Sunday, October 8, 2017

குங்கிலியம் எண்ணெய் பெயிண்ட் வார்னிஷ் மரம் - KUNGILIYAM ALIAS SAL OIL TREE


                                                                  குங்கிலியம் 
                                                    எண்ணெய் பெயிண்ட்
                                                               வார்னிஷ் மரம்

KUNGILIYAM ALIAS
SAL OIL TREE


எண்ணெய், வெண்ணெய், நெய், பெயிண்ட், வார்னிஷ், ஆட்டோ ஆயில் ஆகியவை தயாரிக்கவும் சாக்லட் மற்றும் மிட்டாய் தொழிற்சாலைக்கும் உதவும் பாரம்பரியமான இந்திய வணிக மரம். 

காடுகளில் வசிக்கும் 20 முதல் 30 மில்லியன் மக்களுக்கு சால் எண்ணெய் உற்பத்தி மூலம் வாழ்வாதாரம் உபயம் தரும் மரம். 

இந்தியாவின் சால்மர மாநிலங்கள் என்று அழைக்கும் வகையில் இந்தியாவின் 45 சத சால் மரக்காடுகளைக் கொண்ட மூன்று மாநிலங்கள் ஓரிசா, மத்தியப் பிரதேசம், மற்றும் சத்திஷ்கர்;. இந்தியாவில் தேக்குக்கு அடுத்தபடியாக முக்பிய மரவகை சால் என்ற குங்கிலிய மரம்தான்.

சத்திஷ்கர், ஜார்கண்ட் ஆகிய இரண்டு இந்திய மாநிலங்களின் மாநில மரம் என்னும் பெருமைக்குரியது, சால் மரம்.

அறிவியல் நிபுணர்களின் கவனத்திற்கு : அதிக காசு பணம் செலவில்லாமல் ‘பயோ டீசல்’ தயாரிக்க வாய்ப்புள்ளது சால் எண்ணெய்.
 1. மரத்தின் தமிழ்ப் பெயர் : குங்கிலிய மரம்
டீஸல் தர காத்திருக்கும் சால் விதைகள்


2. தாவரவியல் பெயர்  :    SHOREA ROBUSTA.

3. பொதுப்பெயர் / ஆங்கிலப்பெயர் :  SAL TREE.

4. தாவரக்குடும்பம்  :  டிப்டிரோ கார்பேசி (DIPTEROCARPACEAE)

5. மரத்தின் வகை  :   வாணிக  மரம்.
  
6. எண்ணெய் : வெண்ணெய், நெய், பெயிண்ட், வார்னிஷ், ஆட்டோ ஆயில் ஆகியவை தயாரிக்க மற்றும் சாக்லட் மற்றும் மிட்டாய் தொழிற்சாலையில் பயன்படுகிறது. 

7. தழை, விளை நிலங்களுக்கு தழை உரமாகும். பச்சை இலைகள் செறிந்து, மஞ்சள் வெள்ளை நிறத்தில், பளிச்சென்று வெண்ணிற மஞ்சள்பூக்களை  மரம் முழுவதும் பூத்துக் குலுங்கும் பூக்களை போர்த்தி நின்று, வீட்டு முகப்பிற்கும், தோட்டத்திற்கும், சாலை ஓரங்களுக்கும், சுற்றுப்புறத்திற்கும் அழகூட்டும் அலங்கார அழகு மரம்.

7. பூக்கள், பிப்ரவரி மாதத்; தேனீக்களுக்கு, மஞ்சள் வெள்ளை மலர்க்கோப்பைகளில், தேன் தரும்,  பூக்களைத் தரும் மரம்.

8. மரம் : இரயில்வே  தண்டவாளங்களுக்கு அடிக்கட்டைகள் தரும் மரம். 

9. பிசின், பெயிண்ட், வார்னிஷ், சாம்பிராணி, படகுகளுக்கு  ஓட்டையை அடைக்கும் லப்பம், கர்ர்பன் பேப்பர்களுக்கு ஒட்டும் மை, தட்டச்சு இயந்திர நடாக்களுக்கு பூசிடும் மை, ஆகியவற்றை தரும் பிசின் தரும். ஒட்டுப்பலகைகள், மற்றும், அஸ்பெஸ்டாஸ் பலகைகளைக் கூட ஒட்டும்.

10. இலைகள், கிளைகள், மரம், ஆகியவற்றை. அடுப்பெரிக்க விறகாக தரும்;; மரம்.

11. வீசும் காற்றின் வேகத்தை தடுத்து, தூசியினை வடிகட்டி காற்றை தூய்மைப்படுத்தும்  மரம்.

12. மரத்தின் தாயகம்  : இந்தியா.
 
13. ஏற்ற மண்  :   ஈரச் செழிப்புள்ள மண், வடிகால் வசதி கொண்ட மண், ஆற்றங்கரை, மணல்சாரியான நிலம்.

14. நடவுப் பொருள் : விதை, நாற்று,   வேர்க்குச்சி

15. மரத்தின் உயரம்  :  15  மீட்டர்.
 
பூமி ஞானசூரியன், செல்பேசி : +918526195370

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...