Wednesday, October 18, 2017

களாக்காய் பள்ளிச் சிறுவர் விருப்ப பழமரம் - KALA KAAI SCHOOL CHILDREN'S FAVOURITE FRUIT TREE




களாக்காய் 
பள்ளிச்  சிறுவர் விருப்ப 
பழமரம்

KALA KAAI 
SCHOOL CHILDREN'S 
FAVOURITE 
FRUIT TREE



1. மரத்தின் தமிழ்ப் பெயர் :  களாக்காய்
 
2. தாவரவியல் பெயர் :    CARISSA CARANDUS.

3. பொதுப்பெயர் ஃ ஆங்கிலப் பெயர் – பெங்கால் கரண்ட் (BENGAL CURRANT)

4. தாவரக்குடும்பம் :  அப்போசயனேசி (APOCYANACEAE)

5. மரத்தின் வகை :  வறண்டநிலத் தாவரம்.
  
6. தழை : டஸ்ஸார் பட்டுப்புழு வளர்க்க இலைகளைத்  தரும் மரம்.

7. காய்கள் : சிறுவர்கள் ருசி பார்ப்பதற்கும், ஊறுகாய் போடுவதற்கும், காய்களைத்தரும் மரம்.

8. கனி :  உண்ணும் இனிப்பு சுவையுடைய, சதைக் கனிகளைத் தரும் குறு மரம்;  ஜாம், ஜெல்லி தயார் செய்யலாம்; இரும்புச் சத்தும், வைட்டமின் சி சத்தும் உடையது.

9. மரம் : வழவழப்புடைய , மரச் சீப்பு, அகப்பை, மற்றும் தட்டுமுட்டு சாமான்கள் செய்திட மரம் தரும் மரம்.

10. பச்சை இலைகள் செறிந்து, வெண்ணிறத்தில், பளிச்சென்று  மரம் முழுவதும் பூத்துக் குலுங்கும் ; வீட்டு முகப்பிற்கும், தோட்டத்திற்கும், சாலை ஓரங்களுக்கும், சுற்றுப்புறத்திற்கும் அழகூட்டும் அலங்கார அழகு மரம்.

11. பூக்கள் : மார்ச், ஏப்ரல் மாதத் தேனீக்களுக்கு, தேன் தரும் பூக்களைத் தரும் மரம்.
 
12. இலைகள், கிளைகள், மரம் : அடுப்பெரிக்க விறகு தரும் மரம்.

13. சுற்றுச் சூழல் : அடர்ந்த தழையமைப்பைக் கொண்டிருப்பதால், ஜன்னலுக்கு அருகே மரத்தை நட்டு, வீசும் காற்றின் வேகத்தை தடுத்து, தூசியினை வடிகட்டி, காற்றைத் தூய்மைப்படுத்தும்.

8. மரத்தின் தாயகம் : இந்தோ மலேஷியா

9. ஏற்ற மண் :   மணல்சாரி வறண்ட மண்.

10. நடவுப் பொருள் : விதை ,  நாற்று , வேர்க்குச்சி

11. மரத்தின் உயரம் :   5  மீட்டர்.

பூமி ஞானசூரியன், செல்பேசி: +918526195370


Ref: www.senthuherbals.blogspot.com / Carissa carandus




No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...