Thursday, September 7, 2017

சிறுநாகப்பூ முரட்டு தச்சுவேலை மரம் - SIRUNAGAPPOO IRON WOOD TIMBER TREE

சிறுநாகப்பூ
முரட்டு
தச்சுவேலை
மரம் 


SIRUNAGAPPOO 

IRON WOOD 

TIMBER TREE


1. மரத்தின் தமிழ்ப் பெயர் : சிறுநாகப்பூ
2. தாவரவியல் பெயர் :  MESUA FERREA
3. பொதுப்பெயர் ஃ ஆங்கிலப்பெயர்:   CEYLON IRON WOOD TREE
4. தாவரக்குடும்பம் :  குட்டிஃபெரே (GUTTYFERAE)
5. மரத்தின் வகை :  அலங்கார  பூ மரம்

6. மரத்தின் பயன்கள் :

  தழை: விவசாய நிலங்களுக்கு தழைஉரம் தரும்
  வீடுகளில் அழகுக்காக வீட்டு முகப்பில் வளர்க்க அழகான அலங்கார பூ மரம்.

  பட்டை : டேனின் நிறைந்தது ;  தோல் பதனிடலாம்.

  மரம் :காகிதம் தயாரிக்க மரக்கூழ் தரும்; மரப்பாலங்கள், ரயில்வே ஸ்லிப்பர்கள்,  கம்பங்கள், உத்திரங்கள், தூண்கள், செக்கு, வண்டி சக்கரத்தின் குடம் அனைத்தும் செய்யலாம்.

  பூக்கள் : பூக்களில் மஞ்சள் சாயம் எடுக்கலாம்; வாசனைத் தைலம் தயாரிக்கலாம்; அத்தர் செய்யலாம்; தேனீக்களுக்கு  தேன் தரும்
.
  விதை: சோப்பு தயாரிக்க எண்ணெய் தரும்.

  சுற்றுச்சூழல்; காற்றின் வேகத்தை தடுத்து, தூசு மற்றும் மாசுவை  வடிகட்டி    
  காற்றைத் தூய்மைப்படுத்தும்.

7. தாயகம்: இந்தியா 
8. ஏற்ற மண் :  ஈர செழிப்புள்ள மண்.
9. நடவுப் பொருள் : விதை,  நாற்று,  வேர்க்குச்சி
10. மரத்தின் உயரம் :  13  மீட்டர்

பூமி ஞானசூரியன், செல்பேசி: +918526195370

No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...