புன்னை' யில் எண்ணெய் எடுத்து சோப்பு செய்யலாம்
PUNNAI OIL COULD BEUSED FORSOAP MAKING
புன்னை எண்ணெயில் சோப்புகள் தயாரிக்கலாம்.
காகிதம் தயாரிக்க மரக்குழம்பு தரும் மரம்.
காற்றை தூய்மைப்படுத்தும் மரம்.
CALOPHYLLUM
INOPHYLLUM
BEAUTY LEAF
TREE
தமிழ் சங்க
இலக்கியங்களில்
பெருமையாக
பேசப்படும் மரம்
1. மரத்தின் தமிழ்ப் பெயர் : புன்னை
2. தாவரவியல் பெயர் : CALOPHYLLUM INOPHYLLUM
3. பொதுப்பெயர்ஃஆங்கிலப்பெயர் : BEAUTY LEAF TREE
4. தாவரக்குடும்பம் : குளூசியேசியே (CLUSIACEAE)
5. மரத்தின் வகை : வாணிப மரம்.
மரத்தின் பயன்கள் :
தழை : விளை நிலங்களுக்கு தழை உரமாகும்.
பட்டை : டேனின் நிறைந்தது தோல்பதனிடலாம்.
பிசின் : பெயிண்ட், வார்னிஷ் மற்றும் கோந்து தயாரிக்கலாம்.
பூக்கள் : கோடையில் தேனீக்களுக்கு வெண் மலர்க் கோப்பைகளில் தேன் தரும் மரம்.
விதை : புன்னை எண்ணெயில் சோப்புகள் தயாரிக்கலாம். ஒரு கிலோ விதையில் 220 கொட்டைகள் இருக்கும்; ஏப்ரல் முதல் ஜுன் வரை விதைகள் சேகரிக்கலாம். சேகரித்தவுடன் விதைக்க வேண்டும்; விதைகளை ஒரு நாள் ஊர வைத்து விதையுங்கள்.
மரம் : காகிதம் தயாரிக்க மரக்குழம்பு தரும் மரம்.
இலைகள், கிளைகள், மரம் : அடுப்பெரிக்க விறகாகும்.
சுற்றுச் சூழல் : வீசும் காற்றின் வேகத்தை தடுத்து, தூசியினை வடிகட்டி
காற்றை தூய்மைப்படுத்தும் மரம்.
மரத்தின் தாயகம் : இந்தியா
ஏற்ற மண் : மணல்சாரி நிலம் மற்றும் கடலோரங்களில் நடலாம்.
நடவுப் பொருள் : விதை ஃ நாற்று ஃ வேர்க்குச்சி
மரத்தின் உயரம் : 8 -- 10 மீட்டர்.
பூமி ஞானசூரியன், செல்பேசி :+ 91 8526195370
No comments:
Post a Comment