Wednesday, October 4, 2017

ரசகுல்லா அழகு பூ மரம் RASAGULLA BEAUTIFUL FLOWERING TREE


ரசகுல்லா அழகு பூ மரம்
RASAGULLA BEAUTIFUL FLOWERING TREE


(இந்த மரத்தின் இரண்டு இலைகள் ஒரே மாதிரியாய் இருக்காதாம். ஆதனால் இதற்கு பைத்தியக்கார மரம் (MAD TREE) என்ற பெயர் உண்டு. வங்காளத்தைச் சேர்ந்தவர்கள் இதனை ரசகுல்லா மரம் என்று இனிக்க இனிக்க அழைக்கிறார்கள்)

(குறிப்பு : புத்தா கோகனட் என்ற பொதுப் பெயர் உள்ளதால் இந்த மரத்திற்கும் புத்தருக்கும் எவ்விதமான சம்மந்தமும் கிடையாது)

1. மரத்தின் தமிழ்ப் பெயர் :  கொடைத்தோண்டி
2. தாவரவியல் பெயர் : PTERYGOTA ALATA
3. பொதுப்பெயர் ஃ ஆங்கிலப்பெயர் : புத்தா கோகோனட் (BUDHA COCONUT TREE)
4. தாவரக்குடும்பம்  :  ஸ்டெர்குலியேசியே (STERCULIACEAE)
5. மரத்தின் வகை  :  அழகு மரம்

6. தழை : விளை நிலங்களுக்கு தழை உரமாகும்  
7. பூக்கள் : மஞ்சள்நிறப்பூக்களை பச்சை இலைகளின் ஊடே நிறைத்துக்கொண்டு  சுற்றுப்புறத்திற்கும் வீட்டிற்கும்  மெருகுட்டும்;. 
8. மரம், பெட்டிகள் செய்யவும் , ஒட்டுப்பலகைகள் செய்யவும், மேஜை நாற்காலிகள் செய்யவும்,  மரம்  தரும்  மரம்.
9. மரம், தீப்பெட்டிகள் ,தீக்குச்சிகள் செய்ய மரம் தரும் மரம்.
10. மரம் , காகிதம் தயாரிக்க காகிதக் குழம்புதரும் 
    மரம் தரும் மரம் .
11. பூக்கள், வசந்தகாலத்  தேனீக்களுக்கு  மஞ்கள் மலர்க்
கோப்பைகளில் தேன் தரும் பூக்களைத் தரும் மரம்.
12. இலைகள், கிளைகள், மரம் : அடுப்பெரிக்க விறகாக
13. வீசும் காற்றின் வேகத்தை தடுத்து, தூசியினை வடிகட்டி காற்றைதுத் தூய்மைப்படுத்தும்.

14. மரத்தின் தாயகம் :  இந்தியா  --   இமயமலை  
15. ஏற்ற இடம் :  வடிகால் வசதி உள்ள மண், ஈரச்செழிப்பு, சூரிய ஒளி முழுசாய் வேண்டும்.
16. நடவுப் பொருள் : பதியன்கள், போத்துகள்
17. மரத்தின் உயரம் :   45  மீட்டர்.
18. மருத்துவப்பயன் : தோல் சம்மந்தமான நோய்கள், உடல்; ஜூரம், சிறு காயங்கள் போன்றவற்றிற்கு இதனைப் பயன்படுத்துகிறார்கள்.

பூமி ஞானசூரியன், செல்பேசி :  +8526195370


Ref: www.flowers of india.net, www.efloraof india.co, www.blog.nurserylive.com

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...