பறங்கிச் சாம்பிராணி -
பெயிண்ட் வார்னிஷ் மரம்
PARANGI SAMBIRANI
BUSINESS TREE OF
PAINT & VARNISH
1. மரத்தின் தமிழ்ப்
பெயர் : பறங்கிச் சாம்பிராணி
2. தாவரவியல்
பெயர் : BOSWELLIA SERRATA
3. பொதுப்பெயர் ஃ
ஆங்கிலப்பெயர் : INDIAN FRANKINCENCE
4. தாவரக்குடும்பம்
: பர்ஸரேசி (BURCERACEAE)
5. மரத்தின் வகை :
வாணிப மரம்.
சிறப்பு: டர்பென்டைனுக்கு சமமான தைலம் தரும்.
6. மரத்தின் பயன்கள்
:
தழை : விளை
நிலங்களுக்கு தழை உரமாகும்; நீராவி மூலம்
நறுமணத் தைலம் வடித்தெடுக்கலாம்.
மரம் :
மரத்திலிருந்து கசியும் மரப் பாலே பறங்கிச்
சாம்பிராணியாகிறது; எண்ணெய், பெயிண்ட் மற்றும் வார்னிஷ் செய்ய, சாம்பிராணி பிரித்தெடுக்கப்பட்ட மரப்பால், உதவும். காகிதம் தயாரிக்க மரக்குழம்பு
தரும் மரம்;
இலைகள், கிளைகள், மரம் : அடுப்பெரிக்க விறகு தரும்.
சுற்றுச் சூழல் :
வீசும் காற்றின் வேகத்தை தடுத்து, தூசியினை
வடிகட்டி காற்றை தூய்மைப்படுத்தும்.
7. மரத்தின் தாயகம்
: இந்தியா
8. ஏற்ற மண் :
மணல்சாரி மலை மண்;
9. நடவுப் பொருள் :
விதை, நாற்று, வேர்க்குச்சி
10. மரத்தின் உயரம்
: 6 - 12
மீட்டர்.
பூமி ஞானசூரியன், செல்பேசி: +918526195370
No comments:
Post a Comment