Sunday, October 29, 2017

DESTINY OF KEVIN CARTER - கெட்ட பின்பு ஞானம்


                                                                  கெட்ட பின்பு ஞானம்

பசித்த குழந்தயைப் புசிக்கக் காத்திருக்கும் கழுகு


(உலக பிரசித்தி பெட்ரா புகைப்பட கலைஞர் கெவின் கார்ட்டர் முடிவு)

கெவின் கார்ட்டர்- உலக புகழ்பெற்ற
புகைப்படக்காரர். எல்லா சிறந்த புகைப்படக்காரர்களைப் போன்றே இவருக்கும்
நல்ல புகைப் படங்களை எடுக்க வேண்டு
மென்ற ஆசையும் ஆர்வமும் இருந்தன.

இந்த ஆர்வம் அவரை நாடு,நகரம்,கிராமம்,
காடு, மலை என்று கொண்டு சென்றது.

1993 இல் இந்த ஆர்வம் அவரைத் தனது சக புகைப்படப் பத்திரிக்கையாளர்களுடன்
சூடானுக்குக் கொண்டு சென்றது.

அப்போது சூடான் வரலாறு காணாத பஞ்சத்தில் சிக்கித் தவித்துக் கொண்டு இருந்தது.

குறிப்பாக சூடானின் தென்பகுதி மக்கள்
உண்ண உணவின்றி, பருகநீரின்றி பசி,
தாகத்தில் தவித்துக் கொண்டிருந்தனர்.

பசி பஞ்சத்தில் தவிக்கும் மக்களின்
நிலைகளைக் காமிராவில் பதிவு செய்ய
கெவின் தொலைதூர கிராமங்கள் வரை
சென்றார்.

இறுதியாக அவர் முயற்சி கைகூடியது. ஒரு
நாள் தன் காமிராவை தோளில் தொங்க விட்டுக் கொண்டு உள்ளத்தை உலுக்கக் கூடிய படத்துக்கான காட்சியைத் தேடியலைந்து கொண்டிருந்தபோது அப்படிப்பட்ட காட்சி தென்பட்டது;

பசி பஞ்சத்தால் அடிபட்ட நோஞ்சன் நிலையில்
உள்ள ஒரு சிறுமி நடக்கக் கூட இயலாத
நிலையில், எலும்புக் கூடு போன்ற தன்னுடலை தவழ்ந்து இழுத்துக் கொண்டு மெல்ல மெல்ல
ஊர்ந்து செல்வதைக் கண்டார்.

அந்தச் சிறுமி ஐக்கிய நாடுகளின் சபையின்
சார்பாக அமைக்கப்பட்டு இருந்த உணவு
வழங்கும் முகாமை நோக்கி தள்ளாடியபடி
தவழ்ந்து கொண்டிருந்தது

உண்மையிலேயே இதயத்தைப் பிழியக் கூடியதாக இருந்தது.

தோளில் இருந்து காமிராவை இறக்கி கோணம் பார்த்த கெவினுக்கு இன்னொரு வியப்பும் காத்திருந்தது.

ஆம்; அந்த எலும்பும் தோலுமான சிறுமிக்கும்ப் பின்னாலேயே சிறிது தொலைவில் ஒரு பிணம் தின்னிக்கழுகும் சிறுமியின் மீது பார்வையை
நிலை நிறுத்திக் கொண்டு இருந்தது.

எப்போது சிறுமியின் உடலை விட்டு உயிர்
பிரியும்; மீதியுள்ள அந்தத் தோலையும் அதைச்
சுற்றி இருக்கும் சிறிது மாமிசத்தையும் எப்போது சாப்பிடலாம் எனக் காத்திருந்தது பிணம் தின்னிக்கழுகு.

கெவின் கேமரா லென்சை கண்ணுக்கு ஒத்திக் கொண்டார்; சிறுமியையும் கழுகையும் ஒரு
பிரேமில் அடக்கிக் கொண்டு ‘க்ளிக்’ செய்தார்.

இப்போது அவரது புகைப்படக்கருவியில் மிக அரிதினும் அரிதான படம் பதிவாகி விட்டது.

இதை விற்றால் நல்ல விலை கிடைக்கும் என்ற மகிழ்ச்சியில் காமிராவைத் தோளில் மாட்டிக் கொண்டு தனது வண்டியை ஸ்டார்ட் செய்தார்;
பறந்து விட்டார். இந்த அரிதான படத்தை
‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிக்கைக்கு விற்று
விட்டார்.

இந்தப் புகைப்படம் 1993 மார்ச் திங்கள் 26 ஆம் நாள் காலை நாளிதழில் முதல் பக்கத்தில் வெளியானது.

இந்தப் படத்தைப் பார்த்ததும் ஆயிரக்கணக்கான வாசகர்கள் பத்திரிக்கை அலுவலகத்திற்கு தொலைப்பேசி மூலம்
தொடர்புக் கொண்டனர்.

அனைவரும் ஒரே கேள்வியைத்தான் கேட்டனர். புகைப்படத்தில் உள்ள சிறுமி என்ன ஆனாள்?

அவள் உயிருடன் பிழைத்தாளா அல்லது இறந்து விட்டாளா?

இந்தக் கேள்விக்கான பதில் பத்திரிக்கையின் தொலைப் பேசி
ஆப்ரேட்டரிடமோ படத்தை எடுத்த கெவின் கார்ட்டரிடமோ இல்லை.

1994,மே 23 அன்று பெரும் கை தட்டல்களுக்கு இடையே கெவின் கார்ட்டர் கொலம்பியப் பல்கலைக்கழகத்தின் பிரமாண்டமான  அரங்கத்தில் இந்த அரிதான புகைப்படத்திற்கான புலிட்சர் விருதப் பெற்றுக்கொண்டார்

இந்த
விருது புகைப்படத் துறையில் நோபல் விருதுக்கு இணையானது.

விருது பெற்ற சில நாட்களுக்குப்பின் கெவின்
பெரும் மன உளைச்சலுக்கு ஆளானார்.

கெவினுக்கும் அங்கு இருந்த பிணம்தின்னிக் கழுகுக்கும் என்ன வேற்றுமை?

இரண்டும் ஒரே விதமாகத்தான் செயல்பட்டுள்ளனர்.

‘குறைந்தபட்சம் புகைப்பட நிபுனர் கெவின் அந்த சிறுமிக்கு ஒரு வாய் தண்ணீர் தந்து உயிரைக் காப்பாற்றி இருக்கலாம்;

அல்லது தனது வலுவான கைகளினால் அந்தச் சிறுமியைத் தூக்கிச் சென்று உணவளிக்கும் அமைப்பு அலுவலகத்தின் வாயிலிலாவது சேர்த்து இருக்கலாம்;

கல்லெடுத்து வீசி அந்தக் கழுகையாவது விரட்டி இருக்கலாம்;
ஆனால் இவற்றில் எதையும் செய்யாமல் வெறும் ஒரு படத்தை எடுத்தார்;

அதை அதிக விலை தந்த பத்திரிக்கைக்கு விற்று விட்டார் என்று ஒருவர்
அவர் மீது குற்றம் சாட்டியதுதான் காரணம்.

இரண்டு மாதங்களுக்குப் பின் கடற்கரைக்கு
அருகில் அவரது கார் நின்று கொண்டிருந்தது.

அதில் அவர் பிணமாகக் கிடந்தார்.

கெவின் தற்கொலை செய்துகொண்டார்.

அவரது பிணத்திற்கு அருகில் காவல்துறைக்கு
ஒரு கடிதம் கிடைத்தது. அதில் சில வரிகளே இருந்தன.

முதல் வரி
I am Really, Really Sorry...

நாம் எவராக இருந்தாலும்
சரி நண்பர்களே,
நம்மிடம் சுயநலமில்லா அன்பு இல்லையெனில் 
நாம் மிருக இனத்தைவிட கீழானவா்களே.... ..
கெவின் கார்ட்டர்
(எழுதியது: யாரோ- பகிர்வில் வந்தது)

Saturday, October 28, 2017

வேம்பு நூற்றுக்கணக்கான பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் - NEEM CONTROL HUNDREDS OF PESTS





      வேம்பு 
நூற்றுக்கணக்கான 
பூச்சிகளைக் 
கட்டுப்படுத்தும்

NEEM 
CONTROL
HUNDREDS OF 
PESTS


வேம்புவின் இலை, விதை, எண்ணெய், பிண்ணாக்கு, என அனைத்தும் பூச்சிகளை கட்டுப் படுத்தும். 122 விதமான பூச்சிகளை கட்டுப்படுத்தும் திறன் கொண்டது வேம்பு. இவற்றை பலவகைகளில் பயனபடுத்தும் முறை பற்றி பார்க்கலாம்.

1.1. இலைகள்

வீடுகளில் கொசுக்களை விரட்ட, உலர்ந்த வேம்பு இலைச்சருகுகளை பயன்படுத்தி புகை போடலாம். 

வேம்பு தழைகளை நிலத்தில் உரமாக இட்டு நூற்புழுக்களை கட்டுப் படுத்தலாம்.
உலர்ந்த வேப்பந் தழைகளை தானியக்  குதிர்களில் போட்டு வைத்தால், கூன் வண்டு, மற்றும் இதர வண்டுகளை கட்டுப் படுத்தலாம்.

வேம்பின் உலர்ந்த இலைகளைப் பொடி செய்து தூவுவதன் மூலம்  புரோடீனியா புழு, தென்னை ஓலைப்புழு, மற்றும் பயறு வகைகளைத் தாக்கும் வண்டுகளைத் தடுக்கலாம்.

1.2.இலைக்கரைசல்

வெண்டையைத் தாக்கும் வண்டுகள், இலைசுருட்டுப்புழுநெல் பச்சை தத்துப் பூச்சி, புகையான், சணல் பயிரைத்தாக்கும் வண்டுகள், மற்றும் கம்பளிப்புழுக்களைக் கட்டுப்படுத்தலாம்.

தயாரிப்பு

100 கிராம் வேப்பந்தழையை இடித்து அரைத்து கூழாக்கி 1 லிட்டர் தண்ணீரில் கரைத்து ஒரு இரவு முழுக்க வைத்திருந்து அடுத்தநாள் இக்கரைசலை வடிகட்டி அத்துடன் 4 மில்லி காதிசோப்புக் கரைசலை கலந்து பின் பயிர்களுக்குத் தெளிக்கலாம். 

1.3. வேப்பங்கொட்டைத்தூள்

 வேம்பு விதைகளை உலரவைத்து பொடித்து வைத்துக் கொண்டு விதைகளை சேமித்து வைக்கும் போது, இதனை கலந்து வைத்தால் பூச்சிகள் தாக்காது. இந்த விதைத்தூளை 200 கிலோ விதைகளுக்கு 2 கிலோ என்ற அளவில் கலந்து வைக்க வேண்டும்.

1.4. வேப்பங்கொட்டைச்சாறு

புகையிலைப் பயிரைத் தாக்கும் புரோடீனியா புழுக்களை இது சிறப்பாக கட்டுப்படுத்தும். உருளைக்கிழங்கைத் தாக்கும் அந்துப் பூச்சிகள் மற்றும் புரோடீனியா புழுக்களையும் கட்டுப்படுத்தும்.

தயாரிப்பு

வேடசந்தூர் புகையிலை ஆராய்ச்சி நிலையம் இந்த முறையை உருவாக்கியது.  இடித்து பொடிசெய்த வேப்பங்கொட்டைத் தூள்  250 கிராம்' ஐ ஒரு மெல்லிய துணியில் மூட்டையாக முடித்து 50 லிட்டர் நீரில் மூழ்கியிருக்குமாறு வைத்திருந்து அடுத்தநாள் சாற்றினை வடித்து எடுத்து புகையிலை நாற்றங்காலில் தெளிக்க வேண்டும். இந்த முறையில் புரொடீனியா புழுக்களை அற்புதமாக கட்டுப்படுத்தலாம்.



1.5. இரண்டாவது தயாரிப்பு முறை

வேப்பங் கொட்டைகளை உலர்த்தி பொடித்து 10 கிலோ எடுத்து 50 லிட்டர் நீரில் முக்கி 24 மணி நேரம் ஊறவைத்து அடுத்த நாள் கரைசலை வடிகட்டி 150 லிட்டர் நீர் மற்றும் 200 மில்லி டீப்பால் கலந்து பயிர்களில் தெளிக்கலாம்.

கத்தரி கம்பளிப்புழு, வெண்டை காய்ப்புழு, மிளகாய் இலைப்பேன் முருங்கையைத் தாக்கும் பழஈ, கத்தரி தக்காளி மிளகாயைத் தாக்கும் வெள்ளைஈக்கள் ஆகியவற்றை அற்புதமாகக் கட்டுப்படுத்தும். 

பூக்கும் அல்லது காய்பிடிக்கும் சமயம்; வேப்பங் கொட்டைக் கரைசலை தெளித்து பச்சைக்காய்ப்புழுக்களை தடுக்கலாம்.

1.6. குறுணை

சோளப்பயிரைத் தாக்கும் தண்டுப் புழுவைக் கட்டுப் படுத்த  இலைச்சுருளில் வேம்புக் குறுணைகளை இடவேண்டும்.

வேப்பங் கொட்டையினை பொடி செய்து அத்துடன் சைனா களிமண்  ( ஊhiயெ ஊடயல ) மற்றும் கருவைப் பிசின் சேர்த்து பிசைந்து குறுணைத் தயாரிக்கலாம்.
இதைத் தயாரிப்பதற்கென பிரத்தியேகமான இயந்திரங்கள் உள்ளன.

1.7.எண்ணெய்க்கரைசல் 

பயிர்களில் சாற்றை உறிஞ்சும் பூச்சிகளை இதன்; மூலம் சிறப்பாக கட்டுப்படுத்தலாம். 1990 -களில் பருத்தி சாகுபடியை சின்னாப்  பின்னமாக்கிய வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த வரப்பிரசாதமாக இருந்தது வேம்பு எண்ணெய் கரைசல்தான்.
 
தயாரிப்பு

15 முதல் 20 மில்லி வரை வேம்பு எண்ணெயுடன் 1 லிட்டர் தண்ணீர்; மற்றும் 4 மில்லி காதிசோப்புக் கரைசல்; ஊற்றி நன்கு கலந்து பயிர்களில் தெளிக்கலாம்.

1.8. பிண்ணாக்கு

வேப்பம் பிண்ணாக்கு இட்ட வயல்களில் நூற்புழுக்கள் தலைவைத்தும் படுக்காது, பூச்சிகளின் நோய்களின் தாக்குதலும் அதிகம் இருக்காது.

கோதுமையில் வேர்முண்டுகளை ஏற்படுத்தும் நூற்புழுக்களையும் நெல் தோகைக்காம்பு அழுகல், தோகைக்காம்பு கருகல் நோய்களையும், எலுமிச்சை இலைகுடையும் புழுக்களையும் (LEAF MINERS) கட்டுப்படுத்தலாம்.

காய்கறிப் பயிர்களின் நாற்றங்கால்களை  அதிகம் தாக்கும் நூற்புழுக்களை கட்டுப்படுத்த 1 சதுர மீட்டருக்கு 25 கிலோ மக்கிய தொழுஉரத்துடன் 100 கிராம் வேப்பம்பிண்ணாக்கை கலந்து மண்ணில் தூவ வேண்டும்.

1.9. வேம்பினால் கட்டுப் படுத்தப்படும் முக்கிய பூச்சிகள்

நெல்லைத் தாக்கும் நூற்புழுக்கள்புகையான்,  தத்துப்பூச்சி  இலை சுருட்டும்புழு, கதிர்வெட்டும்புழுமுள்வண்டுமற்றும் கதிர்நாவாய்ப் பூச்சிகள். சோளத்தைத் தாக்கும் அசுவணிகுருத்துஈதண்டுப்புழுமற்றும் கதிர்ப்புழு. மக்காச் சோளத்ததைத் தாக்கும் கதிர்ப்புழு மற்றும் படைப்புழு பருத்தியைத் தாக்கும் படைப்புழுமற்றும் நாவாய்ப்பூச்சிகள், புகையிலையைத் தாக்கும் புரோடீனியா, மொட்டுப்புழு மற்றும் கொம்புப்புழு.காய்கறிப் பயிர்களைத் தாக்கும் இலைகுடையும் புழுக்கள், முட்டைக் கோசை தாக்கும் புழுக்கள், கத்தரி வண்டுகள், தர்பூஸ்பழ புழுக்கள், பீன்ஸ் அசுவணிகள், உருளைக்கிழங்கு புழுக்கள், வண்டுகள், வெண்டை இலைசுருட்டும்புழு, கொண்டைக்கடலை பச்சைப்புழு, துவரை காய் துளைக்கும் புழுக்கள், மற்றும் ஆமணக்கு கம்பளிப்புழுக்கள்.

பொதுவாக இதர பயிர்களைத் தாக்கும் பாலைவன வெட்டுக்கிளிகள்,    ஜப்பானிய வண்டுகள், புள்ளிவண்டுகள், மற்றும் ஒரு வகை நத்தை.

இப்படி பலவகைப் பூச்சிகளையும் கட்டுப்படுத்தும் சக்தி; கொண்டது வேம்பு.
1.10. எப்படி கட்டுப்படுத்துகிறது ?  

பூச்சிகளைக் கட்டுப் படுத்த பல ஆயுதங்களை தன் கைகளில் வைத்துள்ளது வேம்பு.
என்னென்ன வழிகளில் பூச்சிகளை கட்டுப்படுத்துகிறது என்பதைப்   பார்க்கலாம்.
வேம்பின் வாடை அல்லது நாற்றமே பல பூச்சிகளை பயிர்களிடம் அண்டவிடாது. 

சிலவகை பூச்சிகளுக்கு வேம்பின் கசப்பு ருசி பிடிக்காது, இதனால் வேம்பின் கரைசல் (அ) தூள் தூவப்பட்ட பயிர்ப்பாகங்களில் பூச்சிகள் வாயினை வைக்காது.

வேம்பின் கசப்பு சுவையை மீறி பூச்சிகள் தின்றுவிட்டாலும், அவை சுலபமாக சீரணம் ஆகாது, பூச்சிகளுக்கு வயிற்றுக் கோளாற்றை ஏற்படுத்தி மேலும் சேதம் விளைவிக்க முடியாதபடி செய்துவிடும்.

வேம்புப் பொருட்கள் சாப்பிட்ட புழுக்கள் தோலுரிக்காது. இதனால் அவை முழு வளர்ச்சி அடைய முடியாது. சிலவகை பூச்சிகளின் இளம் குஞ்சுகள் மறித்துவிடும். 
 
புழுக்களின் பூச்சிகளின் உடலின் உள்ளும் புறமும் எதிர்பாராத மாற்றங்களை உருவாக்கி மரணபயம் ஏற்படுத்திவிடும்.

சில வகைப் பூச்சிகளில் வேம்பு குடும்பக் கட்டுப்பாட்டை செய்துவிடும். வளர்ந்த பூச்சிகளாக இருந்தாலும் அவற்றால் இனவிருத்தி செய்ய முடியாது.

பூச்சிகளின் முட்டைகள் மீது வேம்புப் பொருட்கள் பட்ட மாத்திரத்தில்   உள்ளிருக்கும் கரு உபயோகமற்றதாகிவிடும். முட்டைகள் பொறிப்பதும் குஞ்சுகள் வெளிவருவதும் கேள்விக்குறி ஆகிவிடும்.

இதனால் பூச்சிகளுக்கு இனப்பெருக்கம் என்பது இம்சையாகிவிடும்.



FOR FURTHER READING
ON RELATED TOPICS

1. உயிரியல் வழி  பயிர்பாதுகாப்பு  - BIOLOGICAL CONTROL OF  PESTS / Date of Posting : 14.07.2019/ https://vivasayapanchangam.blogspot.com/2019/07/biological-control-of-crop-pests-by-d.html

2. பூச்சிகளை  கட்டுப்படுத்தும்  கண்ணிப் பயிரும்   விளக்குப் பொறியும்  -  TRAP CROPS  AND LIGHT TRAPS  TO CONTROL  CROP PESTS / Date of Posting : 15.11.2017/ https://vivasayapanchangam.blogspot.com/2017/11/organic-farming-trap-crops-light-traps.html

3. இயற்கை வழி  பயிர் டானிக் குணபஜலா - KUNABAJALA A CROP TONIC / Date of Posting : 14.11.2017/ https://vivasayapanchangam.blogspot.com/2017/11/organic-farming-kunapajala.html

4. பல பயிர்களில் பூச்சிகளை கட்டுப்படுத்த என் பி வி  வைரஸ்சை   பயன்படுத்துவது எப்படி ?    HOW TO USE  NPV VIRUS  TO CONTROL PESTS   IN MANY CROPS  ? / Date of Posting : 14.11.2017/

5. மரங்கள் மற்றும்   பயிர்களின்   பாரம்பரிய   மருத்துவ நூல்                         விருக்ஷாயுர்வேதம் - VRIKSHAYURVEDH  INDIA'S TRADITIONAL  MEDICINAL BOOK  FOR PLANTS & TREES/ Date of Posting : 14.11.2017/

6. பயிர்களை பாதுகாக்கும்       வேர் உட்பூசணம்    என்னும் வேம்    EFFECTIVE PLANT PROTECTION   BY  V A M / Date of Posting : 14.11.2017/

7. வசம்பு மூலம்   பயிர்பாதுகாப்பு   விதைநேர்த்தி  நோய்களிலிருந்து  பாதுகாக்கும்  -   VASAMBU   SEED TREATMENT   PROVIDES  RESISTANT TO   CROP DISEASES/ Date of Posting : 14.11.2017/ https://vivasayapanchangam.blogspot.com/2017/11/organic-farming-develop-resistance-to.html

8. மலைவேம்பு  காய்ப்பொடி  நூற்புழுக்களைக்   கட்டுப்படுத்தும் - MALAIVEMBU  CAN BE USED   TO CONTROL  NEMATODES / Date of Posting : 14.11.2017/

9. சீத்தாமரத்தின்   இலை, கனி,   விதையும்     வேரும்கூட    பூச்சிகளை   கட்டுப்படுத்தும்    SEETHA TREES' LEAVES FRUITS  SEEDS AND ROOTS  CAN CONTROL CROP PESTS/ Date of Posting : 14.11.2017/

10. ராம்சீத்தா   சாறு உறிஞ்சும்   பூச்சிகளை   கட்டுப்படுத்தும்    RAMSEETHA  CONTROLS SAP SUCKING PESTS / Date of Posting : 13.11.2017/

11. புங்கன் பிண்ணாக்கு   காப்பி தக்காளி பயிர்களில்   நூற்புழுக்களை   கட்டுப்படுத்தும்    PUNGAN OILCAKE   CONTROLS NEMATODES  IN TOMATO & COFFEE CROPS / Date of Posting : 13.11.2017/

12. தென்னையில்    வெள்ளை ஈக்களை   கட்டுப்படுத்த   என்ன செய்ய  வேண்டும் ?     HOW TO CONTROL   WHITE FLIES  IN COCONUT ? / Date of Posting : 02.11.2017/


Authored By: Gnanasuria Bahavan, Editor, Vivasaya Panchangam, Expert in Agriculture, Conservation of Natural Resources, Development Communication & authoring books for the rural people.Phone:+91 8526195370, Email:gsbahavan@gmail.com

Friday, October 27, 2017

மருத்துவ குணம் நிறைந்த முருங்கை இலை MURUNGAI ILAI MEDICINAL VALUE



                                                                         
மருத்துவ 
குணம் நிறைந்த 
முருங்கை இலை

MURUNGAI ILAI 
MEDICINAL VALUE



கொதிக்க வைத்த அல்லது காய வைத்த முருங்கை இலையில் மூன்று மடங்கு அதிகமாக உள்ள இரும்பு சத்தைக் கிரகிக்கும் தன்மையை நமது உடல் கொண்டுள்ளது.
முற்றிய முருங்கை இலையிலேயே மருத்துவக் குணம் பெருமளவு இருக்கிறது.
முருங்கை இலையை நேரடியாக வெயிலில் உலர்த்தினால் வைட்டமின் ஏ சத்து குறைந்துவிடும். நிழலில் உலர்த்தினால் 70% வைட்டமின் ஏ சத்து தங்கியிருக்கும்.
கோடைக் காலம், மழைக் காலத்தில் கிடைக்கும் முருங்கை இலையில் வைட்டமின் ஏ சத்து அதிகம்.
வறண்ட காலம், குளிர் காலத்தில் கிடைக்கும் முருங்கை இலையில் இரும்பு சத்து, வைட்டமின் சி சத்து அதிகமாக இருக்கும். தமிழகத்தில் கார்த்திகை, மார்கழி மாதங்களில் கிடைக்கும் முருங்கை இலையின் சுவை அதிகம் என்பது கிராமப்புற நம்பிக்கை. இதற்கான அறிவியல் காரணம், மேலே குறிப்பிட்டதுதான்.
பரோடா பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில் முருங்கை இலையுடன் தக்காளியைச் சேர்த்துச் சமைத்தால் வைட்டமின் ஏ சத்து நீங்கிவிடுவதற்கான சாத்தியம் இருப்பது தெரியவந்துள்ளது.

முருங்கை - மருத்துவப் பயன்கள்

1. நீரிழிவு நோய்க்கு

முருங்கை இலையில் உள்ள isothiocyanate என்ற வேதிப் பொருள் நீரிழிவு நோய்க்குப் பயன்தரும் உணவுப் பொருளாக அமைகிறது. அத்துடன், உடல் எடையைக் குறைக்கவும் இது உதவும் என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

சாப்பிடும் முறை: நிழலில் உலர்த்திய முருங்கை இலைப்பொடியை ஒரு நாளைக்கு ஏழு கிராம் வீதம் மூன்று மாதங்களுக்குச் சாப்பிட்டுவந்தால், ரத்தத்தில் சர்க்கரை அளவு 13.5% குறைவது பதிவு செய்யப்பட்டுள்ளது. முருங்கை இலையில் உள்ள chlorogenic acid என்ற வேதிப்பொருள், சாப்பிட்ட பின் ரத்தத்தில் உயரும் சர்க்கரையின் அளவை குறைத்துவிடும்.

2. உயர் ரத்த அழுத்த நோய்க்கு

ரத்த அழுத்த விகிதத்தைச் சரியாகப் பராமரிக்க உதவும் Quercetin என்ற வேதி பொருள், முருங்கை இலையில் இருப்பது ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

நடைமுறைப் பயன்கள்

அந்தக் காலத்தில் செய்ததுபோல், வெண்ணெயை உருக்கி நெய்யாக்கும்போது கொஞ்சம் முருங்கை இலையையும் இட்டுக் காய்ச்சி எடுப்பதால் நெய்யின் ஆயுட்காலம் நீடிக்கும்.

அதேபோல உணவைக் கெட்டுப் போகாமல் வைத்திருக்க முருங்கை இலைப்பொடி சேர்க்கப்படுகிறது. மாட்டு இறைச்சியுடன் முருங்கை இலைப்பொடியைச் சேர்த்துக் குளிரூட்டப்பட்ட இடத்தில் வைத்தால் 12 நாட்கள்வரை இறைச்சி கெட்டுப் போகாது. முருங்கை இலையில் உள்ள எதிர் ஆக்ஸிகரணிகளே, இப்படிக் கெட்டுப் போகாமல் வைத்திருக்க உதவுகின்றன. 

ரத்தசோகையை நீக்க

கர்ப்பிணிப் பெண்களின் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைந்தால், மதுரை மாவட்ட மக்கள் பயன்படுத்தும் மருத்துவ முறை ஒன்று உண்டு. கறிவேப்பிலை, முருங்கை இலை தலா ஒரு கைப்பிடி அளவு எடுத்து இரண்டு டம்ளர் தண்ணீரைச் சேர்த்து, அது அரை டம்ளராகக் குறையும்வரை அடுப்பில் சூடுபடுத்தி, வடிகட்டி குடிநீராகக் கொடுப்பது வழக்கம். இது மிகவும் பயனுள்ள முறை. கர்ப்பிணிப் பெண்கள் இதைத் தொடர்ந்து செய்துவந்தால், கால் வீக்கம் நன்கு குறைவதை உணரலாம்.

தண்ணீரைத் தூய்மைப்படுத்த

தண்ணீரில் உள்ள கசடை நீக்குவதற்குப் பொதுவாகக் கனிம உப்புகளான படிகாரம் என்ற alum, அன்னபேதி என்ற ferrous ஆகியவற்றைப் பயன்படுத்திவருகிறோம். இவற்றை அதிக அளவில் சேர்க்க வேண்டிவந்தால் தண்ணீரின் சுவை மாறுபடும்; தண்ணீரின் அமில - காரச் சமநிலையும் மாறுபடும். தூய்மைப்படுத்தும் பொருளை அதிக அளவில் சேர்க்க வேண்டிவந்தால் அதிகப் பொருட்செலவும் ஆகும். இதற்கு நல்ல மாற்று முருங்கை விதை.

ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள செனகல், கானா நாடுகளில் தண்ணீர் கசடை நீக்குவதற்கு முருங்கை விதை இன்றைக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

சுத்தம் செய்யும் அறிவியல்

முருங்கை விதையில் உள்ள dimeric cationic proteins என்ற நேர்மின்னூட்டம் பெற்ற புரதம், தண்ணீரில் உள்ள எதிர்மின்னூட்டம் பெற்ற கிருமிகள், களிமண், நச்சுப் பொருட்களுடன் கலந்து வீழ்படிவாகப் பாத்திரத்தின் அடியில் தங்க வைக்கிறது.

தண்ணீரில் உள்ள கலங்கிய நிலையை அளவிடுவதற்குச் சர்வதேச அலகு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் பெயர் நிபெலோ மெட்ரிக் டர்பிடிட்டி அலகு (Nephelometric turbidity unit-NTU). தண்ணீரின் கலங்கிய நிலையைக் கணக்கிடும் கருவிக்கு Turbid meter என்று பெயர். குடிநீரில் அதிகபட்சமாக 0.3 NTU என்ற அளவில்தான் கசடுப் பொருட்கள் இருக்க வேண்டும்.

குறைந்த அளவு (50 NTU) கலங்கிய நிலையைக் கொண்ட நான்கு லிட்டர் தண்ணீருக்கு ஒரு முருங்கை விதை போதும்.
அதிக அளவு (250 NTU) கலங்கிய நிலையைக் கொண்ட ஒரு லிட்டர் தண்ணீருக்கு இரண்டு முருங்கை விதைகள் தேவைப்படும்.
By Dr.M.Ganesh Kumar - Quern Casper Bee Farm - Madurai. from my Samsung Galaxy smartphone.

Thursday, October 26, 2017

தொட்டாற்சுருங்கி ஆண்மை குறைபாட்டினை நீக்கும் THOTTARCHURUNGI CURES MALE IMPOTENCE


                                                             

தொட்டாற்சுருங்கி 

ஆண்மை 

குறைபாட்டினை 

நீக்கும் 

 

THOTTARCHURUNGI

CURES MALE 

IMPOTENCE



Common Name: TOUCH ME NOT, Botanical Name: MIMOSA PUDICA, Family: FABACEAE, Native Place:
SOUTH & CENTRAL AMERICA

காடுகளிலும், மலைப்பகுதிகளிலும் காணப்படும் தொட்டாற்சுருங்கி செடி காந்த சக்தி உடையது என்று சித்தர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த தெய்வீக மூலிகையை தொடர்ந்து 48 நாட்டு தொட்டுவந்தால் மனோசக்தி அதிகரிக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

1300 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கிரேக்க மருத்துவத்தில் தொட்டாற்சுருங்கி பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. தற்போது ஆயுர்வேத மருத்துவத்திலும் யுனானி மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது.

தோல்வியாதிகள், குழந்தைப்பேறு பிரச்சனை, ஆண்மைகுறைபாடு போன்ற நோய்களுக்கு இன்றைக்கு மிகச்சிறந்த மருத்துவ மூலிகையாக உள்ளது தொட்டாற்சுருங்கி.

‘நமஸ்காரி' என்று அழைக்கப்படும் இந்த மூலிகை காந்த சக்தி உடையது. வன்னிமரம் போல் தெய்வ சக்தி உடைய மூலிகை என்பதால் துளசி போல வீட்டில் வைக்கலாம்.

இதனை தொடுகின்ற போது அதனுடைய சக்தி மனிதனுள் மின்சாரம் போல் பாயும். 48 நாள் தவறாது தொட்டு வந்தால் உள வாற்றல் பெருகி மனோசக்தி அதிகமாகி சொன்னது பலிக்கும்.

நினைத்தது நடக்கும். மனதில் உணர்ச்சி ஊட்டி சிற்றின்பத்தை அதிகரிக்கும். அதனால் ‘காமவர்த்தினி' என்றும் கூறுவர்.

இதன் இலையைக் களிமண்ணுடன் அரைத்து பற்றிட வாத வீக்கும் கரையும். கீல்வாதம் கரையும். இதன் வேரையும் இலையையும் சம அளவில் எடுத்து உலர்த்தி துணியில் சலித்து வைக்கவும், இந்த சூரணம் 10-15 கிராம் பசும்பாலில் குடிக்க சிறு நீர் பற்றிய நோய்கள், மூலச்சூடு, ஆசனக்கடுப்பு தீரும். 10 முதல் 20 நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட உடலில் கிளர்ச்சி பெருகும்.

தொட்டாற் சுருங்கி மேகமூத்திரத்தை நீக்கும், பெண் வசியம் செய்யும், உடலில் ஓடிக் கண்டுகின்ற வாதத் தடிப்பைக் கரைக்கும் ஒரு பலம் தொட்டாற்சுருங்கி வேரினை பஞ்சுபோல் தட்டி ஒரு மண் குடுவையில் போட்டு கால் படி தண்ணீர் விட்டு அடுப்பிலேற்றி சுண்டக் காய்ச்சவும், பின்னர் இதனை வடிகட்டி வேளைக்கு கால் அல்லது அரை அவுன்ஸ் வீதம் தினம் 2-3 வேளை கொடுக்கவும்.

அல்லது ஒரு பங்கு இலைக்கு 10 மடங்கு கொதிக்கின்ற தண்ணீர் விட்டு ஆறின பின் வடிகட்டி வேளைக்கு ஒரு அவுன்ஸ் வீதம் தினம் 2-3 வேளை கொடுக்கவும் . இவற்றால் நீர் அடைப்பு,          கல்லடைப்பு தீரும்.

ஆண்மைக்குறைபாடு உள்ளவர்கள் இதன் இலையை அரைத்து பாலில் 15 கிராம் கலந்து சாப்பிடவேண்டும். தொடர்ந்து 15 நாட்களுக்கு சாப்பிட்டு வர ஆண்மை பெருகும்.

சூடு பிடித்து சிறுநீர் எரிச்சல் உள்ளவர்கள் இதன் இலையை அரைத்து 5-6 நாள் 10 கிராம் காலை தயிரில் சாப்பிட வேண்டும் இதனால் சூடு குறைந்து சிறுநீர் எரிச்சல் குணமாகும்.

இதன் இலை ஒரு பிடி அரைத்து எலுமிச்சையளவு மோரில் கலந்து மூன்று நாள் சாப்பிட வயிற்றுக் கடுப்பு குணமாகும். உடல் குளிர்சியடையும், வயிற்றுப்புண்ணும் ஆறும்.

இதன் இலையையும் வேரையும் உலர்த்தி இடித்துச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு பசுவின் பாலில் போட்டுக் கொடுத்துக் கொண்டு வர மூலம், பவுத்திரம் போம்.

இதன் இலைச் சாற்றைப் பவுத்திர மூல ரணங்களுக்கு ஆசனத்தில் தடவி வர ஆறும். இதன் இலையை மெழுகு போலரைத்து விரை வாதம், கை,கால் மூட்டுக்களின் வீக்கம் இவைகட்கு வைத்துக் கட்ட குணமாகும்.


இதன் இலைச் சாற்றைப் பஞ்சில் தோய்த்து ஆறாத ரணங்களுக்கு உட செலுத்தி வைக்க ஆறிவரும்.

இதன் இலையை ஒரு பெரிய மண்கலயத்தில் போட்டு தண்ணீர் விட்டு வேக வைத்து இடுப்பிற்குத் தாளும் படியான சூட்டில் தாரையாக விட இடுப்பு வலி, குணமாகும்.
ஆரோக்ய வாழ்வுக்கு பாரம்பரிய மூலிகை மருத்துவ முறை அவசியம் என்பதை அனைவருக்கும் பகிர்ந்து ஆரோக்ய பாரதத்தை உறுவாக்குவோம்.....!

 - Dr.MGanesh Kumar - Queen Casper Bee Farm - Madurai. from my Samsung Galaxy smartphone.

(பூமி தமிழ் விவசாயம் வாட்சப் குழுவில் பகிர்ந்தது)

Monday, October 23, 2017

SWEET BROOM WEED - சக்கரை வேம்பு - 1



                                                             

  சக்கரை வேம்பு

    (SCOPARIA DULCIS)


சரக்கொத்தினி, கல்லுருக்கி என்றும் தமிழ் மூலிகை சக்கரை வேம்பு.

சக்கரை நோய், ரத்த அழுத்தம், சிறுநீரகக் கல், மஞ்சள் காமாலை, ஆஸ்துமா வயிற்று உபாதைகள், பாம்புக்கடி, பல்வலி,  ஆகிய பெரிய நோய்களுக்கான மருந்துகள் தயாரிக்க பயன்படும் சிறு செடி இது.

இந்தியாவில் நீரிழிவுக்கும், தைவானில் ரத்த அழுத்தத்திற்கும், பிரேசிலில் ரத்தப்போக்கு, ரத்த காயங்களுக்கும், நிகராகுவாவில் ரத்தச்சோகை மற்றும் தலைவலிக்கும் காலங்காலமாக தங்களின் பாரம்பரிய வைத்திய முறைகளில் சக்கரை வேம்புவைப் பயன்படுத்துகிறார்கள். 

இதன் பொதுப் பெயர் ஸ்வீட் புரூம் வீட் (SWEET BROOM WEED);  ஸ்கோப்பேரியா டல்சிஸ் (SCOPARIA DULCIS) என்பது இதன் தாவரவியல் பெயர்; ஸ்குரோப்புலேரியேசியே (SCROPULARIACEAE) தாவர குடும்பத்தைச் சேர்ந்தது.

தென் அமெரிக்கா உட்பட அமெரிக்காவின் வெப்ப மண்டலப்பகுதிகள் இதன் தாயகம்;. இதனை நியோ டிராப்பிக்ஸ் (NEO TROPICS). அமேசோனியா, கரிபியன், சென்ட்ரல் அமெரிக்கா, சென்ட்ரல் ஆண்டஸ், ஈஸ்டர்ன் சவுத் அமெரிக்கா, நார்தன் ஆண்டஸ், ஒரினாகோ, சதர்ன் சவுத் அமெரிக்கா போன்றவை நியோ டிராப்பிக்ஸ் ’ ல் அடங்கும். 

செடி செங்குத்தான நேர்கோடு மாதிரி ஒரு மீட்டர் உயரம் வரை வளரும்; மங்கலான வெள்ளைப் பூக்கள் இலைக் கணுக்களில் பூக்கும்.

பூமி ஞானசூரியன், செல்பேசி : +918526195370

Ref: www.flowersof india.net, www.en.wikipedia.org ,  


Sunday, October 22, 2017

நொச்சி மரம் பல நோய் குணப்படுத்தும் மூலிகை - NOCHI MARAM - MULTISPECIALITY TREE HERB


நொச்சி மரம் 
பல நோய் 
குணப்படுத்தும் 
மூலிகை 


NOCHI MARAM 

MULTISPECIALITY 

TREE HERB




குடற்புழு நோய், தோல் நோய்கள்,

தசைப்பிடிப்பு, மூட்டு வலி, மண்ணீரல்

 கோளாறுகள், வயிற்றுப் புற்று கட்டி,

 கண் நோய்கள், சளி, ஆஸ்த்துமா,

சுவாசக் கோளாறுகள், இருமல்,

 கொலஸ்ட்ரால் மிகைப்படுதல், வயிற்று

 உப்பிசம், மலச்சிக்கல் ஆகியவற்றை

 குணப்படுத்தும்; கூந்தல் வளர்ச்சி, நச்சு

 முறிவு, காயங்களை குணப்படுத்துதல், கொசு விரட்டல், நினைவாற்றலை

 மேம்படுத்துதல் போன்றவற்றிற்கும்  மருத்துவத் தீர்வு அளிக்கும் மரமூலிகை

நொச்சி.

இலைச்சாந்து: இதனை லேசாக சூடு படுத்திப் பற்றிட தலைவலி, விதை வீக்கம், மூட்டுவலி, எலும்பு தேய்மான நோய் கியவை குணமாகும்.

இலைக்குடிநீர்: இதனைக் கொப்பளிப்பதன் மூலம் வாய்ப்புண், தொண்டைவலி ஆகியவற்றைக் குணப்படுத்தும்.

இலைச்சாம்பல் : இதனை முகர்வதனால் தலைவலி மற்றும் மூக்கொழுக்கு குணமாகும்.

எண்ணெய் : நொச்சி எண்ணெயுடன் நல்லெண்ணெய் சேர்த்துத் தடவி வர காயங்கள் குணமாகும் நரைமுடி மாறி கரு நிறம் அடையும்.


1. மரத்தின் தமிழ்ப் பெயர் :  நொச்சி

2. தாவரவியல் பெயர்  :   வைட்டஸ் நிகுண்டோ (VITEX NIGUNDO)

3. பொதுப்பெயர் /  ஆங்கிலப்பெயர் : பைவ் லீவ்ட்  சேஸ்ட் (FIVE LEAVED CHASTE)

4. தாவரக்குடும்பம்  :  வெர்பனேசி (VERBANACEAE)

5. மரத்தின் வகை  :  மருத்துவ மரம்
  
6. தழை : தானியக் குதிர்களில், தானியத்துடன் நொச்சி
    இலைகளை சேர்த்து மூடிவைத்து, பூச்சிகள் வராது செய்ய
    இலைகளைத் தரும் மரம்.

 7. இளம் கிளைகள் : கூடை முடைபவர்களுக்கு, கூடை
    தயாரிக்க உதவும்.
    
 8. பூக்கள் : ஊதா நிறப் பூக்கள் வசந்த காலத்தில் தேனீக்களுக்கு,
தேன் தரும்.


 9. மரம் , ஆற்றோரம் நின்று மண்அரிப்பை தடுக்கும்.

 10. இலைகள், கிளைகள், மரம், அடுப்பெரிக்க விறகாக
    தரும்.

 11. வீசும் காற்றின் வேகத்தை தடுத்து, தூசியினை வடிகட்டி      
    காற்றை தூய்மைப்படுத்தும்.

12. மரத்தின் தாயகம் : இந்தியா

13. ஏற்ற மண்  : ஈரமான கரிசல் மணல்சாரி மண்.

14. நடவுப் பொருள் : விதை,   நாற்று,   வேர்க்குச்சி

18. மரத்தின் உயரம்  :    4  --  6    மீட்டர்.

FOR FURTHER READINGON RELATED TOPICS


1. காரை மரம்   அனைத்து   மருத்துவ   முறைகளும்   பயன்படுத்தும்   மூலிகை -   KARAI MARAM  HERB  FOR ALL  MEDICAL SYSTEMS – Date of Posting; 01.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/karai-maram-herb-for-all-medical-systems.html

2. புளிச்சக்காய் மரம் உலகம் முழுக்க                                              பிரபலமான  மூலிகை  -  PULICHAKKAI MARAM WORLD RENOWNED HERB– Date of Posting; 01.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/karai-maram-herb-for-all-medical-systems.html

3. மதுக்காரை மரம்   அற்புத ஆயுர்வேத   மூலிகை    MADHUKKARAI    ACCEPTED AYURVEDIC HERB    – Date of Posting; 01.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/madhukkarai-accepted-ayurvedic-herb.html

4. மலைவேம்பு மரம்                                              எல்லா மருத்துவ                                             முறைகளுக்கும்                மருந்தாகும்               மூலிகை  -   MALAIVEMBU MARAM OUTSTANDING  TREE HERB – Date of Posting; 06.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/malaivembu-maram-outstanding-tree-herb.html

5. நொச்சி மரம்   பல நோய்   குணப்படுத்தும்   மூலிகை   -   NOCHI MARAM -  MULTISPECIALITY  TREE HERB – Date of Posting; 06.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/nochi-maram-multispeciality-tree-herb.html

6. மருத்துவம் பேசும் 21 மரங்கள்     - 21  MEDICINAL TREES   BOOK   – Date of Posting; 03.07.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/07/21-21-medicinal-trees-book.html

7. வெள்அத்தி மரம்  சித்தப்பிரமையை  சீராக்கும்  மூலிகை     VELL-ATHI MARAM CURE MENTAL DISORDERS – Date of Posting; 31.07.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/07/vell-athi-maram-cure-mental-disorders.html

8. பன்னீர்மரம்  ஒரு  பாலுணர்வுத் தூண்டி  மூலிகை மரம் -  PANNEER MARAM  NATURAL SEX DRIVING HERB – Date of Posting; 26.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/panneer-maram-natural-sex-driving-herb.html
9. மலம்புளுவன்   பாலைவன  மருத்துவ மரம்  MALAMBULUVAN -  MATCHLESS   DESERT  TREE HERB – Date of Posting; 27.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/malambuluvan-matchless-desert-tree-herb.html

10. சேங்கொட்டை - பெண்களுக்கான   கருத்தடை மூலிகை -  SENKOTTAI  SUPREME  FAMILY PLANNING HERB – Date of Posting; 29.12.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/senkottai-supreme-family-planning-herb.html

11. இடலை மூலிகை மரம்  பாம்புக்கடியை  குணப்படுத்தும்     IDALAI MARAM  CURES SNAKE BITES – Date of Posting; 30.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/idalai-maram-cures-snake-bites.html

12. காட்டலரி பல நோய்களை   கட்டுப்படுத்தும்   சிறந்த  மூலிகைமரம்   - KATTALARY HERB  CURE MANY DISEASES – Date of Posting; 21.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/kattalary-herb-cure-many-diseases.html

13. வெட்சி - உடல் பருமனாதல் மற்றும் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் பூமரம் -  VETCHI - DIABETES AND OBESITY CURING HERB – Date of Posting; 25.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/vetchi-diabetes-and-obesity-curing-herb.html

14. புத்திரன்ஜீவா - குழந்தை பாக்கியம் தரும் மரம் - PUTRAN JIVA – UNISEXUAL  FERTILITY TREE  – Date of Posting; 26.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/putran-jiva-unisexual-fertility-tree.html

15. நஞ்சுள் மரம் சிசேரியனிலிருந்து  கர்ப்பிணிப்  பெண்களை  காப்பாற்றும்  மரம் -  NANJUL – SAVE  PREGNANT MOTHERS  – Date of Posting; 26.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/nanjul-save-pregnant-mothers.html

16. சூரை  இலந்தை ஒரு  ஆயுர்வேத மருத்துவ மரம்  - SOORAI ILANTHAI – AN AYURVEDIC  MEDICINAL TREE – Date of Posting; 30.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/soorai-ilanthai-ayurvedic-medicinal-tree.html

17. நாட்டு பாதாம்கொட்டை வைரஸ் நோய் நீக்கும்   மருந்து மரம் - NATTU PADHAMKOTTAI  -  IDEAL  TREE HERB  – Date of Posting; 07.02.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/nattu-padhamkottai-ideal-tree-herb.html


Ref: www.easyayuveda.com / Nigundi , www.en.wikipedia.com / Vitex Nigundi

பூமி ஞானசூரியன், செல்பேசி: +918526195370

பீமா என்னும் திசுவளர்ப்பு ராட்சச மூங்கில் ரகம் - BEEMA - HIGH BIOMASS BAMBOO



பீமா என்னும் 
திசுவளர்ப்பு
ராட்சச  
மூங்கில் ரகம்



BEEMA - HIGH BIOMASS BAMBOO 


                           (BAMBUSA BALCOOVA)

இந்திய துணைக் கண்டத்தில் பீமாஎன்ற ஒரு புதிய மூங்கில் ரகம் கண்டுபிடிக்கப்பட்டள்ளது.

விஞ்ஞானி டாக்டர் பாரதி அவர்கள் இந்த புதிய பீமா பல்கூவா ரகத்தை உருவாக்கி உள்ளார். இவருக்கு சொந்த இடம் தமிழ் நாட்டைச் சேர்ந்த திருநெல்வேலி மாவட்டம்.


டாக்டர் பாரதி அவர்களிடம் பேசிய போது மூங்கில் பற்றிய ஆச்சரியமான செய்திகளை எல்லாம் கூறினார். திசு வளர்ப்பு முறையில் பீமா மூங்கில் ரகத்தை உருவாக்கி உள்ளார். இவருடைய திசு வளர்ப்பு ஆய்வுக் கூடம் தமிழ் நாட்டில் ஓசூரில் உள்ளது. 

இந்த ஆய்வுக் கூடம் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் திசு வளர்ப்புக் கன்றுகளை உற்பத்தி செய்கிறது. உலகிலேயே ஒரு நாளைக்கு ஒரு லட்சம் மூங்கில் கன்றுகளை உற்பத்தி செய்யும் திசு வளர்ப்பு ஆய்வுக்கூடம் இதுதான் என்பதைக் கேட்க ஆச்சரியமாகவும் பெருமையாகவும் உள்ளது. 
 
இந்த பீமா மூங்கில் ரகத்தில் உற்பத்தி செய்யப்புடும் நூலைக் கொண்டு உயர்தர பருத்தி மற்றும் லினன் ஆடைகளை உற்பத்தி செய்ய முடியும்.
இது டெக்ஸ்டைல் தொழில் துறையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை உருவாக்கியுள்ளது.

திசு வளர்ப்பு முறையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மூங்கில் ரகம்இ பேம்பூசா பல்கூவா (BAMBUSA BALCOOVA)  என்னும் இந்திய மூங்கில் வகையிலிருந்து  உருவாக்கப்பட்டுள்ளது. 
பீமா & சாதா மூங்கில்

பல்கூவாவை ஒரு ராட்சச மூங்கில் (புஐயுNவு டீயுஆடீழுழு); உயரம் அதிக பட்சம் 25 மீட்டா வளரும்;  தடிமன் 15 செ.மீ.; வறட்சியைத் தாங்கும். குறைவான மழையிலும் வளரும்; ஒரு ஏக்கரில் 40 டன் மர மகசூல் தரும்; இந்த வகை பூக்கும், ஆனால் விதை பிடிக்காது; இது கொத்து மூங்கில் (CLUMPING BAMBOO).

வணிக ரீதியல் பல்கூவா மூங்கில் தோட்டம் அமைப்பது சமீபத்தில் ஆப்ரிக்காவில் பிரபலம் அடைந்துள்ளது; பல்கூவா 1600 ஆண்டு வாக்கில் அங்கு அறிமுகம் ஆனது; இதனை பெரும் பரப்பில் பயிரிட முயற்சிகள் செய்து வருகிறார்கள்.

கெமில்லி ரெமெலோ (CAMILLE REMELO) மற்றும் ஈகோ பிளானெட் பேம்பூ (ECO PLANET BAMBOO) ஆகிய முன்னோடி மூங்கில் ஆராய்ச்சி நிறுவனங்கள் பல்கூவா மூங்கில் தோட்டம் அமைப்பில் வெற்றிகரமாக இறங்கி உள்ளன.

ஆனாலும் பலகூவா மூங்கில் கன்றுகளை பெருமளவு உற்பத்தி செய்வது டாக்டர் பாரதி அவர்களின் ஓசூர் திசு வளர்ப்பு ஆய்வுக் கூடம்தான்.

உலகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மூங்கில் பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருக்கும் விஞ்ஞானிகளை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது டாக்டர் பாரதியின் பீமா மூங்கில்.

பீமா  மூங்கில் பற்றி மேலும் தெரிந்து கொள்ள கீழ்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளலாம் (அ) வலைத் தளத்தைப் பார்வையிடலாம்.

1. www.growmorebiotech.com, www.beemabamboo.blogspot.in
2. Growmore Biotech Ltd.Hosur.phone; 9443360563
3. www.en.wikipedia.org / Bambusa balcoova 
4. www.agricultureinformation.com / Beema Bamboo

பூமி ஞானசூரியன், செல்பேசி: +918526195370


FOR FURTHER READINGON RELATED TOPICS

TREES OF OTHER 

COUNTRIES (37 TREES)


1. சிங்கப்பூர்செர்ரி  பல்லுயிர்  வாழ்வாதார   மரம் -      SINGAPORE  CHERRY  A BIODIVERSITY TREE – Date of Posting; 07.02.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/singapore-cherry-biodiversity-tree.html

2. மங்கிபஸ்சில் -  தென் அமெரிக்காவின்  அதிசய   மரம் -  MONKEY PUZZLE - TREE OF SOUTH AMERICA – Date of Posting; 06.02.2020  / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/monkey-puzzle-tree-of-south-america.html

3. டிரேவலர்ஸ் பாம் - ஒரு வித்தியாசமான அழகுமரம்  - TRAVELLER’S PALM -  IS A DIFFERENTLY  BEAUTIFUL TREE– Date of Posting; 03.02.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/travellers-palm-is-differently.html

4. ரபில்ட்டு  பேன்  பாம்  அங்கீகரிக்கப்பட்ட அழகு மரம்  RUFFLED  FAN PALM   ORNAMENTAL TREE – Date of Posting; 03.02.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/ruffled-fan-palm-ornamental-tree.html

5. பொகைன்வில்லா -  அலங்கார மரம் -  BOUGAINVILLA - DECORATIVE TREE – Date of Posting; 31.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/bougainvilla-decorative-tree.html


6. சிலோன் செர்ரி    மேஜை நாற்காலி மரம்  - CEYLON CHERRY TREE OF FURNITURES – Date of Posting; 20.01.2020/ https://vivasayapanchangam.blogspot.com/2020/01/ceylon-cherry-tree-of-furnitures.html


7. ஊறுகாய்க்கு உகந்த மரம் சிலோன்  ஆலிவ் மரம் - CEYLON OLIVE BEST  PICKLE TREE – Date of Posting; 18.01.2020/ https://vivasayapanchangam.blogspot.com/2020/01/ceylon-olive-best-pickle-tree.html

8. சைனிஸ்  பிரிஞ்சி  மரம் -  நேர்த்தியான  பூமரம்   -    FRINGE TREE -RAVING BEAUTY  OF CHINA – Date of Posting; 17.01.2020 https://vivasayapanchangam.blogspot.com/2020/01/fringe-tree-raving-beauty-of-china.html

9. நீலச்சடை செடார் மரம் - காற்றுத்தடை அழகு  மரம் - BLUE ATLAS CEDAR - SHELTER BELT TREE – Date of Posting; 11.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/blue-atlas-cedar-shelter-belt-tree.html

10. ஜப்பானிய மேப்பிள் -  இலையழகு மரம்   JAPANESE MAPPLE - DECORATIVE  FOLIAGE TREE – Date of Posting; 09.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/japanese-mapple-decorative-foliage-tree.html

11. சூபாபுல் - தீவன  மரங்களின்  ராஜா  - SUBABUL  - WORLD LEADER OF FODDER TREES – Date of Posting; 01.01.2020  / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/subabul-world-leader-of-fodder-trees.html

12. மல்பெரி -  விரியன் விஷத்தை  முறிக்கும்  பட்டு மரம்  MULBERRY - CAN CURE SNAKE BITE – Date of Posting; 01.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/mulberry-can-cure-snake-bite.html

13. பாட்டில்பனை -  கியூபா நாட்டின் அலங்கார மரம் -  BOTTLE PALM - CUBAN ORNAMENT  TREE – Date of Posting; 25.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/bottle-palm-cuban-ornament-tree.html


14. பேரீச்சம் -   ஈராக் நாட்டின்   வணிக மரம்    DATE PALM - A BUSINESS  TREE OF IRAQ – Date of Posting; 25.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/date-palm-business-tree-of-iraq.html

15. மரூலா மரம் - ஆப்ரிக்காவின்  சிறுதொழில் மரம்  - MARULA - ENTREPRENEUR  FRIENDLY AFRICAN  TREE  – Date of Posting; 25.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/marula-entrepreneur-friendly-african.html

16. ஜக்ரந்தா - பிரேசில் நாட்டின் அழகு பூமரம் -  JACRANDA - PLEASING BEAUTY OF BRAZIL – Date of Posting; 25.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/jacranda-tree.html


17. மாதுளை- ஈரான்  நாட்டு பிரபலமான  பழ மரம்  -  POME GRANATE -   FRUIT TREE OF  IRAN  – Date of Posting; 25.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/pome-granate-fruit-tree-of-iran.html


18. ஆப்ரிக்க  ட்யூலிப் ட்ரீ -  அழகிய பூமரம்    AFRICAN TULIP -  BEAUTIFUL FLOWERING TREE  – Date of Posting; 25.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/african-tulip-beautiful-flowering-tree.html


19. திவிதிவி   தோல் பதனிட உதவும்   மெக்சிகோ நாட்டு   மரம்  -   DIVI DIVI   TREE TANNERY OF  MEXICO – Date of Posting; 09.08.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/08/divi-divi-tree-tannery-of-mexico.html


20. கறிப்பலா - தெற்கு பசிபிக்கின்  காய்கறி மரம்  -  BREAD FRUIT -  A  VEGETABLE TREE  – Date of Posting; 09.08.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/08/bread-fruit-vegetable-tree.html


21. பேவோபாப் ட்ரீ -   ஆப்ரிக்காவின்   பலநோக்கு மரம்     BAO BAB -   MULTIUSE   TREE OF   AFRICA– Date of Posting; 07.08.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/08/bao-bab-multiuse-tree-of-africa.html


22. துரியன் குழந்தை  பாக்யம் தரும்  பழமரம் - DURIAN  FERTILITY  FRUIT TREE – Date of Posting; 31.07.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/07/durian-fertility-fruit-tree.html


23. டிராகன் பிளட் ட்ரீ -  சோகோத்ரா தீவின்   மருத்துவ மரம்  -   DRAGON BLOOD - HERBAL TREE OF SOCOTHRA  – Date of Posting; 08.02.2018 / https://vivasayapanchangam.blogspot.com/2018/02/dragon-blood-herbal-tree-of-socothra.html


24. பீமா என்னும்   திசுவளர்ப்பு  ராட்சச    மூங்கில் ரகம்  -   BEEMA -  HIGH BIOMASS  BAMBOO – Date of Posting; 21.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/beema-high-biomass-bamboo.html


25. மேய்டன்   ஹேர் ட்ரி -  அபூர்வ   மூலிகை   மரம்   - MAIDEN HAIR TREE CHINESE HERB  – Date of Posting; 18.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/maiden-hair-tree-chinese-herb.html


26. அம்ப்ரல்லா தார்ன் -  இஸ்ரேலியரின்  தெய்வீக மரம் -  UMBRELLA THORN A DIVINE TREE OF ISREALIS – Date of Posting; 15.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/royal-poinciana-red-beauty-of-madagaskar.html


27. கிளைரிசிடியா - பல பயன்தரும்  மெக்சிகோ நாட்டு  மரம்          -                             GLYRICIDIA    MULTIUSE    MEXICAN TREE – Date of Posting; 12.01.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/glyricidia-multiuse-mexican-tree.html


28. பாட்டில் பிரஷ்  ஆஸ்திரேலிய  அழகு மரம் - BOTTLE BRUSH AUSTRALIAN  BEAUTY – Date of Posting; 10.12.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/bottle-brush-australian-beauty.html

29. பாட்மின்டன் பால்  -   அழகூட்டும்   அலங்கார மரம்    BATMINTON BALL TREE OF     MALASIYA – Date of Posting; 12.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/batminton-ball-tree-of-malasiya.html


30. டெசெர்ட்  டேட் ட்ரீ - பாலைவன  மூலிகை மரம்    DESERT DATE  -    AFRICAN MEDICINAL  TREE – Date of Posting; 09.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/desert-date-african-medicinal-tree.html


31. சோழவேங்கை -        புனிதமான சீனமரம்   -  BISHOPWOOD -  SACRED TREE OF CHINA & TAIWAN – Date of Posting; 07.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/bishopwood-sacred-tree-of-china-taiwan.html


32. கலா பேஷ்  ட்ரி - திருவோட்டு சுரைக்காய் மரம்   CALABASH  -  WONDER TREE  – Date of Posting; 29.09.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/09/calabash-wonder-tree.html

33. தெபுபுயா -   சாலைகளை    அலங்கரிக்கும்   அழகு மரம்    TEBUBUYA - AVENUE  BEAUTY  OF MEXICO  – Date of Posting; 29.09.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/09/tebubuya-avenue-beauty-of-mexico.html

34. எல்லோ பெல்ஸ் - வீட்டுக்கு வீடு இருக்கும்  தென்அமெரிக்க மரம் -  YELLOW BELLS - BEAUTIFUL TREE   – Date of Posting; 28.09.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/09/yellow-bells-beautiful-tree.html

35. சாசேஜ் ட்ரீ - அழகு தரும் ஆப்ரிக்க  அடையாளம்  SAUSAGE TREE - AWESOME SYMBOL OF AFRICA – Date of Posting; 28.09.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/09/sausage-tree-awesome-symbol-of-africa.html

36. ஆர்கானியா  என்னும் ஆட்டுத்தழை மரம் மற்றும் அழகு சாதன மரம் - ARGANIA - COSMETIC TREE OF MOROCO – Date of Posting; 31.07.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/07/argania-cosmetic-tree-of-moroco.html

36. ராயல் பாய்ன்சியனா  -   சிவப்பழகு     மடகாஸ்கர் மரம்                                                         ROYAL POINCIANA -  RED BEAUTY OF MADAGASKAR – Date of Posting; 14.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/royal-poinciana-red-beauty-of-madagaskar.html

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...