கடல் பூவரசு
மணல் பிரதேசத்தில்
பசுமை உருவாக்கும்
மரங்கள்
KADALPOOVARASU
CREATES GREEN BELTS
IN SANDS
(கடற்கரைப் பகுதிகளில், ஆற்றங்கரைகளில் விரைவாக பசுமைப் போர்வையை உருவாக்க வேண்டுமா ? கடல் பூவரசு நடுங்கள் ! இது ஒரு இந்திய மரம்)
1. மரத்தின் தமிழ்ப் பெயர் : கடல் பூவரசு
2. தாவரவியல் பெயர் : HIBISCUS TILIACEUS
3. பொதுப்பெயர் ஃ ஆங்கிலப்பெயர் : COAST HIBISCUS TREE
4. தாவரக்குடும்பம் : மால்வேசியே (MALVACEAE)
5. மரத்தின் வகை : அலங்கார அழகுமரம்
6. தழை : ‘தாஹித்தி’ தீவில் அவர்கள் சாப்பிடும் தட்டாக உதவுகிறது;; கால்நடைகளுக்கு தீவனமாகிறது; குயின்ஸ்லாந்தின் பழங்குடி மக்களுக்கு இதன் இளம் வேரும் குருத்துக்களும் தின்பண்டமாகிறது;
7. பட்டை : வலுவான நார் தரும், கயிறு மற்றும் மீன் வலைகள் செய்யலாம். அட்டைக் காகிதம் தயாரிக்கலாம்.
9. பூக்கள் : பூவின் மையப் பகுதி சிவப்பு நிறத்துடன் கூடிய பளிச்’ சென்ற மஞ்சள் நிற இதழ்களை உடையது; மாலைக்குள் மஞ்சள் ஆரஞ்சாகி, ஆரஞ்சு சிவப்பாகி உதிர்ந்து போகும்.
8. மரம் : படகுகள். கட்டுமரங்கள் செய்ய, காகிதம் செய்ய மரக்குழம்பு தரும்.பந்து போன்ற தழையமைப்பு கொண்டு, மஞ்சள் மலர்களால், மரமெல்லாம் நிறைத்து சாலை ஓரங்களில், தோட்டங்களில் நின்று சுற்றுப்புறத்திற்கு அழகூட்டும் மரம்.
10. இலைகள், கிளைகள், மரம் : அடுப்பெரிக்க விறகாகும்.
11. சுற்றுச் சூழல் :வீசும் காற்றின் வேகத்தை தடுத்து, தூசியினை வடிகட்டி, காற்றை தூய்மைப்படுத்தும்.
12. மரத்தின் தாயகம் : இந்தியா
13. ஏற்ற இடங்கள் : ஆற்றங்கரை, கடற்கரைப் பகுதி, சதுப்புநிலம், உப்பு நிலம், நீர் தேங்கும் நிலம்
14. நடவுப் பொருள் : விதை, போத்துக்கள்
15. மரத்தின் உயரம் : 8 முதல் 10 மீட்டர்.
16. மருத்துவப்பயன்: உடல் ஜூரம், இருமல், சீதக் கழிச்சல், கட்டி, காது சம்மந்தமான உபாதைகள் போன்றவற்றைக் குணப்படுத்த இலைகள், பூக்கள், பட்டை, வேர் மரம் போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.
Ref: http://www.en.wikipedia.org / http://www.hibiscus
tiliaceus / http://www.hibiscus.org / species / tiliaceus
பூமி ஞானசூரியன், செல்பேசி: +918526195370
No comments:
Post a Comment