Sunday, September 17, 2017

நீர்க் கடம்பை - ஓடைக்கரைகளுக்கு உகந்த மரம் - NEERKADAMBAI - STREAM SIDE TREE





நீர்க் கடம்பை - 
ஓடைக்கரைகளுக்கு
உகந்த மரம்

NEERKADAMBAI - 
STREAM SIDE
TREE


1. மரத்தின் தமிழ்ப் பெயர் :-- நீர்க் கடம்பை
2. தாவரவியல் பெயர் :--  MYTRAGYNA PARVIFLORA
3. பொதுப்பெயர் ஃ ஆங்கிலப்பெயர் :--  KAIM
4. தாவரக்குடும்பம் :--  ரூடேசி (RUTACEAE) 
5. மரத்தின் வகை :--   வறண்ட பகுதி  மரம்.

6. மரத்தின் பயன்கள் :--
தழை : கால்நடைகளுக்கு தீவனமாகும்.    
பட்டை : டேனின் நிறைந்தது; தோல்பதனிடலாம்.
மரம் : கடைசல் வேலைகளுக்கு பயன்படும்; தீக்குச்சிகள், தீப்பெட்டிகள் செய்யலாம்; காகிதம் தயாரிக்க  மரக்குழம்பு தரும்; கணிதவியல் சாதனங்களான, டீஸ்;கொயர், ஸ்கேல், மணிச்சட்டம்,  செய்யவும், சிலேட் பலகை செய்யலாம்; அமிலத்தால் அரிக்கப்படாத பேட்டரி மரப் பெட்டிகள், பீப்பாய்கள் செய்ய ஏற்ற பலகைகள் தரும் மரம்.
இலைகள், கிளைகள், மரம் : அடுப்பெரிக்க விறகு தரும்;;.
சுற்றுச்சூழல் :வீசும் காற்றின் வேகத்தை தடுத்து, தூசியினை வடிகட்டி காற்றை தூய்மைப்படுத்தும்  மரம்.      
சிறப்பு செய்திகள் :காட்டு ஓடைகளின் ஓரமாக அருமையாக வளரும்; அலங்கார அழகு மரம். 
           
7. மரத்தின் தாயகம் :  இந்தியா  
8. ஏற்ற மண் :  கரிசல் மண், மலையடிவாரம், காட்டோடைக் கரையோரம்.
9. நடவுப் பொருள் : விதை,  நாற்று,  வேர்க்குச்சி
10. மரத்தின் உயரம் :   25 -- 30  மீட்டர்.

பூமி ஞானசூரியன், செல்பேசி: +918526195370


No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...