வட்டப்பொலவு
பிளைவுட் செய்ய
ஏற்ற மரம்
VATTA POLAVU
BEST
FOR PLYWOOD
MAKING
MAKING
இந்திய மேப்பிள் மரம் - ஒட்டுப் பலகைக்கு ஏற்றது வட்டப் பொலவு
1. மரத்தின் தமிழ்ப் பெயர் : வட்டப்பொலவு
2. தாவரவியல் பெயர் : PTEROSPERMUM ACERIFOLIUM
3. பொதுப்பெயர் ஃ ஆங்கிலப்பெயர் : MAPLE LEAVED BAYUR TREE
4. தாவரக்குடும்பம் : ஸ்டெர்கூலியேசி (STERCULIACEAE)
5. மரத்தின் வகை : அகன்ற இலைக் காட்டுமரம்.
6. மரத்தின் பயன்கள் :
தழை : கால்நடைகளுக்கு தீவனமாகும்; புகையிலையை பொதித்து கட்ட அகன்ற இலை தரும். கூரைவேய்வதற்கான புற்களை பரப்புவதற்கு முன், இலைகளை அடுக்க உதவும்.
பட்டை : டேனின் நிறைந்தது ; தோல்பதனிடலாம்.
மரம் : கடைசல் வேலைகளுக்கு பயன்படும். பொம்மைகள், இசைக்கருவிகள், பலகைகள், பெட்டிகள், சட்டங்கள், மேஜை நாற்காலிகள் செய்ய, காகிதம் தயாரிக்க மரக்குழம்பு தரும்.
இலைகள், கிளைகள், மரம் : அடுப்பெரிக்க விறகு தரும்.
விதை: பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை இதன் நெற்றுக்கள் முற்றி வெடித்து சிதறும்.
சுற்றுச் சூழல் : வீசும் காற்றின் வேகத்தை தடுத்து, தூசியினை வடிகட்டி காற்றை தூய்மைப்படுத்தும்.
7. மரத்தின் தாயகம் : இந்தியா.
8. நட ஏற்ற இடம் : கால்வாய்க் கரை, ஆற்றங்கரை, குளங்கள் மற்றும் ஏரிக்கரைகள்.
9. நடவுப் பொருள் : நேரடி விதைப்பது நல்லது.
10. மரத்தின் உயரம் : 18 மீட்டர்.
பூமி ஞானசூரியன், செல்பேசி: +918526195370
No comments:
Post a Comment