வெள்ளை அகில் -
ஏற்றுமதிக்கான
வாசனைத் தைல மரம்
VELLAI AGIL -
WHITE CEDAR
A PERFUME
TREE
1. மரத்தின் தமிழ்ப் பெயர் : வெள்ளை அகில்
2. தாவரவியல் பெயர் : DYSOXYLUM MALABARICUM
3. பொதுப்பெயர் / ஆங்கிலப்பெயர் : WHITE CEDAR
4. தாவரக்குடும்பம் : மிலியேசி (MILIACEAE).
5. மரத்தின் வகை : வாணிப மரம்.
6. மரத்தின் பயன்கள் :
தழை : விளை நிலங்களுக்கு தழை உரம் தரும்.
பட்டை : தோல்பதனிட டேனின் தரும் .
பூக்கள் : நீராவி வடிப்பு முறையில் ‘அகில்’ என்னும்
வாசனைத் தைலம் எடுக்கலாம்.
கனி : கால்நடைகளுக்கும், சிறுவர்களுக்கும் உண்ணக் கனிகள் தரும்.
மரம், தீப்பெட்டிகள், தீக்குச்சிகள், வீட்டின் மேல்தள பலகைகள், தோணிகள், தேயிலைப் பெட்டிகள், ஒட்டுப் பலகைகள், காகிதம் தயாரிக்கும் மரக்குழம்பு, அத்தனைக்கும் மரம் தரும்.
சரித்திரம் : வாஸ்கோடகாமா காலத்திலிருந்து இன்று வரை
தேவதாரு எனும் வாசனைத் தைலமாக, ஏற்றுமதிப் பொருளாக பிரசித்தி பெற்றது.
இலை, கிளை, மரம் : அடுப்பெரிக்க விறகாகும்.
சுற்றுச்சூழல்: வீசும் காற்றின் வேகத்தை தடுத்து, தூசியினை வடிகட்டி
காற்றை தூய்மைப்படுத்தும் மரம்.
8. மரத்தின் தாயகம் : இந்தியா.
9. ஏற்ற மண் : சொத சொதப்பான ஈர மண்.
10. நடவுப் பொருள் : விதை, நாற்று, வேர்க்குச்சி
11. மரத்தின் உயரம் : 36 மீட்டர்.
பூமி ஞானசூரியன், செல்பேசி: +918526195370
No comments:
Post a Comment