Sunday, September 17, 2017

நரிவிளா (மஹா வில்வம்) - கிராமத்து மரச்சாமான் மரம் - NARIVILA - VILLAGE CARPENTRY TREE





நரிவிளா (மஹா வில்வம்) - கிராமத்து மரச்சாமான் மரம்
NARIVILA - VILLAGE CARPENTRY TREE

 
1. மரத்தின் தமிழ்ப் பெயர் : நரிவிளா
2. தாவரவியல் பெயர் :  NARINGI CRENULATA
3. பொதுப்பெயர் ஃ ஆங்கிலப்பெயர் :  NARIVILA
4. தாவரக்குடும்பம் :  ரூபேசி   (RUBIACEAE)
5. மரத்தின் வகை :  வறண்டநிலத் தாவரம்

6. மரத்தின் பயன்கள் :
தழை : விளை நிலங்களுக்கு தழை உரமாகும்.  
பட்டை : தோல் பதனிட டேனின் தரும்.
கனி : மீன், இறைச்சி  சமைக்க புளிப்பு சுவை கூட்டும்: கடைசல் வேலைகள், வண்டி அச்சுக்கள்,    உலக்கைகள், சுத்தியல் கைப்பிடிகள், கைத்தடிகள், பெட்டிகள்,  சிற்ப வேலைகள், கதவுகள், நிலைகள் மற்றும் காகிதம் தயாரிக்க  மரக்குழம்பும் தரும்; எலுமிச்சைக்கு ஒட்டு கட்ட தாய்ச் செடி தரும்.
இலைகள், கிளைகள், மரம் : அடுப்பெரிக்க விறகாகும்.
சுற்றுச்சூழல் : வீசும் காற்றின் வேகத்தை தடுத்து, மாசு மற்றும் தூசியை வடிகட்டி காற்றைத் தூய்மைப்படுத்தும்.


7. மரத்தின் தாயகம் :  இந்தியா  
8. ஏற்ற மண் : வறண்ட பகுதி
9. நடவுப் பொருள் : விதை,  நாற்று,  வேர்க்குச்சி
10. மரத்தின் உயரம் :  3 - 8  மீட்டர்.

சிறப்பு: மீன் மற்றும் இறைச்சியை பக்குவம் செய்ய அரபு நாடுகளுக்கு ஏற்டுமதி ஆனது ; மஹா வில்வம் என்ற பெயர் கொண்டது இது.
பூமி ஞானசூரியன், செல்பேசி: +918526195370




No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...