நெல்லி மரம் -
மனித ஆயுளை
நீட்டிக்கும் மரம்
NELLI - ENHANCES
MENS' LIFESPAN
1. மரத்தின் தமிழ்ப்
பெயர் : நெல்லி
2. தாவரவியல் பெயர்
: EMBLICA OFFICINALIS
3. பொதுப்பெயர் ஃ
ஆங்கிலப்பெயர் : GOOSE BERRY / AMLA
4. தாவரக்குடும்பம்
: யூபார்பியேசி (EUPHORBIACEAE)
5. மரத்தின் வகை
: பழ மரம்.
6. மரத்தின் பயன்கள்
:
தழை : விளை
நிலங்களுக்கு தழை உரமாகும்; கால்நடைகளுக்கு தீவனமாகும்.
பட்டை : டேனின் நிறைந்தது; தோல்பதனிட பட்டைத்
தரும்.
கனி ; வைட்டமின்
' சி " க்கு
பெருமை வாய்ந்தது; புளிப்பு சுவை
கூட்டும் கனிகளைத்; தரும் மரம்; பிரடிலமான ஊறுகாய்; தேனில் ஊறவைத்து இனிப்பு தயாரிக்கலாம்.
மரம் : சிவப்பு
நிற மரம்; வேளாண் கருவிகள்
செய்ய, மேஜை நாற்காலிகள், தூண்கள் செய்ய,
காகிதம்
தயாரிக்கலாம்.
தழை, கிளைகள், மரம் :
அடுப்பெரிக்க அற்புதமான விறகாகும.;
சுற்றுச் சூழல் : வீசும் காற்றின் வேகத்தைத்
தடுக்கும், தூசியினை
வடிகட்டும் மற்றும் காற்றை தூய்மைப்படுத்தும்.
சிறப்பு
செய்திகள் : ஆசி வழங்கி அதியமானுக்கு ஒளவையார் தந்த கனி என்று பெருமை உடைய கனி மரம்.
இலைகள் , கிளைகள், மரம் : அடுப்பெரிக்க அரிய விறகுகள்.
7. மரத்தின் தாயகம் :
இந்தியா
8. ஏற்ற மண் : ஈரமான வளமுள்ள மணல்சாரி மண்
9. நடவுப் பொருள்
: விதை, நாற்று,
வேர்க்குச்சி
10. மரத்தின்
உயரம் : 8 -- 12 மீட்டர்.
பூமி ஞானசூரியன், செல்பேசி: +918526195370
No comments:
Post a Comment