Sunday, October 1, 2017

பீநாறி - எண்ணெய்வித்து மரம் - PINAARI - TREE OF OILSEEDS


ஆரஞ்சு சிவப்பு நிற பூக்கள்

 

 

 

 

 

 

 

பீநாறி  -

எண்ணெய்வித்து  மரம்

PINAARI -

TREE

OILSEEDS


STERCULIA FOETIDA


WILD ALMOND TREE

பீநாறி மரம்


  
(கிரேக்க நாட்டில் எருவுக்கும் உரத்திற்குமான  கடவுள் பெயர் ‘ஸ்டெர்குலினஸ்’. பீநாறி மரத்திற்கான தாவரவியல் பெயரின் முதல் பகுதி ஸ்டெர்குலியா அந்த கடவுளைக் குறிப்பது)

1. மரத்தின் தமிழ்ப் பெயர் : பீநாறி மரம்.
2. தாவரவியல் பெயர் :  STERCULIA FOETIDA
3. பொதுப்பெயர் ஃ ஆங்கிலப்பெயர் :  (WILD ALMOND TREE)
4. தாவரக்குடும்பம் :   மால்வேசியே
5. மரத்தின் வகை :  பயோடீசல் மரம்.

6. மரத்தின் பயன்கள் :
7. தழை : விளை நிலங்களுக்கு தழை உரமாகும்  
8. பட்டை : டேனின் நிறைந்தது தோல்பதனிடலாம். 
9. பூக்கள் : வசந்தகாலத்  தேனீக்களுக்கு ஆரஞ்சு சிவப்பு  மலர்க் கோப்பைகளில் தேன் தரும் பூக்களைத் தரும்.
10. விதை : எண்ணெய் எடுக்கலாம் : பதப்படுத்தி தாளிக்கலாம், பொரிக்கலாம்,  வறுக்கலாம்;  சோப்பு செய்யலாம்; இந்த எண்ணெயெல்லாம் மார்க்கெட்டில் வந்து இறங்கினால் எண்ணெய் விலை குறைந்து மனதில் மகிழ்ச்சி பொங்கலாம்; சூரியகாந்தி சோயாமொச்சை மாதிரி பயோ டீசல் தயரித்து கார் ஓட்டலாம்.
கனியும் விதையும்

11. பிசின் :  கோந்து தயாரிக்கலாம்.
12. மரம் : கம்பங்கள் தூண்கள், கட்டிட சாமான்கள், படகுகள், துடுப்புகள்,  பெட்டிகள் செய்ய மரம் தரும்.
13. இலைகள், கிளைகள், மரம் : அடுப்பெரிக்க விறகாகும் :வீசும் காற்றின் வேகத்தை தடுத்து, தூசியினை வடிகட்டி காற்றை தூய்மைப்படுத்தும்  மரம்.

14. மரத்தின் தாயகம் : இந்தியா.  
15. ஏற்ற மண் :  மணல்சாரி,   செவ்வல்மண்.
10. நடவுப் பொருள் : விதை,  நாற்று,  வேர்க்குச்சி.
11. மரத்தின் உயரம் :   25  மீட்டர்.

பூமி ஞானசூரியன், செல்பேசி: +918526195370


No comments:

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...