POOVAN TREE WITH YOUNG LEAVES
|
குசும் எண்ணெய்
வியபாரத்திற்கு
உதவும் மரம்
KUSUM TREE
CAN HELP
OIL BUSINESS
குசும் மரத்தின் இன்னொரு பெயர் பூவன்.
SCHLEICHERA
OLEOSA
கால்நடைகளுக்கு தீவனமாகும் (GOOD FODDER).
குசும் எண்ணெய் தருகிறது ( GIVES NON EDIBLE OIL)
தலையில் பூசிக் கொள்ளலாம் (CAN BE A COSMETICS)
சோப்பு தயாரிக்கலாம் (CAN BE USED FOR SOAP MAKING)
கட்டிட சாமான்கள் செய்யலாம் (AVERAGE TIMBER WOOD)
காற்றை தூய்மைப்படுத்தும் (CAN CONTROL POLLUTION)
1. மரத்தின் தமிழ்ப் பெயர் : குசும், பூவன் மரம்
2. தாவரவியல் பெயர் : SCHLEICHERA OLEOSA
3. பொதுப்பெயர் ஃ ஆங்கிலப்பெயர் : MALAY LAC TREE
4. தாவரக்குடும்பம் : சேபிண்டேசி (SAPINDACEAE)
5. மரத்தின் வகை : அலங்கார அழகுமரம்.
6. மரத்தின் பயன்கள் :
தழை, கால்நடைகளுக்கு தீவனமாகும்; இதன் இளம் இலைகள் பளிச்சென்ற சிவப்பு நிறத்தில் இருக்கும்; இலைகளை பச்சையாகவோ சமைத்தோ உண்ணலாம்.
பட்டை : டேனின் நிறைந்தது; தோல்பதனிடலாம்.
கனி : உண்ணும் கனி தரும்.
காய் : ஊறுகாய் போடலாம்.
விதை : குசும் எண்ணெய் தருகிறது; தலையில் பூசிக் கொள்ளலாம்; சோப்பு தயாரிக்கலாம்; ஒரு கிலோ விதையில் 1400 முதல் 2200 விதைகள் இருக்கும்.
மரம் : எண்ணெய் செக்கு, கரும்பு மர ஆலை, மாட்டு வண்டிகள், உலக்கை, உரல்கள், வேளாண் கருவிகள், கட்டிட சாமான்கள், ஆகியவை செய்ய மரம் தரும் மரம். காகிதம் தயாரிக்கலாம்; இலைகள், கிளைகள், மற்றும் மரம் அடுப்பெரிக்க உதவும்; வீசும் காற்றின் வேகத்தை தடுத்து, தூசியினை வடிகட்டி காற்றை தூய்மைப்படுத்தும்.

POOVAN TREE |
7. மரத்தின் தாயகம் : இந்தியா
8. ஏற்ற மண் : மண் ஆழம் உடைய, அமிலத் தன்மை உள்ள மண், வடிகால் வசதி கொண்ட பாறைப்பகுதி, மற்றும் சரளை மண் கண்டம்.
9. நடவுப் பொருள் : விதை, வேர்ச்செடிகள்.
10.மரத்தின் உயரம் : 40 மீட்டர்.
பூமி ஞானசூரியன், செல்பேசி : +918526195370
No comments:
Post a Comment