சடச்சி எனும் தனுர் -
பல்பயன் மரம்
SADACHI VILLAGE MULTIUSE TREE
1. மரத்தின் தமிழ்ப் பெயர் : சடச்சி
2. தாவரவியல் பெயர் : GREWIA TELIFOLIA
3. பொதுப்பெயர் ஃ ஆங்கிலப்பெயர்: SHAMAM
4. தாவரக்குடும்பம் : டிலியேசி (TILIACEAE)
5. மரத்தின் வகை : வறண்டநிலத் தாவரம்
6. மரத்தின் பயன்கள் :
தழை: கால்நடைகளுக்கு தீவனமாகும்
பட்டை: சதவீத நார் எடுக்கலாம்.
மரம்: காகிதம் தயாரிக்க மரக்கூழ் தரும் தூண்கள், சக்கரங்கள், வளைவுகள், சட்டங்கள், குறுக்கு சட்டங்கள், கட்டிட வேலை சமான்கள் செய்யலாம் ;பில்லியர்ட்ஸ், கோல்ப், கிரிக்கெட் போன்ற விளையாட்டுப் பொருட்கள் செய்ய மரம் தரும்; விறகு தரும்.
பூக்கள்: தேனீக்களுக்கு மலர்க் கிண்ணத்தில் தேன் தரும்;.
சுற்றுச் சூழல்; வீசும் காற்றின் வேகத்தை தடுத்து, தூசு, மாசு வடிகட்டி காற்றை சுத்தப்;படுத்தும்.
சரித்திரம்: இராமாயண காலத்தில் வில் செய்ய பயன்படுத்திய தனூர் விருட்சம் இதுதான். எவ்வளவு எடை வைத்தாலும் தாங்கும் ; வலுவான மரம்.
8. மரத்தின் தாயகம் : இந்தியா
9. ஏற்ற மண் :-- ஈர செழிப்புள்ள செவ்வல,; செம்புறை மண்.
10. நடவுப் பொருள் : விதை, நாற்று, வேர்க்குச்சி
11. மரத்தின் உயரம் :-- 12 -- 15 மீட்டர்.
பூமி ஞானசூரியன், செல்பேசி: +918526195370
No comments:
Post a Comment