புரசு
கிளிமூக்கு பூக்கள்
தரும் அழகு மரம்
PURASU WITH
PARROT BEAK FLOWERS
(புரசு மரப் பூ இல்லாமல் சாந்தி நிகேதனில் இந்தப் பூஜையும் நடைபெறாது; கவி தாகூருக்கு பிடித்தமான மரம்; கல்கத்தாவிலிருந்து 150 கிலோ மீட்டர் தொலைவில், இந்த மரத்தின் பெயரில் (பலாஷி) ஒரு ஊரே உள்ளது. இங்குதான் பிளாசி யுத்தம் (23 ஜூன் 1757) நடந்தது. அப்போதுதான் கல்கத்தா வெள்ளைக்காரர் வசமானது)
1. மரத்தின் தமிழ்ப் பெயர் : புரசு
2. தாவரவியல் பெயர் : பூட்டியா மானோஸ்பெர்மா (BUTEA MONOSPERMA)
3. பொதுப்பெயர் ஃ ஆங்கிலப்பெயர் : பிலேம் ஆப் பாரெஸ்ட் (FLAME OF FOREST)
4. தாவரக்குடும்பம் : பாபேசி (FABACEAE)
5. மரத்தின் வகை : அழகு மரம்.
6. தழை : விளை நிலங்களுக்கு தழை உரமாகும்; கால்நடைகளுக்கு தீவனமாகும்
7. பட்டை : பட்டையில் வடியும் பிசின், கருப்பு சாயம் தயாரிக்க உதவும்; அரக்கு பூச்சிகளுக்கு ஆதரவு அளிக்கும்.
8. பூக்கள் : பிப்ரவரி, மார்ச் மாத தேனீக்களுக்கு செம்பூக்கள் தேன் தரும்.
9. வுpதை : எண்ணெய் எடுத்து சோப்பு தயாரிக்கலாம்.
10. வேர் : மாவுச் சத்து நிறைந்த வேர்கள் பன்றிகளுக்கும் எலிகளுக்கும் உணவாகும்.
11. இலைகள், கிளைகள், மரம் : அடுப்பெரிக்க விறகாகும்.
12. சுற்றுச்சூழல்: வீசும் காற்றின் வேகத்தை தடுத்து, தூசியினை வடிகட்டி காற்றை தூய்மைப்படுத்தும்
13. மரத்தின் தாயகம் : இந்தியா
14. ஏற்ற மண் : வறண்ட உவர் மண்
15. நடவுப் பொருள் : விதை, நாற்று, வேர்க்குச்சி
16. மரத்தின் உயரம் : 9 -- 12 மீட்டர்.
பூமி ஞானசூரியன், செல்பேசி: ூ918526195370
No comments:
Post a Comment