Monday, September 18, 2017

மாவிலங்கு - ஆயுர்வேத இந்திய மரம் - MAAVILANGU - AYURVEDIC MEDICINAL TREE



                                                          மாவிலங்கு - 
ஆயுர்வேத 
இந்திய மரம்

MAAVILANGU -  AYURVEDIC
MEDICINAL TREE 


1. மரத்தின் தமிழ்ப் பெயர் : மாவிலங்கு
2. தாவரவியல் பெயர்  :  CRATEVA MAGNA
3. பொதுப்பெயர் ஃ ஆங்கிலப்பெயர் : THE SACRED BARNA
4. தாவரக்குடும்பம்  :  கப்பரிடேசி  (CAPRITACEAE)
5. மரத்தின் வகை  : மருத்துவ மரம் 
  
6. மரத்தின் பயன்கள்  :
தழை : விளை நிலங்களுக்கு தழை உரமாகும,;   கால்நடைகளுக்கு தீவனமாகும்.
 கனி : உண்ணும் பழம் தரும் மரம்.
 பட்டை : டேனின் நிறைந்தது ; தோல்பதனிடலாம்.  
மரம் : பீப்பாய்கள், சீப்புகள், எழுது பலகைகள், தட்டு   முட்டு சாமான்கள், தீப்பெட்டிகள், தீக்குச்சிகள்,   தயாரிக்கலாம்;  காகிதக்குழம்பு தயாரிக்க மரம் தரும் . 
பூக்கள் : தேன் தரும்; பசுமையான தழையமைப்புடன்   வெண்ணிற மலர்களால், மரமெல்லாம் நிறைந்து சுற்றுப்புறத்திற்கு அழகூட்டும் மரம். இலைகள், கிளைகள், மரம் : அடுப்பெரிக்க விறகாகும்.
சுற்றுச்சூழல் : வீசும் காற்றின் வேகத்தை தடுத்து, தூசியினை வடிகட்டி காற்றை தூய்மைப்படுத்தும்.

சிறப்பு :

ஆயுர்வேத மருத்துவத்தின் தந்தை சுஸ்ருதர்தான் மாவிலங்கு மரத்தின்  மருத்துவத் தன்மையை   முதன்முதலாகக்    கண்டறிந்து எழுதியவர்.           

7. மரத்தின் தாயகம்  :  இந்தியா 
8. ஏற்ற மண்  :  மணல்சாரி  மலை மண்
9. நடவுப் பொருள் : விதை,  நாற்று,  வேர்க்குச்சி
10. மரத்தின் உயரம்  :  10 -  14 மீட்டர்.

பூமி ஞானசூரியன்,செல்பேசி: +918526195370

No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...