வித்தியாசமான
உருவங்களில்
தோன்றும் நாரிலதா
ஒரு ஆர்கிட் பூ
NARILATHA ORCHID
WITH UNIQUE
BEAUTY
கொஞ்ச நாட்களாக நாரிலதா என்னும் பெயரில் இந்தப் பூப் படம் வாட்சப்பில் சுற்றி வருகிறது. ஆனால் நாரிலதா என்ற பெயரில் இன்னும் நிறையப் பூக்களின் படங்கள் நிர்வாணமான பெண்கள் வடிவில் வெளியிடப்பட்டுள்ளன. இது ஃபோட்டோ ஷாப்பில் உருவாக்கப்பட்ட படம் என்றும் சிலர் கூறுகிறார்கள்.
இலங்கையில் இதன் பெயர் லியாதாரா மாலா (LIYATHARA MALA); என்றும் தாய்லாந்தில் நாரிபோல் (NAREPOLE) என்றும் இதனைச் சொல்லுகிறார்கள்.
DRACULA SIMIA |
ஆனால் இது போன்ற வித்தியாசமான மனிதர்கள், பிராணிகள், பறவைகள் போன்ற உருவத்துடன் கூடிய பல ஆர்க்கிட் பூக்கள் உள்ளன. ஒரு காலத்தில் இவற்றைப் பார்த்த கிரேக்கர்கள் , இவை நோய்களைக் குணப் படுத்தும் என்று நம்பி இதில் ஆர்வம் காட்டினர்.
இந்த ஆர்க்கிட் பூக்கள் ஆர்கிடேசி (ORCHIDACEAE) என்னும் தாவர குடும்பத்தைச் சேர்ந்தவை; இதில் 17000 வகைகள் உள்ளன் இதில் இந்தியவில் இருப்பவை மட்டுமே 1300; இந்தியாவில் அதிக ஆர்க்கிட்களைக் கொண்ட மாநிலம் அருணாச்சலப் பிரதேசம், இரண்டாம் இடத்தில் உள்ளது சிக்கீம்.
ராஜஸ்தானின் வறண்ட பகுதி தவிர்த்து இந்தியா முழுக்க ஆர்க்கிட் பூக்கள் உள்ளன.
ORCHIS SIMIA |
நம் எல்லோருக்கும் தெரிந்தது ஆர்கிட் வேனில்லா . வேனில்லா ஐஸ்கிரீமுக்கு அந்த மணம் தரும் வேனில்லா ஒரு ஆர்க்கிட்தான்; முதன் முதலாக வேனில்லாவின் மணத்தைப் பயன்படுத்தி சாக்லட் பானம் தயாரித்து சுவைத்தவர்கள் மெக்சிகோ நாட்டினர் கி.பி. 1510 வாக்கில்.
ஆர்கிட் பூக்களின் சிறப்பு அவற்றின் வித்தியாசமான வடிவம்; பூக்கள் சுலபத்தில் வாடாது; பறித்து வைத்த பின்னால் கூட பல வாரம் முதல் சில மாதங்கள் வரை வாடவே வாடாது.
ORCHIS PURPUREA |
உங்கள் பார்வைக்காக கீழ்கண்ட ஆர்கிட் பூக்களின் படங்களைத் தந்துள்ளேன்.
1. வேனிலா பிளானிபோலியா (VANILLA PLANIFOLIA) 2. ஆர்கிட்ஸ் சிமியா (ORCHIDS SIMIA) 3. டிராகுலா சிமியா (DRACULA SIMIA) 4. ஆர்கிட்ஸ் பர்ப்புரியா (ORCHIDS PURPUREA) 5. ஓபிஸ் கோடஸ் (OPHYS GODES)
OPHYS OPHYS |
பூமி ஞானசூரியன், செல்பேசி: +918526195370
VANILLA PLANIFOLIA |
No comments:
Post a Comment