Sunday, September 17, 2017

நரி வேங்கை - கிராமத்து மரச்சாமான் மரம் - NARIVENGAI - VILLAGE CARPENTRY TREE


நரி வேங்கை - 
கிராமத்து 
மரச்சாமான் மரம்


NARIVENGAI -VILLAGE CARPENTRY TREE



1. மரத்தின் தமிழ்ப் பெயர் : நரிவேங்கை
2. தாவரவியல் பெயர் :  OUGEINIA OOJEINENSIS
3. பொதுப்பெயர் / ஆங்கிலப்பெயர் :  SANDAN TREE
4. தாவரக்குடும்பம் :  ரூடேசி (RUTACEAE)
5. மரத்தின் வகை :  அலங்கார அழகு மரம்

6. மரத்தின் பயன்கள் :
  தழை : கால்நடைகளுக்கு தீவனமாகும்.  
  பட்டை : தோல்பதனிட டேனின்  தரும்.
  பூக்கள் : ஏழை மக்களுக்கு உணவாகும் பூக்களைத் தரும்.
  மரப்பட்டை : பட்டையிலிருந்து  நார் உரிக்க  நார் தரும்.
  பிசின் : கோந்து தரும்;.
  மரம்:  மாட்டு வண்;டிகள் வடம், சக்கரம், சக்கரத்தின் ஆரக்கால்கள்,       அழகானபெட்டிகள், கதவு , நிலைகள், உத்திரம், தூண், கட்டிடசாமான்கள்,   காகிதம் தயாரிக்க  மரக்குழம்பு தரும். 
இலைகள், கிளைகள், மரம் : அடுப்பெரிக்க விறகாகும்.
சுற்றுச் சூழல் : வீசும் காற்றின் வேகத்தை தடுத்து, மாசையும்    தூசியையும்  வடிகட்டி காற்றை தூய்மைப்படுத்தும். 
 
சிறப்பு செய்திகள் :
மலைச்சரிவுகளில்  வேறெந்த மரமும் வளர இயலாத  சூழ்நிலையிலும்கூட   நரிவேங்கை வளர்ந்து நிலச்சரிவைத் தடுக்கும்; தேக்கிற்கு இணையானது; சுற்றுப்புறத்திற்கு அழகூட்டும் அலங்கார அழகு மரம்.

7. மரத்தின் தாயகம் :  இந்தியா.
8. ஏற்ற மண் :  படுகை நிலங்கள், சரளைப்பகுதி, கடலோரபகுதி.
9. நடவுப் பொருள் : விதை,  நாற்று,  வேர்க்குச்சி.
10. மரத்தின் உயரம் : 10 -- 12  மீட்டர்.
பூமி ஞானசூரியன், செல்பேசி: +918526195370


No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...