Wednesday, October 18, 2017

கறிவேப்பிலை -தென்னிந்திய சமையல் மரம் - KARIVEPPILAI MASTER SPICE OF KITCHEN



                                                                 கறிவேப்பிலை  -
                                                 தென்னிந்திய சமையல் மரம்

KARIVEPPILAI

MASTER SPICE

OF KITCHEN

(வயிற்றுப் போக்கு, வாயுப் பிரச்சினைகள், செரியாமை, குடற்புண், நீரிழிவு, சீதபோதி, புற்று நோய் மற்றும் கொலஸ்ட்ராலை மிகைப்படாமல் பராமரித்தல் போன்ற மருத்துவப் பண்புகளைக் கொண்டது. இதன் வேர்கள் பாம்புக் கடியை பயன்படுத்தக் கூட உதவுகிறது)

1. மரத்தின் தமிழ்ப் பெயர் :  கறிவேப்பிலை.

2. தாவரவியல் பெயர் :    MURRAYA KOENEGII

3. பொதுப்பெயர் ஃ ஆங்கிலப்பெயர் : கறி லீப் ட்ரீ (CURRY LEAF)

4. தாவரக்குடும்பம் :  ரூடேசி (RUTACEAE)

5. மரத்தின் வகை : அலங்கார அழகுமரம்.
  
6. தழை : சாம்பார், ரசம், கறி வகைகள், மோர். என பலப்பல உணவுப் பொருட்களில், மணமூட்டுவதற்காக  சேர்க்கப் படுகிற இலைகளைத் தரும் மரம்.  ஊட்டச் சத்துக்களும், வைட்டமின்களும், ஆண்ட்டி ஆக்சிடென்ட்களும் நிறைந்தது.

7. பூக்கள் : மார்ச், மே, மாதத் தேனீக்களுக்கு, மலர்க் கோப்பைகளில், தேன் தரும் பூக்களைத்; தரும் மரம்.

8. கனி : கறுப்புநிறத்தில் பளபளக்கும்;  சிறுவர்கள் உண்ண சிறு கனிகளைத் தரும்  மரம்.

9. மரம், கம்பங்கள், முட்டுக் கட்டைகள், பந்தல் கால்கள், தூண்கள் செய்ய மரம் தரும் மரம். வேளாண் கருவிகள் செய்ய மரம் தரும் மரம். காகிதம் தயாரிக்க மரக்கூழ் செய்ய மரம் தரும் மரம்.
  
10. இலைகள், கிளைகள், மரம், ஆகியவற்றை. அடுப்பெரிக்க விறகாக தரும்;; மரம்.

11. வீசும் காற்றின் வேகத்தை தடுத்து, தூசியினை வடிகட்டி காற்றை தூய்மைப்படுத்தும்  மரம்.

8. மரத்தின் தாயகம் : இந்தியா.

9. ஏற்ற மண் :  மணல்சாரி வறண்ட மண்.

10. நடவுப் பொருள் : விதை , நாற்று  இ வேர்க்குச்சி.

11. மரத்தின் உயரம் :   8  மீட்டர்.


பூமி ஞானசூரியன், செல்பேசி: +918526195370


Ref: www.organicfacts.net / Health benefits of curry leaves.



No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...