வெள்நாகு - கிராமத்து
மரச்சாமான்கள் மரம்
VELNAGU - VILLAGE
CARPENTRY TREE
1. மரத்தின் தமிழ்ப் பெயர் : வெள் நாகு
2. தாவரவியல் பெயர் : அனோஜீஸஸ் லேட்டிஃபோலியா (ANOGEISSUS LATIFOLIA)
3. பொதுப்பெயர் ஃ ஆங்கிலப் பெயர் : AXLE WOOD TREE
4. தாவரக்குடும்பம் : காம்பிரிட்டேசி (COMBRETACEAE)
5. மரத்தின் வகை : வறண்டநிலத் தாவரம்.
6. மரத்தின் பயன்கள் :
தழை : விளைநிலங்களுக்கு உரமாகும்.
பட்டை : தோல்பதனிட டேனின் தரும்.
பிசின் : பெயிண்ட், வார்னிஷ், கோந்து தயாரிக்கலாம்.
மரம்: லாரிகளில் சரக்கு ஏற்றும் கூண்டு, வண்டிகள், மேஜை நாற்காலி, தேயிலைப் பெட்டிகள், மரப்பலகைகள், ஒட்டுப் பலகைகள், படகுகள், கோடாறி, மண்வெட்டி போன்ற வேளாண் கருவிகளுக்கு கைப்பிடிகள், மற்றும் காகிதம் தயாரிக்க மரக்குழம்பு செய்ய மரம் தரும்.
சுற்றுச் சூழல் : வீசும் காற்றின் வேகத்தை தடுத்து, மாசு மற்றும் தூசியினை வடிகட்டி காற்றை தூய்மைப்படுத்தும் மரம்.
7. மரத்தின் தாயகம் : இந்தியா.
8. ஏற்ற மண் : மணல்சாரி, வறண்ட மண்.
9. நடவுப் பொருள் : விதை, நாற்று, வேர்க்குச்சி.
10. மரத்தின் உயரம் : 15 - 25 மீட்டர்.
பூமி ஞானசூரியன், செல்பேசி :+8526195370
No comments:
Post a Comment