Wednesday, October 4, 2017

முள்ளு வேங்கை முரட்டு வேலைகளுக்கான மரம் MULLUVENGAI A VERY STRONG TIMBER TREE



  முள்ளு வேங்கை 

முரட்டு வேலைகளுக்கான 

மரம் 

MULLUVENGAI

A  VERY STRONG TIMBER TREE

FOR ROUGH WORKS




1. மரத்தின் தமிழ்ப் பெயர் :  முள்ளு வேங்கை
2. தாவரவியல் பெயர் :  BRIDELIA RETUSA
3. பொதுப்பெயர் / ஆங்கிலப்பெயர் :  ஸ்பைனஸ்  கினோ  ட்ரீ (SPINOUS KINO TREE)
4. தாவரக்குடும்பம்  : பில்லாந்தேசியே (PHYLLANTHACEAE)
5. மரத்தின் வகை  :  மர வேலைகளுக்கானது

6. தழை : கால்நடைகளுக்கு தீவனமாகும்  
7. கனி : இனிப்பு சுவையுடையது.
8. பட்டை, டேனின் நிறைந்தது தோல்பதனிடலாம்; நச்சுத் தன்மையுடையது; நச்சுயிரிகளை எதிர்க்கும் தன்மையுடையது.
9. மரம் : கட்டிட வேலைக்கானது, ரயில் பாதைக் கட்டைகள், கம்பங்கள், சாமான்கள், வண்டிச் சக்கரங்கள், வேளாண்மைக் கருவிகள், கருவிகளுக்கான கைப்பிடிகள் செய்ய, சிற்பம் செதுக்க, இப்படி பல வேலைக்கும் பயன்படுத்தலாம். 
10. பூக்கள் : மஞ்சள் மலர்களை மரமெல்லாம் நிறைத்து, பச்சை இலைகளால் போர்த்தி நிற்கும்; வீட்டிற்கும், சுற்றுப்புறத்திற்கும் வனப்பு கூட்டும், அலங்கார மரம்.
11. பூக்கள் : தேனீக்களுக்கு மஞ்;சள் வண்ண மலர்க் கோப்பைகளில் தேன் தரும்.
12. இலைகள், கிளைகள், மரம் : அடுப்பெரிக்க விறகாகும்.
13. சுற்றுச் சூழல் : வீசும் காற்றின் வேகத்தை தடுத்து, தூசியினை வடிகட்டி      
    காற்றைத் தூய்மைப்படுத்தும்  மரம்.

12. மரத்தின் தாயகம் :  இந்தியா  -  ராஜஸ்தான்
13. ஏற்ற மண் :  மணல்சாரி  வறண்ட மண்
14. நடவுப் பொருள் : விதை,  நாற்று,  வேர்க்குச்சி
15. மரத்தின் உயரம்  :  8 முதல் 10  மீட்டர்.

16. மருத்துவப் பயன்கள் : எலும்பு முறிவு, முதுகு வலி, மூட்டு வலி ஆகியவற்றைக் குணப்படுத்த இலைகள், பட்டை, வேர், மற்றும் பூக்களை பயன்படுத்துகிறார்கள்.

பூமி ஞானசூரியன், செல்பேசி :  +8526195370


Ref: 1. tropical.theferns.info / bridelia retusa



No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...