தேற்றான் கொட்டை தண்ணீரை தெளிய வைக்கும் மரம்
THETRAN KOTTAI
WATER PURIFYING TREE
1. மரத்தின் தமிழ்ப் பெயர்: தேற்றான் கொட்டை மரம்
2. தாவரவியல் பெயர்: STRYCHNOS POTATORUM
3. பொதுப்பெயர் ஃ ஆங்கிலப்பெயர்: CLEARING NUT TREE
4. தாவரக்குடும்பம்: லோகானேசியே (LOGANIACEAE)
5. மரத்தின் வகை: அலங்கார அழகுமரம்.
6. மரத்தின் பயன்கள்:
தழை: விவசாயத்திற்கு தழை உரம் தரும்
பூக்கள்: தேனீக்களுக்கு தேன் தரும், வீட்டிற்கும் சுற்றுப்புறத்திற்கும் அழகூட்டும்
கொட்டைகள்: கலங்கிய நீரை தெளியவைக்க காலம் காலமாய் பயன்படுத்தும் உத்தி
மரம்: கட்டுமானப் பணிகளுக்கும், வேளாண்கருவிகள் செய்யவும், காகிதம் தயாரிக்க மரக்குழம்பும் செய்யவும், அடுப்பெரிக்க விறகும் தரும் மரம்.
சூழல்: வீசும் காற்றின் வேகத்தை தடுத்து, தூசையும், மாசையும் வடிகட்டி காற்றைத் துடைத்து தூய்மைப்படுத்தும் மரம்.
சரித்திரம்: 1873 ல் பிரிட்டீஷ் படைகள் மழைக் காலத்தில் முகாமிடும் இடங்களில் தேற்றான் கொட்டை மூலம் தண்ணீரை சுத்தப்படுத்திக் குடித்தனர்.
7. மரத்தின் தாயகம்: இந்தியா
8. ஏற்ற மண்: வறண்ட செவ்வல் மண்
9. நடவுப் பொருள்: விதை, வேர்க்குச்சி
10. மரத்தின் உயரம்: 15 மீட்டர்.
No comments:
Post a Comment