஸ்(ALTO CUMULUS), நிம்போ ஸ்ட்ரேட்டஸ்(NYMBO STRATUS), குமுலஸ் (CUMULUS), ஸ்ட்ரேட்டஸ் (STRATUS), குமுலோ நிம்பஸ்;(KUMULO NYMBUS).

REF: 1. பரிபாடல்(சங்க இலக்கிய நூல்களில் பண்ணோடு படப்பட்ட நூல். எழுபது பாடல்களைக் கொண்ட இதில் அன்று கிடைப்பவை 22 மட்டுமே)
 
2.www.srh.noaa.gov / National weather service / Ten Basic Cloud Types


பூமி ஞானசூரியன், செல்பேசி: +918526195370

No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...