POOMARUUTHU -
GARDEN
FLOWERING
TREE
PRIDE OF
INDIA
LAGERSTROEMIA
SPECIOSA
இந்திய அரசு அஞ்சல் தலை வெளியிட்டு கவுரவித்துள்ள பூ மரம்.
1. மரத்தின் தமிழ்ப் பெயர் : பூமருது
2.தாவரவியல் பெயர் : LAGERSTROEMIA SPECIOSA
3.பொதுப்பெயர் / ஆங்கிலப்பெயர் : PRIDE OF INDIA
4. தாவரக்குடும்பம் : லித்ரேசி (LITHRACEAE)
5. மரத்தின் வகை : அலங்கார அழகுமரம்.
5. மரத்தின் வகை : அலங்கார அழகுமரம்.
6. மரத்தின் பயன்கள் :
சிறப்பு : பிலிப்பைன்ஸ் நாட்டில், நீரழிவு மற்றும் சிறுநீரகம் தொடர்பான நோய்களுக்கு மருந்து செய்ய பயன்படுத்துகிறார்கள்.
தழை : விளை நிலங்களுக்கு தழை உரமாகும். டைவான் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிள் தழையில் தேநீர் தயாரிக்கிறார்கள். வியட்நாமில் இதை கீரையாக சமைக்கிறார்கள். குளிர் காலத்தில் இதன் இலைகள் உதிர்வதற்கு முன்னால் அழகிய சிவப்பு நிறத்தில் மாறும்.
பட்டை : டேனின் நிறைந்தது; தோல்பதனிடலாம்.
பிசின் : கோந்து தயாரிக்கலாம்.
பூக்கள் :ரகத்தைப் பொருத்து ரோஸ், வெள்ளை, மற்றும் நீலநிறத்தில் பூக்கும்.
மரம் : மேஜை, நாற்காலிகள், இரயில் பெட்டிகள், தூண்கள், உலக்கை, உரல்கள் செய்ய, கடைசல் வேலை செய்ய, காகிதம் தயாரிக்க உதவும்: இலைகள், கிளைகள், மற்றும் மரம், அடுப்பெரிக்க விறகாகும்; வீசும் காற்றின் வேகத்தை தடுத்து, தூசியினை வடிகட்டி காற்றை தூய்மைப்படுத்தும்.

7. மரத்தின் தாயகம் : இந்தியா.
8. ஏற்ற மண் : மணல்சாரி படுகைமண்.
9. நடவுப் பொருள் : விதை, நாற்று, வேர்க்குச்சி.
10. மரத்தின் உயரம் : 18 மீட்டர்.
பூமி ஞானசூரியன், செல்பேசி : + 91-8526195370
No comments:
Post a Comment